search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இடையன்கோட்டை சாலையில் இடிந்து விழுந்த பக்கச்சுவர்
    X

    இடையன்கோட்டை சாலையில் இடிந்து விழுந்த பக்கச்சுவர்

    • ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் சீரமைப்பு
    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு

    கன்னியாகுமரி :

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முள்ளங்கினாவிளை - இடையன்கோட்டை சாலையில் சரல்விளை பகுதியில் 15 மீட்டர் நீளம், 4 மீட்டர் உயரம் உள்ள பக்கச்சுவர் கடந்த மே மாதம் பெய்த கனமழையால் உடைந்து விழுந்தது. இதனால் இந்த சாலை வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    மேலும் இந்த வழியாக சென்று கொண்டிருந்த அரசு பேருந்து போக்கு வரத்தும் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக இப்பகுதியில் உள்ள நோயா ளிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவி கள் பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பேருந்துகளில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

    இதனையடுத்து ராஜே ஷ்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டரை சந்தித்து உடனடியாக பக்கச்சு வரை புதிதாக அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து ஊராட்சி ஒன்றிய மற்றும் ஊராட்சி சிறப்பு நிதி திட்டத்தில் இருந்து ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    தொடர்ந்து பக்கச்சுவர் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. தற்போது இந்த பணிகள் முடி வடைந்ததையடுத்து ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமனோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×