என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரத்தில் 13-ந்தேதி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி: 4 கோவில்களுக்கு செல்கிறார்
    X

    காஞ்சீபுரத்தில் 13-ந்தேதி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி: 4 கோவில்களுக்கு செல்கிறார்

    ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாளைமறுநாள் காஞ்சீபுரம் வருகிறார். அப்போது நான்கு கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்கிறார். அத்துடன் சங்கரமடத்தில் பாத பூஜையும் நடத்துகிறார்.

    காஞ்சீபுரம்:

    ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் ஜூலை 24-ந்தேதி முடிவடைகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 17-ந் தேதி நடைபெற உள்ளது. 20-ந் தேதி முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

    இந்நிலையில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த மே மாதம் 24-ந்தேதி காஞ்சீபுரம் வருவதாக இருந் தது. அதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது. திடீரென இந்த சுற்றுப் பயணம் நிர்வாக காரணங்களால் ரத்து ஆனது.

    இந்த நிலையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வருகிற 13-ந்தேதி (நாளை மறுநாள்) காஞ்சீபுரம் வருகிறார். டெல்லியிலிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வேலூர் மாவட்டம் அரக்கோணம், ராஜாளி விமானபடை தளத்தில் வந்து இறங்குகிறார். அங்குள்ள ராணுவ ஹெலிபேடில் இறங்கி 30 கிலோ மீட்டர் ரோடு வழியாக குண்டு துளைக்காத கார் மூலம் காஞ்சீபுரத்திற்கு பிற்பகல் வருகிறார்.

    நேராக காஞ்சீபுரம் சங்கர மடம் செல்கிறார். அங்கு காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெறுகிறார். பிறகு சங்கரமடத்தில் முக்தியடைந்த காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீ சந்திரசேக ரேந்திர சரஸ்வதி பிருந்தாவனத்திற்கு சென்று பாத பூஜை செய்கிறார்.

    காமாட்சியம்மன் கோயிலுக்கு குண்டு துளைக்காத காரில் செல்கிறார். அங்கு கோயில் கருவறையில் உள்ள காமாட்சியம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்கிறார்.

    கோவில் சார்பில் ஜனாதிபதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் காஞ்சி வரதராஜபெருமாள் கோயில், ஏகாம்பரநாதர் கோவில், ராமானுஜர் சன்னதி ஆகிய கோவில் களுக்கும் சென்று தரிசனம் செய்கிறார்.

    ஜனாதிபதி வருகையயொட்டி கலெக்டர் பா. பொன்னையா, மாவட்ட வருவாய்துறை அதிகாரி சவுரிராஜன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, காஞ்சீ புரம் உதவி போலீஸ் சூப்பி ரண்டு டாக்டர் என்.ஸ்ரீநாத் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.

    Next Story
    ×