search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கடையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.57 லட்சம் மோசடி
    X

    புதுக்கடையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.57 லட்சம் மோசடி

    • 5 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது
    • மத்திய அரசின் வருமான வரித்துறை, ரெயில்வே துறைகளில் வேலைவாய்ப்புகள்

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் கடை யாலுமூடு பகுதி சிற்றாற்றின் கரையை சேர்ந்தவர் ரசல்ராஜ் (வயது 49). இவருக்கும் புதுக்கடை அருகே உள்ள மாராயபுரம் பகுதி ஜெயன் பிரபு (39) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜெயன் பிரபு, தனக்கு மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் அரசி யல்வாதிகளுடன் தொடர்பு உள்ளதாக கூறியுள்ளார்.

    மேலும் மத்திய அரசின் வருமான வரித்துறை, ரெயில்வே துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளதாகவும், சம்மந்தபட்ட அதிகாரிகள், அரசியல்வா திகள் உதவியுடன் வேண்டியவர்களுக்கு உடனடி வேலை வாங்கி கொடுக்கலாம் எனவும் கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய ரசல்ராஜ், தனக்கு வேண்டியவர்களான கருங்கல் பகுதியை சேர்ந்த ஸ்டெம், பாலப்பள்ளம் பகுதி டெய்சி செல்லத்துரை, திக்கணம்கோடு எபிரேம், தொழிக்கோடு பகுதியை சேர்ந்த அருண்குமார் ஆகியோரை ஜெயன் பிரபுவுக்கு அறிமுகம் செய்துள்ளார்.

    இதையடுத்து ஜெயன் பிரபு, சென்னையை சேர்ந்த சாய் பிரசாத், இன்பா, ஜெயன் பிரபுவின் சகோதரி ரதிமீனா(26), தாய் ரத்தினபாய் ஆகியோரையும் அறிமுகம் செய்து வைத்து, அவர்களுக்கு உடனடி வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.56லட்சத்து 97ஆயிரத்து 100 பெற்றுள்ள னர்.

    இதையடுத்து போலியான மத்திய அரசு வேலை உத்தரவை தயார் செய்து எபிரேம் என்பவருக்கு கான்பூர் ரெயில்வேயிலும், டெய்சி செல்லதுரை, அருண்குமார் ஆகியோருக்கு ஐதராபாத் வருமான வரித்துறையிலும் வேலை கிடைத்ததாக கூறியுள்ளனர். அத்துடன் சம்மந்தபட்ட இடங்களில் ஏதோ அலுவலகத்தில் பணியமர்த்தி உள்ளனர். மேலும் அவர்களுக்கு 2 மாத சம்பளமும் கொடுத்துள்ளனர்.

    அதன் பின்னர் வேலையில் இருந்து நீக்கிவிட்டதாக கூறி திருப்பி அனுப்பியிருக்கின்ற னர். இதனால் சந்தேகமடைந்த பாதிக்கபட்ட நபர்கள் விசாரித்ததில், போலி அரசு ஆணை தயார் செய்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை தெரிந்துகொண்டனர்.

    இதையடுத்து எபிரேம், டெய்சி செல்லத்துரை, அருண்குமார் ஆகியோர் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்திடம் புகார் செய்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் புதுக்கடை போலீசார் நடத்திய விசாரணை நடத்தினர்.

    அதில் மத்திய அரசு வேலை உத்தரவை போலியாக தயார் செய்ததும், போலியான இடத்தில் வேலைக்கு அமர்த்தியதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் ஜெயன் பிரபு, சாய் பிரசாத், இன்பா, ரதி மீனா, ரத்தின பாய் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிந்தனர்.

    அவர்களில் ஜெயன் பிரபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×