search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவிரியில் அதிகளவு நீர் திறக்க வாய்ப்பு - காவிரி கரையோர மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
    X

    காவிரியில் அதிகளவு நீர் திறக்க வாய்ப்பு - காவிரி கரையோர மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

    • காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் சிறுவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட எவரும் நீரில் இறங்கி குளிப்பதையோ, மீன் பிடிப்பதையோ, கால்நடைகளை குளிப்பாட்டுவதையோ, புகைபடங்கள் எடுப்பதையோ, முற்றிலும் தவிர்க்கவேண்டும்
    • வெள்ள நீர் புகும் அபாயமுள்ள காவிரி கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றி நிவாரண முகாம்களில் தங்க வைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

    கரூர், ஜூலை.17-

    காவிரியில் அதிகளவு நீர் திறக்க வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் அறிவுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணியளவில் 119.29 அடியாக உயர்ந்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக அடுத்த ஓரிரு நாட்களுக்குள் அதிகபட்ச கொள்ளளவான 120 அடியை எட்டும்.

    மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் 50,000 கனஅடி முதல் 1 லட்சம் கனஅடி வரை எந்த நேரத்திலும் திறந்துவிடப்படலாம். திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் எனவும்,

    எனவே, காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் சிறுவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட எவரும் நீரில் இறங்கி குளிப்பதையோ, மீன் பிடிப்பதையோ, கால்நடைகளை குளிப்பாட்டுவதையோ, புகைபடங்கள் எடுப்பதையோ, முற்றிலும் தவிர்க்கவேண்டும்.

    வெள்ள நீர் புகும் அபாயமுள்ள காவிரி கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றி நிவாரண முகாம்களில் தங்க வைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், மேலும், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளின் சார்பிலும், தண்டோரா, ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×