search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகளை  தொடங்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை
    X

    குமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகளை தொடங்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை

    • அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை
    • வருகிற 5 ஆண்டுகளில் மாவட்டத்தில் 5 ஆயிரம் வீடுகளை கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அரவிந்த் தலைமையில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ், மாநகராட்சி கமிஷனர் ஆனந்த மோகன் மற்றும் நெடுஞ்சாலை துறை, வீட்டு வசதி வாரியம் ,குடிநீர் வடிகால் வாரியத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் குமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகள் உட்பட பல்வேறு திட்ட பணிகள் குறித்து ஆலோசிக் கப்பட்டது. பின்னர் அமைச்சர் மனோதங்கராஜ் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் ஏற்கனவே அஞ்சு கிராமம், புளியடி பகுதியில் தற்போது வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் உள்ளது. அஞ்சுகிராமத்தில் 480 வீடுகள் உள்ளதில் 50 வீடுகள் தற்போது காலியாக உள்ளது. அதில் பயனாளிகளை அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போல் புளியடி பகுதியில் 30 வீடுகள் காலியாக உள்ளது. அந்த வீடுகளையும் பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    புதிதாக புதுகுளம் பகுதியில் 384 வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது. அதை மக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டு வர வேண்டும். வருகிற 5 ஆண்டுகளில் மாவட்டத்தில் 5 ஆயிரம் வீடுகளை கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கன்னியா குமரி களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் தற்காலிக சீரமைப்பு பணிகளை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த சாலை பிரச்சினை தொடர்பாக சில புகார்கள் வந்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதியில்லாத காண்ட்ராக்டர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×