என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திருப்பதிசாரத்தில் இன்று செயல்பாட்டுக்கு வராத சுங்க கட்டண மையம்
  X

  திருப்பதிசாரத்தில் இன்று செயல்பாட்டுக்கு வராத சுங்க கட்டண மையம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காவல்கிணறு முதல் களியக்காவிளை வரை செல்லும் 4 வழிச்சாலையில் திருப்பதிசாரம் பகுதியில் சுங்க கட்டணம் வசூல் செய்யும் மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
  • 4 வழிச்சாலை பயன் பாட்டுக்கு வரும் போது சுங்கசாவடி திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.

  நாகர்கோவில் :

  காவல்கிணறு முதல் களியக்காவிளை வரை செல்லும் 4 வழிச்சாலையில் திருப்பதிசாரம் பகுதியில் சுங்க கட்டணம் வசூல் செய்யும் மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையம் இன்று (24-ந் தேதி) முதல் செயல்பட தொடங்கும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த சுங்க கட்டணம் மையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இந்த நிலையில் இன்று முதல் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்த சுங்க கட்டண மையம் செயல்படவில்லை. வழக்கம் போல கட்டணங்கள் எதுவும் இல்லாமல் சுங்க சாவடியின் ஒருபகுதி வழியாக வாகனங்கள் சென்று வந்தன.

  4 வழிச்சாலை பயன் பாட்டுக்கு வரும் போது சுங்கசாவடி திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.

  Next Story
  ×