என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஆடுகளை கடிக்கும் நாய்களை அப்புறப்படுத்தகோரி கலெக்டரிடம் பொது மக்கள் மனு
  X

  ஆடுகளை கடிக்கும் நாய்களை அப்புறப்படுத்தகோரி கலெக்டரிடம் பொது மக்கள் மனு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பாகநத்தம் நொச்சிப்பட்டி, முஷ்டக்கிணத்துப்பட்டி, ஊத்துக்கரைப்பட்டி, ஆவுத்திபாளையம் செம்மடையைச் சேர்ந்த 7 விவசாயிகளுக்கு சொந்தமான ஆடுகளை வெறிநாய்கள் கடித்ததில் 27 ஆடுகள் உயிரிழந்தன.
  • நாய்கள் பல கோழிகளையும் பிடித்துள்ளன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி செல்ல முடியாத நிலை உள்ளது.

  கரூர்:

  கரூர் மாவட்டம் பாகநத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 45க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆடுகளை கடித்து கொல்லும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்தக்கோரி ஆட்சியரிடம் மனு அளிக்க ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். ஆட்சியர் இல்லாததால் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன் நாய் தொல்லையைக் கண்டித்து பதாகை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  அதன்பின் ஆட்சியரிடம் மனு அளித்தனர். மனுவில், பாகநத்தம் நொச்சிப்பட்டி, முஷ்டக்கிணத்துப்பட்டி, ஊத்துக்கரைப்பட்டி, ஆவுத்திபாளையம் செம்மடையைச் சேர்ந்த 7 விவசாயிகளுக்கு சொந்தமான ஆடுகளை வெறிநாய்கள் கடித்ததில் 27 ஆடுகள் உயிரிழந்தன.

  மேலும் 28 ஆடுகள் காயமடைந்துள்ளன. மேலும் பல கோழிகளையும் பிடித்துள்ளன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே நாய்களை அப்புறப்படுத்த ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தனர்.

  Next Story
  ×