search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் இன்று முதல் போக்குவரத்தில் திடீர் மாற்றம்
    X

    சாலையில் பாதாள சாக்கடைக்கு குழி தோண்டும் பணி இன்று நடந்தது.

    நாகர்கோவிலில் இன்று முதல் போக்குவரத்தில் திடீர் மாற்றம்

    • சவேரியார் ஆலயம் - செட்டிகுளம் சாலை; கோட்டார் சாலை இருவழி பாதையாக மாற்றம்
    • செட்டிகுளத்தில் இருந்து நேராக சவேரியார் ஆலயத்திற்கு வாகனங்கள் விடப்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பீச்ரோட் டில் இருந்து செட்டிகுளம் வரும் சாலையில் பாதாள சாக்கடை பணி கள் நடைபெறுகிறது. இதையடுத்து அந்த சாலை மூடப்பட்டு உள்ளது. அந்த வழியாக செல்லும் பஸ்கள் அனைத்தும் பீச்ரோட்டில் இருந்து ஆயுதப்படை மைதான ரோடு, பொன்னப்ப நாடார் காலனி, ராமன்புதூர் வழியாக செட்டிகுளத்திற்கு இயக்கப்பட்டது.

    நேற்று முதல் போக்கு வரத்து மாற்றப்பட்டுள்ள நிலையில் ராமன்புதூர் பொன்னப்ப நாடார் காலனி பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் அதை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். எனினும் நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே அதற்கு மாற்றாக பஸ்களை எப்படி இயக்குவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை முதல் பஸ் போக்குவரத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டது. கோட்டார் நாராயண குரு மண்டபத்திலிருந்து சவேரியார் ஆலயம் வரும் சாலை ஒருவழிப்பாதையாக இருந்த நிலையில் இன்று முதல் அந்த சாலை இருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த அனைத்து பஸ்களும் நாராயணகுரு மண்டபத்தில் இருந்து கம்பளம் சந்திப்பு வழியாக சவேரியார் ஆலய சந்திப்பு வழியாக செட்டிகுளம் வந்தது.

    இதே போல செட்டிகுளத்தில் இருந்து சவேரியார் ஆலயம் செல்லும் சாலை ஒரு வழி பாதையாக இருந்த நிலையில் அந்த சாலையும் இருவழிச்சாலையாக மாற்றப்பட்டு உள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் செட்டிகுள த்தில் இருந்து அண்ணா பஸ் நிலையம் வழியாக சுற்றி செல்ல வேண்டிய நிலை இருந்தது. தற்போது செட்டிகுளத்தில் இருந்து நேராக சவேரியார் ஆலயத்திற்கு வாகனங்கள் விடப்பட்டது.

    போக்குவரத்து மாற்றப் பட்டதால் சவேரியார் ஆலய சந்திப்பு, செட்டிகுளம் சந்திப்பு, நாராயண குரு மண்டபம் பகுதிகளில் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இந்த 2 சாலைகளும் இரு வழியாக சாலையாக மாற்றப்பட்டதையடுத்து நாகர்கோவில் நகருக்கு வரும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமின்றி எளிதாக வந்தனர். வழக்கமாக கோட்டார் நாராயண குரு மண்டபத்திலிருந்து பீச்ரோடு வழியாக சுற்றி வரவேண்டிய நிலை இருந்தது. தற்பொழுது பாதாள சாக்கடை வேலை நடைபெற்று வரும் நிலையில் நாராயண குரு மண்டபத்தில் இருந்து சவேரியார் ஆலயம் வழியாக பஸ்கள் மற்றும் 4 சக்கர, இரு சக்கர வாகனங்கள் இயக்கப்படுவதால் சுற்றி செல்லாமல் நேராக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதற்கு அனைத்து வாகன ஓட்டிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பாதாள சாக்கடை பணிகள் முடிந்தாலும் வாகனங்களை இதே போல் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் நுகர்வோர் அமைப்புகளும் இதற்கு ஆதரவு தெரி வித்துள்ளது.

    இந்த இரு சாலைகளும் இருவழிப்பாதையாக மாற்றப்பட்டு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி சங்க தலைவர் ஸ்ரீராம் கலெக்டர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார்.

    Next Story
    ×