search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் இன்று லோக் அதாலத்
    X

    நாகர்கோவிலில் இன்று லோக் அதாலத்

    • வழக்குகளில் தீர்வு காண துண்டு பிரசுரங்கள் விநியோகம்
    • மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தார்

    நாகர்கோவில்:

    நீதிமன்றங்களில் தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க லோக் அதாலத் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

    வருகிற 25,27-ந் தேதி களிலும், அடுத்த மாதம் 8, 11 மற்றும் 13-ந் தேதி களிலும் குமரி மாவட்டத்தில் லோக் அதாலத் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கோர்ட்டுகளில் நிலுவை யில் உள்ள சிவில், காசோலை வழக்குகள், குடும்ப வழக்குகள், குடும்ப பராமரிப்பு வழக்குகள் போன்றவற்றில் வழக்கு தொடர்ந்தவர்களும், வழக்கில் சம்பந்தப்பட்ட வர்களும் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.

    10 நாட்களுக்குள் சம்பந்த ப்பட்ட நீதிமன்றத்திலோ நாகர்கோவிலில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக் குழுவிலோ மனு அளித்து நடைபெற உள்ள லோக் அதாலத் நிகழ்ச்சியில் தீர்வு பெற மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

    நாகர்கோவில் கோர்ட் வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அருள் முருகன் துண்டு பிரசுரங்களை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தலைமை குற்றவியல் நீதிபதி மாய கிருஷ்ணன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான நம்பிராஜன், முதன்மை சார்பு நீதிபதி சொர்ணகுமார், நீதிபதி சிவசக்தி, மாவட்ட உரிமை யியல் நீதிபதி கங்காராஜ், காசோலை வழக்கு விசாரணை நீதிபதி கீர்த்திகா, சார்பு நீதிபதி மற்றும் நீதிபதிகள் அசார் அகமது மற்றும் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×