search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் 3 லட்சம் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல தயார்
    X

    குமரியில் 3 லட்சம் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல தயார்

    • பள்ளிகள் திறக்கும் அன்றே புத்தகங்களை வழங்க ஏற்பாடு
    • கோடை விடுமுறை நாளை மறுநாளுடன் நிறைவு

    நாகர்கோவில், ஜூன்.10-

    கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்ப டும் என்று அறிவிக்கப்பட்டி ருந்தது.

    கோடை வெப்பத்தின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் 14-ந்தேதியும், 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் 12-ந்தேதியும் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் இருந்து வெளியூர்களுக்கு ஏராளமானவர் புறப்பட்டு செல்கிறார்கள். இதனால் பஸ்களில் கூட்டம் அலை மோதுகிறது. வடசேரி பஸ் நிலையத்திலிருந்து சென்னை, கோவை, பெங்களூர், திருச்சி போன்ற பெரு நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    பஸ்களில் மாலை நேரங்களில் கூட்ட நெருக்கடி அதிகமாகவே உள்ளது. இதேபோல் ெரயில்களிலும் கூட்டம் அதிகமாக உள்ளது. குமரி மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்படு வதையடுத்து அதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதன்மை கல்வி அதிகாரி முருகன் தலைமை யில் கல்வித்துறை அதிகாரிகள் அதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற் கொண்டு வருகிறார்கள்.

    மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஏற்கனவே முட்புதர்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது. பல்வேறு பள்ளிகளில் பள்ளி வளாகம் சுத்தம் செய்தல் பணி, பெயிண்ட் அடித்தல், கரும்பறைகளை சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பள்ளிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி நடந்தது.

    பள்ளி திறக்கும் அன்றே மாணவர்களுக்கு புத்த கங்களை வழங்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இதையடுத்து கல்வி அலுவலகங்களில் இருந்து புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தை பொறுத்தமட்டில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் என 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 687 பள்ளிகள் உள்ளது.

    இதில் 1 லட்சத்து 90 ஆயிரம் மாணவ-மாணவி கள் படித்து வருகிறார்கள். இவர்கள் பள்ளிக்கு செல்வ தற்கு தயார் நிலையில் உள்ளனர். இதேபோல் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை சுமார் 350 பள்ளிகளில் உள்ளன. இதில் சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் மாண வர்கள் படித்து வருகிறார் கள். அவர்களும் பள்ளிக்கு செல்வதற்கு தயாராகி வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் மொத்தத்தில் 3 லட்சம் மாணவர்கள் இந்த கல்வியாண்டில் பள்ளிக்கு செல்வதற்கு தயாராகி வருகிறார்கள்.

    கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வரும் மாணவர்களை வரவேற்கும் வகையில் பள்ளி கல்வித் துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட் டுள்ளது.

    Next Story
    ×