search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரதராஜபெருமாள் கோவில்"

    • திருக்கோவிலூர், திருவந்திபுரம்- இவற்றுக்கு நடுவில் வராகபுரி என்று போற்றப்படுவது பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவில்.
    • பிரம்மோற்சவ விழாவில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இந்த நாள்கருதப்படுகிறது.

    கடலூர்:

    பண்ருட்டி காந்தி ரோட்டில் அமைந்துள்ளது வரதராஜ பெருமாள்கோவில். இதுமிகவும் பிரசித்தி பெற்றது. இடம் பெயர்ந்த பெருமாளாக அமைந்துள்ளது. நடுநாட்டு திவ்ய தேசங்களான திருக்கோவிலூர், திருவந்திபுரம்- இவற்றுக்கு நடுவில் வராகபுரி என்று போற்றப்படுவது பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவில். இங்கு வரதராஜ பெருமாள்கிழக்குநோக்கி கம்பீரமான தோற்றத்துடன் காட்சி தருகிறார். வலது கரத்தில் அபய முத்திரையும், இடது கரத்தில் கதா ஆயுதமும் சங்கு சக்கரம் தரித்தபடி அருள்புரிகிறார். வலதுபுறம்ஸ்ரீதேவி தாயார் தாமரை மலர் தாங்கி காட்சி தருகிறார். இடதுபுறம் அமைதியே வடிவான பூமிதேவி கருங்குவளை மலர் தாங்கி அருள்சுரக்கிறார்.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பழமையான இந்த கோவிலில் பிரம்மோற்சவ திருவிழாதொடங்கிநடந்து வருகிறது. இதனை முன்னிட்டு தினமும் காலை, மாலை இரு வேளையும் யாகசாலை ஹோமங்கள் நடைபெற்று இரவு தினமும் ஒரு வாகனத்தில் சாமி வீதி உலா காட்சி நடக்கிறது. 4-ம் நாளான நேற்று இரவு சேஷ வாகனத்தில் சுவாமிவீதி உலாவந்தார்.

    சேஷ வாகனம், தாஸானு தாஸ' பக்திக்கு எடுத்துக்காட்டு.இதில் சுவாமி எழுந்தருளி உலாவரும் போது தரிசனம் செய்தால், நம் மனதில் இருக்கும் மிருகத்தன்மை நீங்கிசாத்விகமான குணங்கள் ஏற்பட்டும்.மற்றவர்களுக்குப் பயன்படும் வாழ்க்கை அமையும். குண்டலியோக பலன் கிடைக்கும், முதாதையர் அருள் கிடைக்கும், காரிய வெற்றி கிட்டும், பல்வேறு தோஷங்கள் நீங்கும். வைகுண்ட பிராப்தம் கிடைக்கும் 4-ம் சேஷ வாகனத்தில் வைகுண்ட வாசபெருமாள் திருக்கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழுந்தருளிய சுவாமி 5-ம் நாளான இன்று மாலை பெரிய திருவடி என்னும் கருட வாகனத்தில் எம்பெருமான் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பெருமாளே வரமாகக் கேட்டு பெற்ற சிறப்பினுக்கு உரியது கருட வாகனம். கருட சேவையில் எழுந்தருளும் பகவானை தரிசித்தால் சகல பயங்களும் நீங்கும் என்பது ஐதிகம்.

    முன்னதாக உற்சவ மூா்த்திக்கு மதியம் பால், தயிா், தேன், இளநீா், பழரசம், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட உள்ளது. திருமஞ்சனத்தின் போது பழங்கள், பலவித மலா்களால் ஆன மாலைகள் உற்சவமூா்த்தி களுக்கு அணிவிக்கப்படுகிறது. கருட சேவை ஏற்பாடு களை கருட சேவை உற்சவ தாரர்கள் பண்ருட்டி நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் தலைமையில் வன்னியர் சமூகத்தினர் செய்து வருகின்றனர்.

    பிரம்மோற்சவ விழாவில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இந்த நாள்கருதப்படுகிறது. அதனால் கருடவாகனத்தில் சுவாமி எழுந்தருளும் இந்நாளில் மட்டும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இதை யொட்டி விரிவான பல ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம்கோவில் செயல் அலுவலர் ராமலிங்கம், பரம்பரை அறங்காவலர் பாண்டுரங்கன் மற்றும் உபயதாரர்கள், பக்தர்கள், ஓம் நமோ நாராயணா அறக்கட்டளை, 1008 தாமரைப்பூ சகஸ்ர நாம குழுவினர், கோவில் பட்டாச்சாரியார் கஸ்தூரி ரங்கன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    ×