என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சீபுரம்:
வேலூரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (24). இவருக்கும் காஞ்சீபுரத்தை அடுத்த ஏனாத்தூரை சேர்ந்த 16 வயது மாணவிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இந்த மாணவி காஞ்சீபுரத்தில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவர்களது திருமணம் காஞ்சீபுரம் ஜிலம்பி பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் இன்று நடைபெற இருந்தது.
மைனர் பெண்ணுக்கு திருமணம் நடைபெறுவதை அறிந்த ‘சைல்டு லைன்’ அமைப்பினர் காஞ்சீபுரம் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி சங்கீதாவிடம் இதுகுறித்து புகார் செய்தனர்.
அதைத் தொடர்ந்து இன்று காலை பாலசெட்டி சத்திரம் போலீசார் உதவியுடன் திருமண மண்டபத்துக்கு அதிகாரி சங்கீதா வந்தார். அப்போது திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தன.
அப்போது இரு வீட்டாரையும் அழைத்து அதிகாரி சங்கீதா பேசினார். ‘மைனர்’ பெண்ணுக்கு திருமணம் செய்வது சட்டவிரோதம் என எடுத்துக் கூறினார். அதை ஏற்றுக்கொண்ட இரு வீட்டினரும் இன்று நடைபெற இருந்த திருமணத்தை நிறுத்தினர். இதுகுறித்து பாலசெட்டி சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
காஞ்சீபுரம்:
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் ஜூலை 24-ந்தேதி முடிவடைகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 17-ந் தேதி நடைபெற உள்ளது. 20-ந் தேதி முடிவு அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த மே மாதம் 24-ந்தேதி காஞ்சீபுரம் வருவதாக இருந் தது. அதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது. திடீரென இந்த சுற்றுப் பயணம் நிர்வாக காரணங்களால் ரத்து ஆனது.
இந்த நிலையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வருகிற 13-ந்தேதி (நாளை மறுநாள்) காஞ்சீபுரம் வருகிறார். டெல்லியிலிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வேலூர் மாவட்டம் அரக்கோணம், ராஜாளி விமானபடை தளத்தில் வந்து இறங்குகிறார். அங்குள்ள ராணுவ ஹெலிபேடில் இறங்கி 30 கிலோ மீட்டர் ரோடு வழியாக குண்டு துளைக்காத கார் மூலம் காஞ்சீபுரத்திற்கு பிற்பகல் வருகிறார்.
நேராக காஞ்சீபுரம் சங்கர மடம் செல்கிறார். அங்கு காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெறுகிறார். பிறகு சங்கரமடத்தில் முக்தியடைந்த காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீ சந்திரசேக ரேந்திர சரஸ்வதி பிருந்தாவனத்திற்கு சென்று பாத பூஜை செய்கிறார்.
காமாட்சியம்மன் கோயிலுக்கு குண்டு துளைக்காத காரில் செல்கிறார். அங்கு கோயில் கருவறையில் உள்ள காமாட்சியம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்கிறார்.
கோவில் சார்பில் ஜனாதிபதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் காஞ்சி வரதராஜபெருமாள் கோயில், ஏகாம்பரநாதர் கோவில், ராமானுஜர் சன்னதி ஆகிய கோவில் களுக்கும் சென்று தரிசனம் செய்கிறார்.
ஜனாதிபதி வருகையயொட்டி கலெக்டர் பா. பொன்னையா, மாவட்ட வருவாய்துறை அதிகாரி சவுரிராஜன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, காஞ்சீ புரம் உதவி போலீஸ் சூப்பி ரண்டு டாக்டர் என்.ஸ்ரீநாத் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.
ஆலந்தூர்:
தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டைக்கு செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குடிமராமத்து பணிக்காக மேலும் நிதி ஒதுக்கப்படும் என்று கூறி இருக்கிறார். ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதி, குடிமராமத்து பணிக்காக செலவு செய்யப்பட்டு இருந்ததால் அது பயன் உள்ளதாக அமையும் ஆனால் இது வரையில் அப்படி செலவு செய்யப்பட்டதாக தெரியவில்லை.
இந்த ஆட்சியை காப்பாற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு கமிஷன் தரப்படுவதற்கு இந்ததொகை ஒதுக்கப்பட்டு உள்ளதாக மக்களிடம் கேள்வி எழுந்து உள்ளது.
நான் அ.தி.மு.க ஆட்சியை கவிழ்க்க பல்வேறு முயற்சிகள் எடுப்பதாக கூறுகிறார்கள். ஒரு துளி அளவு கூட அப்படிப்பட்ட செயலில் நான் ஈடுபடவில்லை.
தற்போது ஆட்சியை அவர்களே கவிழ்த்து கொள்கிற சூழ்நிலை இருக்கிறது.
எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைய வேண்டும் என்ற போட்டி மட்டும் அல்ல, அவர்களுக்கு உள்ளே பல போட்டா போட்டி நிலவுகிறது.

தினகரன் அணி, பழனிசாமி அணி, ஓ. பன்னீர் செல்வம் அணி, தீபா அணி என்று பல அணிகளாக பிரிந்து இருக்கிறார்கள்.
பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, காந்தி பற்றி கூறிய கருத்தை தி.மு.க வன்மையாக கண்டிக்கிறது. தமிழகத்தில் பாலில் கலப்படம் என்று முதலில் கூறினார்கள். அதன் மீது உரிய நடவடிககை எடுக்கப்பட்டதா? இதில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட்டு இருக்கிறார்களா?.
இது ஒரு புறம் இருக்க இப்போது அரிசி, முட்டை, சர்க்கரை போன்றவற்றில் பிளாஸ்டிக் கலப்படம் இருப்பதாக செய்திகள் வருகிறது. இதனை ஆட்சியில் இருப்பவர்கள் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சீபுரம் முன்னாள் அதிமுக நகர செயலாளராகவும், மேற்கு மாவட்ட அம்மா பேரவையின் முன்னாள் இணை செயலாளராகவும் பதவி வகித்தவர். புல்லட் பரிமளம் தற்போது இவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இவர் காஞ்சீபுரம் முழுவதும் ஒட்டியுள்ள போஸ்டரில் ஜெயலலிதா, சசிகலா, டி.டி.வி.தினகரன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரின் படங்கள் இடம் பெற்றுள்ளன.
இதில் அம்மா மற்றும் சின்னம்மா ஆசியுடன் மிக விரைவில் தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள டி.டி.வி.தினகரனுக்கு வாழ்த்துக்கள் இனி வெற்றி ஜெயம் அண்ணனால் அடையாளம் காட்டப்பட்டு நிதி அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்த அண்ணன் டி.டி.வி.க்கு எதிராக பேட்டி கொடுப்பதை துரோகியே நிறுத்திக் கொள் நிதி அமைச்சர் பதவி என்பது அண்ணன் டி.டி.வி. கொடுத்த பிச்சைதான் எனவே அண்ணன் டி.டி.வி.யிடம் மன்னிப்பு கேள் ஒன்றரை கோடி தொண்டர்களிடம் மன்னிப்பு கேள் எச்சரிக்கை என்று நிதி அமைச்சராக உள்ள ஜெயகுமாரின் பெயரினை குறிப்பிடாமல் கடுமையாக விமர்சித்து அந்த போஸ்டரில் வாசகங்கள் உள்ளன. காஞ்சி நகர அதிமுகவினர் மற்றும் பொதுமக்களிடையே இந்த போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சுவரொட்டியை ஒட்டிய புல்லட் பரிமளம் கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே காஞ்சிபுரம் அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என காஞ்சீபுரம் நகர் முழுவதும் பேனர்கள் வைத்து பரபரப்பை ஏற்படுத்தியவர். கடந்த மாதம் அ.தி.மு.க.விற்கு பொறுப்பேற்கும்படி டாக்டர் வெங்கடேஷ்க்கு அழைப்பு விடுத்து இவர் ஒட்டிய போஸ்டராலும் பரபரப்பு ஏற்பட்டது. இப்போது தினகரன் விரைவில் முதல்-அமைச்சர் ஆவார் என்று போஸ்டரை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தனியாக தீயணைப்பு நிலையம் உள்ளது. இந்த தீயணைப்பு நிலையத்தில் நவீன வசதிகளுடன் கூடிய தீயணைப்பு வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் ஆஸ்திரியா நாட்டில் இருந்து நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய 3 தீயணைப்பு வாகனங்கள் புதிதாக வாங்கப்பட்டு உள்ளன. இந்த தீயணைப்பு வாகனத்தில் 10 ஆயிரம் லிட்டர் தண்ணீரும், 1,300 லிட்டர் சோப்பு நுரையும் (போர்ம்) சேகரித்து வைக்கும் கொள்ளளவு கொண்டது. 15 கிலோ மீட்டரில் இருந்து 120 கிலோ மீட்டர் வேகத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முடியும்.
மேலும் இந்த வாகனத்தை ஒருவரே இயக்க கூடிய வசதிகள் கொண்டது. இந்த தீயணைப்பு வாகனத்தின் மதிப்பு ரூ.6½ கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நவீன தொழில் நுட்ப வாகனத்தை இயக்குவது எப்படி? என்று விமான நிலைய தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த புதிய தீயணைப்பு வாகனங்களை விமான நிலைய தீயணைப்பு துறைக்கு சென்னை விமான நிலைய இயக்குனர் சந்திரமவுலி வழங்கி, வீரர்களுக்கான பயிற்சியை தொடங் கிவைத்தார்.
இதனால் ஏற்கனவே தீயணைப்பு நிலையத்தில் உள்ள நவீன வசதிகளுடன் கூடிய தீயணைப்பு வாகனங்கள் வேறு விமான நிலையத்துக்கு மாற்றப்பட உள்ளது.
ஆலந்தூர்:
சென்னையில் இருந்து அபிதாபிக்கு செல்லும் விமானம் இன்று அதிகாலை புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஜோகன் என்பவர் வைத்திருந்த சூட்கேசை சோதனை செய்த போது மாத்திரை மற்றும் பால் பவுடர் போன்று இருந்தது. சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அதனை ஆய்வு செய்த போது அவை ஹெராயின் போதைப்பொருள் என்பது தெரிந்தது.
இதைத் தொடர்ந்து போதைப் பொருளுடன் ஜோகனை கைது செய்தனர். மொத்தம் 2 கிலோ ஹெராயின் இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ. 20 கோடி ஆகும், கைப்பற்றப்பட்ட போதைப் பொருளை அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.
கைதான ஜோகன் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவன் ஆவான். அவன் ஏற்கனவே இதேபோல் போதைப்பொருள் கடத்தியதாக 2 முறை கைது செய்யப்பட்டவன் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
மத்தியபிரதேசம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் பெரிய அளவில் விவசாயிகள் தற்கொலை நடந்து வருகிறது. இதற்கு காரணம் வறட்சி மற்றும் விளைபொருட்களுக்கு தகுந்த விலை கிடைக்காததே ஆகும்.
மத்தியபிரதேசத்தில் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் பலியான விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியை எல்லையிலேயே எந்த முகாந்திரமும் இல்லாமல் அத்துமீறி கைது செய்து உள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் உரிமை உண்டு.
புதுவையில் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட மாநில அரசு செயல்பட்டு கொண்டு இருக்கிறது. புதுவை மாநிலத்தில் துணை ஆளுநருக்கு என்று சில அதிகாரங்கள் உள்ளது.

மாநில அரசின் அன்றாட நிர்வாகத்திற்குள் தலையிட துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு உரிமை கிடையாது.
இது தொடர்பாக அவரிடம் நேரில் கூறி இருக்கிறேன். கடிதம் மூலமும், அமைச்சர்கள் மூலமும் தெரிவித்து உள்ளேன்.
ஆனால் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அதிகாரத்துக்கு மீறி செயல்படுகிறார். இது குறித்து பிரதம மந்திரியிடமும், உள்துறை அமைச்சரிடமும் புகார் செய்துள்ளேன். அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் அ.தி.மு.க.வின் உள் கட்சி பிரச்சினை குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தினந்தோறும் காலையும் மாலையும் எம்பெருமான் பல்வேறு வாகனங்களில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக திரு வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான கருடசேவை உற்சவம் இன்று நடைபெற்றது. அதிகாலை திருக்கோயிலில் இருந்து கருட வாகனத்தில் எழுந்தருளிய எம்பெருமான் கோபுர வாசலில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர். காந்தி சாலை தேசிகர் போயில் வழியாக பிள்ளையார்பாளையம் பகுதிக்கு எம்பெருமான் எழுந்தருளினார்.
பின்னர் காஞ்சீபுரம் கச்சபேஸ்வரர் கோவில் பகுதியில் எழுந்தருளி நான்கு ராஜவீதிகளில் வலம் வந்தார். வழியெங்கும் பல்லாயிரம் கணக்கான பக்தர்கள் சாமிக்கு தீபாரதனை காட்டி பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர்.
கருட சேவையை முன்னிட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் பக்தர்களுக்கு நீர் மோர் மற்றும் அன்ன தானமும் வழங்கப்பட்டது. காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமையில் நகரில் ஏராளமான இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.
காஞ்சீபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தின் சார்பில் சங்க தலைவர் வள்ளிநாயகம் துணைத் தலைவர் ஜெயந்தி சோம சுந்தரம் ஏற்பாட்டில் நீர் மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தமிழகம் பிற மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி மற்றும் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவின் பேரில் இன்ஸ் பெக்டர்கள் சரவணன், வெற்றிச் செல்வன், ஜெய சங்கர் உள்ளிட்ட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் பெண்கள் தங்கள் நகைகளை பாதுகாத்து கொள்ளும் பொருட்டு மகளிர் போலீஸ் முலம் சேப்டி பின்கள் வழங்கப்பட்டு சாதாரண உடையில் மகளிர் போலீசார் பொது மக்களிடையே கலந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த மீனவர்கள் ராமகிருஷ்ணன், கண்ணன், முனுசாமி, பாண்டி, சின்னையா, ராசு, மற்றொரு கண்ணன், தங்கசெல்வம், லிங்கேஸ்வரன், பாலமுருகன், ராஜேந்திரன், மரியச்செல்வம், குப்புசாமி, லூயிஸ், நந்து குமார் ஆகிய 15 பேர் கடந்த ஆண்டு துபாய்க்கு மீன்பிடி தொழிலுக்காக சென்றனர். அங்கு தனியார் நிறுவனம் மூலம் கடலில் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் தமிழக மீனவர்கள் 15 பேர், 2 குஜராத்தியர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி ஈரான் கடற்படை அவர்களை கைது செய்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்களின் குடும்பத்தினர் அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய-மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து மத்திய வெளியுறவு துறை அதற்கான நடவடிக்கைகளை எடுத்தது. ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையடுத்து ஈரான் கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை கடந்த மே 28-ந்தேதி ஈரான் விடுதலை செய்தது. அவர்களை துபாயில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அனுப்பி வைத்தது.
15 தமிழக மீனவர்களும் துபாயில் இருந்து இன்று காலை ஏர்இந்தியா விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர்.
மீனவர்கள் கூறுகையில், “எல்லை தாண்டி வந்ததாக கூறி எங்களை கைது செய்த ஈரான் கடற்படை சில நாட்கள் கப்பலிலும், சிறையிலும் அடைத்தனர். எங்களுக்கு தண்ணீர், உணவு கூட தரவில்லை” என்று கண்ணீர் மல்க கூறினர்.
இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த காஜாசபீர் என்பவரின் சூட்கேசை சோதனை செய்தபோது பார்சல் ஒன்று இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது பிளாஸ்க் இருந்தது.
அதன் எடை அதிகமாக இருந்ததால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் பிளாஸ்கை சோதனை செய்தனர். அதில் சூடு குறையாமல் இருப்பதற்கு வைக்கப்படும் தெர்மாகோலை எடுத்து விட்டு அதில் தங்க கட்டிகளை மறைத்து கடத்தியது தெரியவந்தது. தலா 100 கிராம் எடை கொண்ட 11 தங்க கட்டிகள் இருந்தது. இதன் மதிப்பு ரூ.33 லட்சமாகும்.
இதையடுத்து காஜாசபீர் கைது செய்யப்பட்டார். யாருக்காக தங்க கட்டிகளை யாருக்காக கடத்தி வந்தார்? என்று அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
திருவான்மியூர்:
நீலாங்கரை அடுத்த கானாத்தூர் போலீஸ் நிலையம் எதிரே உள்ள பக்கிங்காம் கால்வாயில் இன்று காலை வாலிபர் பிணமாக மிதந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்தன.
வாலிபர் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் அவர் ஆந்திராவை சேர்ந்த நீலாம்பவசிங் என்பதும் அவரை மர்ம நபர்கள் அடித்து கொலை செய்து கால்வாயில் வீசி சென்றதும் தெரியவந்தது.
அவர் அப்பகுதியில் கட்டிட கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்து விட்டு உடலை கால்வாயில் வீசி சென்று இருப்பார்கள் என்று போலீசார் கருதுகிறார்கள்.
இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கிறார்கள்.
குவைத்தில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை வந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அவருக்கு ஸ்கேன் செய்தும் பார்க்கப்பட்டது. ஆனால் அவரிடம் எதுவும் இல்லை.
அவர் கொண்டு வந்திருந்த உடைமைகளை சோதனை செய்தபோது ஒரு பையின் கைப்படி வித்தியாசமாக இருந்ததால் அதை சோதனை செய்தனர். அப்போது தங்கத்தில் கைப்பிடி செய்து அதில் வெள்ளி மூலாம் பூசி நூதன முறையில் கடத்தியது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த வாலிபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.60 லட்சம் ஆகும்.






