search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ்நாடு அரசு  அனைத்து துறை சங்கங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    தமிழ்நாடு அரசு அனைத்து துறை சங்கங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    • தமிழ்நாடு அரசு அனைத்து துறை சங்கங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

    கரூர்:

    ஜன. 1ம் தேதி முதல் வழங்கப்பட வேண்டிய 3 சதவீத அகவிலைப்படி உயர்வை ரொக்கமாக வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை சங்கங்களின் கூட்டு போராட்டக்குழு சார்பில் மாவட்ட அமைப்பாளர் ஆர்.தாமோதரன் தலைமையில் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க மாநில தலைவர் ஆர்.ராஜசேகர் தொடக்க உரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில துணைத்தலைவர் பி.கிருஷ்ணசாமி சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.சடையாண்டி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் கே.கருணாகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட இணை அமைப்பாளர் கே.ஞானசேகரன் வரவேற்றார்.

    தி.மு.க.வின் தேர்தல் கால வாக்குறுதிப்படி தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவேண்டும். முடக்கப்பட்ட சரண்டர் பணபலன்களை திரும்ப வழங்கவேண்டும். முன்னாள் மாநிலத்தலைவர் மு.சுப்பிரமணியனின் தற்காலிக பணி நீக்க உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட 22 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டன.

    Next Story
    ×