search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்
    X

    மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்

    • மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது
    • இன்று முதல் 27-ந் தேதி வரை நடைபெறுகிறது

    கரூர்:

    அரவக்குறிச்சி, புகழூர் வட்டங்களில் மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம் நடைபெறுவதாக கரூர் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

    கரூர் மாவட்டம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2 மற்றும் மாற்றுத்திறனாளி களுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் திட்டத்தின் கீழ் அரவக்குறிச்சி மற்றும் புகழூர் வட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்ட உள்ளது.

    இன்று பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையிலும், நாளை வெங்கிடாபுரத்தில் உள்ள சின்னத்தாராபுரம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், நாளை மறுநாள் ஈசநத்தம் நவீன் திருமண மண்டபம், 26-ந் தேதி க.பரமத்தி அரசு மேல்நிலைப் பள்ளி, ஆக. 27-ந் தேதி குப்பக்கவுண் டன் வலசு சமுதாயக் கூடம் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

    மாற்றுத்திறனாளிகள் நபர்கள் தங்களது இருப்பிடத்திற்கு அருகில் உள்ள முகாமில் கலந்து கொண்டு மருத்துவச்சான்று பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ள ப்படுகிறது. மேலும் மாற்றுத் திறனாளிகள் தங்களது ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு போட்டோ- 4 ஆகியவற்றுடன் இம்முகாமில் கலந்து கொண்டு உதவி உபகரணங்கள், கடனுதவி, திறன் பயிற்சி, பசுமை வீடு வழங்கும் திட்டம், பிற உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பம் செய்யுமாறு தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×