search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தோட்டியோடு சிவன் கோவில் கொள்ளை - கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை
    X

    தோட்டியோடு சிவன் கோவில் கொள்ளை - கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை

    • சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை
    • ஐம்பொன் சிலை என வெண்கல சிலையை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருக்கலாம் என தெரிகிறது

    கன்னியாகுமரி :

    இரணியல் அருகே தோட்டியோட்டில் சுண்டான்குளத்தங்கரை பகுதியில் ஸ்ரீ சம்பு மகாதேவர் திருக்கோவில் உள்ளது. பழமையான இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல பூஜைகள் முடித்து நடையை சாத்தி விட்டு பூசாரி சென்றுவிட்டார்.

    இந்தநிலையில் நேற்று காலை பூஜைகள் செய்ய பூசாரி வந்தபோது கோவிலில் இருந்த சிவன் அம்பாள் வென்கல சிலையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பூசாரி கோவில் நிர்வாகி வழக்கறிஞர் சிவகுமாருக்கு தகவல் கொடுத்தார். அவர் வந்து பார்த்த போது கோவிலில் இருந்த குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்கள் இருந்தது.

    ஆனால் மர்ம நபர்கள் சுமார் முக்கால் அடி உயரம் கொண்ட வெண்கல சாமி சிலையை மட்டும் எடுத்துச் சென்றது தெரிய வந்தது. ஐம்பொன் சிலை என வெண்கல சிலையை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருக்கலாம் என தெரிகிறது. இதன் மதிப்பு சுமார் ரூ.24 ஆயிரம் இருக்கும். இது குறித்து சிவகுமார் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

    Next Story
    ×