search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுசீந்திரம் அருகே 1¼ கிலோ கஞ்சாவுடன் 3 வாலிபர்கள் கைது
    X

    பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை படத்தில் காணலாம்

    சுசீந்திரம் அருகே 1¼ கிலோ கஞ்சாவுடன் 3 வாலிபர்கள் கைது

    • 2 மோட்டார் சைக்கிள் பறிமுதல்
    • கஞ்சா எங்கிருந்து வாங்கி வரப்பட்டது என்பது குறித்து விசாரணை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு அதிரடி நடவ டிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனை செய்ப வர்களின் வங்கி கணக்கு முடக்கப்பட்டு வருவ துடன் அவர்கள் மீது குண்டர் சட்டத் தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு இதுவரை கஞ்சா வியாபாரிகள் 20 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    தொடர்ந்து போலீசார் கஞ்சாவை கட்டுப்படுத்த கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். இதையடுத்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பி னும் ஒரு சில இடங்களில் கஞ்சா புழக்கத்தில் இருந்து வருகிறது. இதை முற்றிலுமாக ஒழிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

    இந்த நிலையில் சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சாய் லட்சுமி சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வசிங் தலைமையிலான போலீசார் புதுகிராமம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படியாக நின்ற வாலிபர்கள் மூன்று பேரை பிடித்து விசா ரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல் களை தெரிவித்தனர்.சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களது மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர். அப்போது அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அவர்களிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவையும், 2 மோட் டார் சைக்கிளையும், செல் போன்களையும் போலீசார் பறிமுதல் செய்த னர். பிடிபட்ட நபர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் குலசே கரன் புதூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த விக்னேஷ் (வயது 19), கண்ணன்பதியை சேர்ந்த கார்த்திகேயன் (20), மாங்குளம் பகுதியைச் சேர்ந்த வைரவன் (19) என்பது தெரியவந்தது.

    3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் கஞ்சா எங்கிருந்து வாங்கி வரப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    Next Story
    ×