search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் அதிக குழந்தைகளை ஏற்றி வந்த 3 ஆட்டோக்களுக்கு அபராதம்
    X

    நாகர்கோவிலில் அதிக குழந்தைகளை ஏற்றி வந்த 3 ஆட்டோக்களுக்கு அபராதம்

    • 2-வது முறை சிக்கினால் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை
    • ஆட்டோ டிரைவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

    நாகர்கோவில் :

    பள்ளிகளுக்கு ஆட்டோக்களில் அதிக குழந்தைகளை ஏற்றி வரக்கூடாது. அவ்வாறு ஏற்றி வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே ஆட்டோ டிரைவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

    இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 5-ம் வகுப்புகள் வரை இன்று திறக்கப்பட்டது. இதையடுத்து பள்ளிகளுக்கு வந்த மாணவ-மாணவிகள் ஆட்டோக்களில் அழைத்து வரப்பட்டனர். நாகர்கோவிலில் உள்ள பள்ளிக்கூடங்கள் முன்பு போக்குவரத்து போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் கேப் ரோட்டில் உள்ள பள்ளி முன்பு சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆட்டோக்களில் அதிக குழந்தைகளை ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆட்டோக்களை போலீசார் பிடித்தனர். 3 ஆட்டோக்கள் அதிக குழந்தைகளை ஏற்றி வந்தது தெரியவந்தது. அந்த ஆட்டோ டிரைவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து ஆட்டோ டிரைவர்களை எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அருண் கூறுகையில், நாகர்கோவில் நகரில் தினமும் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசார் அதிரடி சோதனை மேற்கொள்ள உள்ளனர். ஆட்டோக்களில் அதிக குழந்தைகளை ஏற்றி வந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஒரே ஆட்டோ 2-வது முறையும் அதிக குழந்தைகளை ஏற்றி வந்து சிக்கினால் அந்த ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டு ஆர்.டி.ஓ.விடம் ஒப்படைக்கபடும். எனவே ஆட்டோ டிரைவர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு குழந்தைகளை ஏற்றி வர வேண்டும் என்றார்.

    Next Story
    ×