search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஓமியோபதி மருத்துவ கல்லுரி ஆண்டு விழா
    X

    குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஓமியோபதி மருத்துவ கல்லுரி ஆண்டு விழா

    • அமைச்சர் மனோ தங்கராஜ் குத்து விளக்கேற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்
    • ஓமியோபதி மருத்துவம் நோய்களுக்கு நல்ல தீர்வளிக்கும் மருத்துவமாக உள்ளது.

    கன்னியாகுமரி :

    குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஓமியோபதி மருத்துவ கல்லூரியின் ஆண்டு விழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடை பெற்றது.

    இந் நிகழ்ச்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் குத்து விளக்கேற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள், கலை மற்றும் விளையாட்டுப் போட்டி களில் சிறப்பிடம் பெற்ற மாணவ- மாணவியருக்கு பரிசுகள் வழங்கி அமைச்சர் பேசினார்

    ஒரு நாட்டின் வளர்ச்சியின் குறியீடுகள் கல்வி, மருத்துவமும் ஆகும். இதில் குறிப்பாக ஒரு நாட்டின் ஆரோக்கியம் என்பது அங்கு வாழும் மக்களின் ஆரோக்கியம் என்பது மிக முக்கிய ஆகும். இன்று மருத்துவத் துறை தற்போது வியக்கத்தக்க வகையில் வளர்ச்சி்க் கண்டு வருகிறது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக் தொழில் நுட்பம் போன்றவை பயன்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கும் முறைகளும் வளர்ந்து வருகின்றன. இந்தியாவின் பாரம்பரிய மருத்துவங்கள் புகழ் பெற்றவை. குறிப்பாக மாற்று மருத்துவ முறைகளில் ஒன்றான ஓமியோபதி மருத்துவம் தற்போது இந்தி யாவில் நூற்றுக்க ணக்கான கல்லூரிகளில் பயிற்று விக்கப்படுகிறது.

    என்னுடைய அனுபவத்தில் ஓமியோபதி மருத்துவம் நோய்களுக்கு நல்ல தீர்வளிக்கும் மருத்துவமாக உள்ளது. தற்போது உணவு தானியங்களை விளை விப்பதற்காக உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்துவது பெரும் பிரச்சனையாக உரு வெடுத்து வருகிறது. இதில் விவசாயிகளுக்கு முழுமையான விழிப்புணர்வு ஏற்படவில்லை. காற்று, தண்ணீர், நிலம் என அனைத்திலும் நாம் நஞ்சைக் கலந்து வருகிறோம். இதனால் மனிதர்களுக்கு பல்வேறு பக்க நோய்கள் ஏற்படுகின்றன. பாரம்பரிய உணவு வகைகளை நாம் மறந்து விட்டோம். குறிப்பாக குமரி மாவட்டத்தில் மர வள்ளிக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்றவற்றை நாம் மறந்து வருகிறோம். இது நல்ல ஆரோக்கிய உணவாகும் பிறப்படிப்புகளைப் போன்று மருத்துவப்படிப்பு என்பது ஒரு பட்டப்படிப்பு என்று மருத்துவம் பயிலும் மாணவர்கள் நினைத்து விடக்கூடாது. இது ஒரு அர்ப்பணிப்பான பணியைத் தரும் படிப்பு என்ற எண்ணம் எப்போதும் மாணவர்களுக்கு இருக்க வேண்டும். இது மட்டுமன்றி மருத்துவர்களுக்கு பணியின் மீது மிகுந்த ஆர்வமும், இரக்க உணர்வும் எப்போ தும் இருக்க வேண்டும் என்று பேசினார்.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் டாக்டர் சி.கே. மோகன் தலைமை வகித் தார். கல்லூரி முதல்வர் டாக்டர் என்.வி. சுகதன் ஆண்டறிக்கை சமர்ப்பித் தார். மாவட்ட அரசு சித்தா மருத்துவ அலுவலர் ராபர்ட் சிங் கவுரவ விருந்தினராக கலந்து கொண்டு உரை யாற்றினார். கல்லூரி ஒழுங்கு குழு தலைவர் கிருஷ்ணபிரசாத், ஐ.எச்.எம்.ஏ. தலைவர் ஷாஜி குட்டி, ஐ.எச்.கே. செயலாளர் கொச்சுராணி வர்க்கீஸ், பத்மநாபபுரம் அரசு மருத்துவமனை துணை மருத்துவ அலுவலர் ருக்குமணி தேவி, முன்னாள் மாணவர் சங்க தலைவர் எபி மோசஸ் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக கல்லூரி முதுநிலை ஒருங்கிணைப்பா ளர் வின்ஸ்டன் வர்க்கீஸ் வரவேற்றார். கல்லூரி பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் அஜெயன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில், கல்லூரி

    அறக்கட்டளை நிர்வாகிகள் சந்திரலேகா மோகன், எம்.சி. பவ்யா, மத்திய அரசின் ஓமியோபதி துறை முன்னாள் ஆலோசகர் ரவி எம். நாயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×