என் மலர்
செய்திகள்

குவைத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் 2 கிலோ தங்கம் கடத்திய வாலிபர் கைது
சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை குவைத்தில் இருந்து வந்த விமானத்தில் 2 கிலோ தங்கம் கடத்திய வாலிபரை அதிகாரிகள் கைது செய்தனர்.
ஆலந்தூர்:
குவைத்தில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை வந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அவருக்கு ஸ்கேன் செய்தும் பார்க்கப்பட்டது. ஆனால் அவரிடம் எதுவும் இல்லை.
அவர் கொண்டு வந்திருந்த உடைமைகளை சோதனை செய்தபோது ஒரு பையின் கைப்படி வித்தியாசமாக இருந்ததால் அதை சோதனை செய்தனர். அப்போது தங்கத்தில் கைப்பிடி செய்து அதில் வெள்ளி மூலாம் பூசி நூதன முறையில் கடத்தியது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த வாலிபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.60 லட்சம் ஆகும்.

Next Story