search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் மீண்டும் கொரோனா பரவுகிறது
    X

    கன்னியாகுமரியில் மீண்டும் கொரோனா பரவுகிறது

    • 3 நாட்களில் 6 பேர் பாதிப்பு
    • பரவல் அதிகரித்ததையடுத்து சோதனையை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை அதிகா ரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வரு கிறார்கள்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு சற்று குறைந்திருந்தது. இதனால் தினசரி பாதிப்பு பூஜ்ஜியத்தில் இருந்து வந்தது. இருப்பினும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பரவ தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று மேலும் 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    செருப்பாலுரை சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவரும் தேவிகோட்டை சேர்ந்த 36 வயது வாலிபர் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மாவட்டம் முழுவதும் நேற்று 338 பேருக்கு சோதனை நடத்தப்பட்ட நிலையில் இரண்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பரவல் அதிகரித்ததையடுத்து சோதனையை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வரு

    கிறார்கள்.

    இதையடுத்து காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் கொரோனாசோதனை நடத்தப்பட்டு வருக்கிறது. வெளியூர் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வருப வர்களையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கேரளாவில் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கேரளாவில் இருந்து வருபவர்களுக்கும் சோ தனை நடத்தப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரை 19419 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.மாவட்டம் முழுவதும் இதுவரை 79 ஆயிரத்து 936 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று உள்ளனர்.

    Next Story
    ×