search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு
    X

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு

    • பேச்சிப்பாறை 25 அடியை எட்டியது
    • நேற்று இரவு அணை பகுதிகளிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை வெளுத்து வாங்கியது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் வடகிழக்கு, தென்கிழக்கு என இரு பருவ காலங்களில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தை விட 69 சதவீதம் குறை வாகவே பெய்தது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளில் நீர்மட்டம் சரிந்து காணப் பட்டது. பாசன குளங்களி லும் தண்ணீர் குறைவாகவே இருந்தது. அணைகளிலும், பாசன குளங்களிலும் போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் கடைமடை பகுதிகளில் கன்னி பூ சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்தனர்.

    இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு மாத காலமாக பரவலாக மழை பெய்து வருகிறது. மழை நீடித்து வருவதைய டுத்து பாசன குளங்களும், அணைகளும் நிரம்பி வருகின்றன. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணை பகுதிகளில் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று இரவு அணை பகுதிகளிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை வெளுத்து வாங்கியது.

    இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை களுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்தது. இதைய டுத்து அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயரத்தொடங்கியது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 2½ அடியும் பெருஞ் சாணி அணை நீர்மட்டம் 5 அடியும் உயர்ந்துள்ளது.

    ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பாசன குளங்களும் நிரம்பி வருகின்றன. 600-க்கும் மேற்பட்ட பாசன குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. பேச்சிப் பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 25 அடியை எட்டியது. அணைக்கு 2409 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 330 கன அடி தண்ணீர் வெளியேற்றப்ப டுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 47.40 அடியாக இருந்தது. அணைக்கு 1820 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றார்-1 அணை நீர்மட்டம் 12.36 அடியாக உள்ளது. அணைக்கு 284 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யிலிருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது. சிற்றார்-2 அணை நீர்மட்டம் 12.46 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 9.30 அடியாகவும், மாம் பழத்துறையாறு அணை நீர்மட்டம் 4.92 அடியாகவும் முக்கடல் அணை நீர்மட்டம் மைனஸ் 19.50 அடியாக உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- பேச்சிப்பாறை 67.2, பெருஞ்சாணி 50.8, சிற்றார் 1-40.4, சிற்றார் 2-26.8, பூதப்பாண்டி 32.6, களியல் 40.4, கன்னிமார் 42.2, கொட்டாரம் 28.4, குழித்துறை 44.8, மயிலாடி 36.2, நாகர்கோவில் 24.2, புத்தன் அணை 48.6, சுருளோடு 48.2, தக்கலை 37.2, குளச்சல் 34.6, இரணியல் 33, பாலமோர் 68.4, மாம்பழத்துறையாறு 35, திற்பரப்பு 47.6, ஆரல்வாய்மொழி 24.2, கோழிபோர்விளை 52.2, அடையாமடை 61.3, குருந்தன்கோடு 14.6, முள்ளங்கினாவிளை 41.6, ஆணைக்கிடங்கு 32.4, முக்கடல் 39.2.

    Next Story
    ×