search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குலசேகரம் அருகே வீட்டு முன்பு நின்ற மூதாட்டியிடம் 2½ பவுன் தங்க நகை பறிப்பு - மாஸ்க் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் துணிகரம்
    X

    குலசேகரம் அருகே வீட்டு முன்பு நின்ற மூதாட்டியிடம் 2½ பவுன் தங்க நகை பறிப்பு - 'மாஸ்க்' அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் துணிகரம்

    • 2 வாலிபர்கள் தங்கள் முகம் தெரியாத அளவில் ‘மாஸ்க்’ அணிந்து மரிய செல்வி கழுத்தில் கிடந்த 2½ பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற னர்.
    • கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி, நகை பறித்து விட்டு தப்பிச் சென்ற வர்கள் உருவம் அதில் பதிவாகி இருக்கிறதா? என போலீசார் ஆய்வு

    கன்னியாகுமரி :

    குலசேகரம் அருகே உள்ள கல்லடி மாமூடு பகுதி யைச் சேர்ந்தவர் ராஜமணி. இவரது மனைவி மரிய செல்வி (வயது 63).

    கணவர் இறந்து விட்ட நிலையில் மகன் ரமேஷ்குமா ருடன் மரியசெல்வி வசித்து வருகிறார். இவர் இன்று காலை வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிள் வேக மாக வந்தது.

    அதில் 2 வாலிபர்கள் தங்கள் முகம் தெரியாத அளவில் 'மாஸ்க்' அணிந்து வந்தனர். அவர்கள் கண்ணி மைக்கும் நேரத்தில் மரிய செல்வி கழுத்தில் கிடந்த 2½ பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்ற னர்.

    இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த மரிய செல்வி சுதாரித்து கூச்ச லிட்டார். அவரது சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்த மகன் ரமேஷ்குமார் மற்றும் அக்கம் பக்கத்தினர் வருவத ற்குள் நகை பறித்த மர்ம நபர்கள் மாயமாக மறைந்து விட்டனர்.

    இதுகுறித்து குலசேகரம் போலீசில் புகார் செய்யப்ப ட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசார ணையை தொடங்கினர். அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி, நகை பறித்து விட்டு தப்பிச் சென்ற வர்கள் உருவம் அதில் பதிவாகி இருக்கிறதா? என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலும் அந்த வழியாக நடைபயணம் சென்ற வர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்ற னர். காலை நேரத்தில் வீட்டு முன்பு நின்ற மூதாட்டியிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×