search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வாலிபர் பிணம் - கொலை நடந்து 6 மாதமாகியும் குற்றவாளியை பிடிக்க முடியாமல் திணறும் போலீசார்
    X

    கன்னியாகுமரியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வாலிபர் பிணம் - கொலை நடந்து 6 மாதமாகியும் குற்றவாளியை பிடிக்க முடியாமல் திணறும் போலீசார்

    • பிப்ரவரி மாதம் 18-ந் தேதி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.
    • இதே போல சாமிதோப்பு அருகே கடந்த மாதம் வட மாநில தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி நான்கு வழி சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் அடியில் கடந்த பிப்ரவரி மாதம் 18-ந் தேதி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.

    அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் அவர் யார்? கொலையாளி யார்? என விசாரணையில் இறங்கினர்.

    பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியும் கொலை செய்யப்பட்டவர் யார்? என இது வரை அடையாளம் தெரிய வில்லை. வெளிமாவட்ட த்தைச் சேர்ந்த யாரை யாவது கொலை செய்து காரில் உடலை கடத்திவந்து கன்னியாகுமரி ெரயில்வே மேம்பாலத்தின் அடியில் உள்ள தண்டவாளத்தில் வீசி சென்றார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். கொலை தொடர்பாக துப்பு துலக்க அமைக்க ப்பட்டு உள்ள 2 தனிப்படை போலீசார் 18-ந் தேதிக்கு முந்தைய சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்திய போது வடசேரி பஸ் நிலையத்தில் சுற்றித்திரிந்த ஒருவரது உருவம் கொலை செய்யப்பட்டவர் உருவத்துடன் ஒத்துப் போனதாக தெரிகிறது என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

    அதன் அடிப்படையில் கொலை செய்ய ப்பட்ட வர் வடமாநிலத்தை சேர்ந்தவரா? என்றும் கன்னியாகுமரியில் உள்ள விடுதியில் தங்கி இருந்தாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் கொலை நடந்து 6 மாதங்கள் ஆன பிறகும் கொலை செய்யப்பட்டவர் யார்? கொலையாளி யார்? என தெரியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    இதே போல சாமிதோப்பு அருகே கடந்த மாதம் வட மாநில தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

    Next Story
    ×