search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுவரொட்டி"

    • ராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் சார்பில் பரபரப்பு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
    • இந்த சுவரொட்டி தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ராமநாதபுரம்

    முன்னாள் அமைச்சரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அன்வர்ராஜா அ.தி.மு.க.வில் இருந்து கடந்த ஓராண்டுக்கு மேலாக நீக்கி வைக்கப்பட்டுள்ளார். அவர் மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் போஸ்டர் ஒட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

    கடந்த 24-ந்தேதி எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு அன்வர்ராஜா ஒட்டிய போஸ்டரில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. இன்று (17-ந்தேதி) எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவிற்கு அவர் ஒட்டியுள்ள போஸ்டரில், தலைவா... நம் கட்சித் தலைவர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள நீதிமன்றங்களில் போராடுகின்றார்கள்.

    நாங்கள் கட்சியை காப்பாற்ற உங்களிடம் மன்றாடுகின்றோம். காப்பாற்றுங்கள்... என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சுவரொட்டி தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் ஏராளமான போஸ்டர்கள் ஒட்டப்பட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.
    • ஊராட்சி மன்ற தலைவரின் ஆதரவாளர்கள் மடக்கி தாக்கியுள்ளனர்.

    விழுப்புரம்:

    செஞ்சி அருகே மீனம்பூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் ஆதரவாளர்கள் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாகவும் ஏரியை ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்வதாகவும் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் மற்றும் செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் ஏராளமான போஸ்டர்கள் ஒட்டப்பட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அறிந்த சில பத்திரிகையாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்ற போது ஒரு சிலர் அவர்களை மறித்து தகராறு செய்துள்ளனர். இந்நிலையில் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டதாக கூறப்படும் நபர்களை ஊராட்சி மன்ற தலைவரின் ஆதரவாளர்கள் மடக்கி தாக்கியுள்ளனர். இவை அனைத்து சம்பவங்களும் வாட்ஸ் அப்பில் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • கப்பல் படையினர், படகை நிறுத்துமாறு எச்சரிக்கை விடுத்தனர்.
    • 9 மீனவர்களை இந்திய கப்பல் படையினர் இரும்பு கம்பியால் தாக்கியதில் காயமடைந்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டம் காரைக்கால் மேடு மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவருக்கு சொந்தமான விசைப்படகில், வழக்கம் போல், கடந்த சில தினங்களுக்கு முன், 10 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது அங்கு வந்த இந்திய கப்பல் படையினர், படகை நிறுத்துமாறு எச் சரிக்கை விடுத்ததாகவும், நிறுத்தாத காரணத்தால், கப்பலில் இருந்த வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த வீரவேல் என்கின்ற மீனவர் குண்டு காய ங்களுடன் மதுரை அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மேலும் படகில் இருந்த 9 மீனவர்களை இந்திய கப்பல் படையினர் இரும்பு கம்பியால் தாக்கியதில் காயமடைந்து நாகை மருத்துவகல்லூரி மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் இந்திய கப்பல் படை தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் சார்பில், காரைக்கால் துறைமுகம், காரைக்கால் மேடு, கிளிஞ்சல் மேடு, மண்டபத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மீனவர்கள் சுவரொட்டிகள் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • வண்ண ஓவியங்கள் வரையும் பணி தொடக்கம்
    • கோவை மாநகரம் ஸ்மார்ட் சிட்டியாக காட்சியளிக்கும்.

     கோவை:

    குப்பையை தரம் பிரித்து கொடுக்க வேண்டியதை மக்கள் மத்தியில் பதிய வைப்பத ற்காகவும், காந்திபுரம் மேம்பாலத்தின் தூண்களில் சுவரொட்டி ஒட்டுவதை தடுக்கும் முயற்சியாகவும் விழிப்புணர்வு ஓவியம் வரையும் திட்டத்தை, கோவை மாநகராட்சி முன்னெடுத்துள்ளது.

    காந்திபுரம் கிராஸ்கட் ரோடு சந்திப்பில் உள்ள தூண் ஒன்றில், ஓவியம் வரையும் நிகழ்ச்சியை மேயர் கல்பனா, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இந்த பாலத்தில் ஒரே ஒரு தூணில் மட்டும் ஓவியம் வரைவதற்கு மாநகராட்சிக்கு, மாநில நெடுஞ்சாலை த்துறை அனுமதி அளித்துள்ளது. பாலம் தொடங்கும் இடத்தில் இருந்து நிறைவடையும் இடம் வரை அனைத்து தூண்களிலும் சுவரொட்டி ஒட்டப்பட்டு உள்ளது.

    இதனால் தூண்கள் அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் முகம் சுளிக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.திருச்சி ரோடு மேம் பாலத்தின் தூண்களில், தேசிய நெடுஞ்சாலைத் துறையினரே ஓவியங்கள் வரைய முடிவு செய்துள்ளனர்.

    இதேபோல, காந்திபுரம் பாலம் உட்பட அனைத்துப் பாலங்களிலும் உள்ள சுவரொட்டிகளை அகற்றி, ஓவியங்கள் வரையும் பொறுப்பை, மாநகராட்சி அல்லது தன்னார்வ அமைப்பகளிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போது கோவை மாநகரம் ஸ்மார்ட் சிட்டியாக காட்சியளிக்கும்.

    ×