என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    சோழிங்கநல்லூர் அருகே பெண் என்ஜினீயரை தாக்கிய வழிப்பறிப்பில் ஈடுபட்ட 3 கொள்ளையர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சோழிங்கநல்லூர்:

    ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த பெண் என்ஜினீயரான லாவண்யா. சென்னை நாவலூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

    கடந்த 12-ந் தேதி இரவு மொபட்டில் லாவண்யா பெரும்பாக்கத்தை அடுத்த நுங்கம் பாளையத்தில் உள்ள சகோதரி வீட்டுக்கு சென்று விட்டு தாழம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    ஒட்டியம்பாக்கம் - அரசன்கழணி காரனை சாலையில் சென்றபோது பின்னால் வந்த வழிப்பறி கும்பல் லாவண்யா தலையில் இரும்பு கம்பியால் தாக்கினார்கள்.

    இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த லாவண்யா தலையில் பலத்த காயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் மயங்கி அவளிடம் இருந்த நகை, செல்போன்களை பறித்துக் கொண்டு மொபட்டையும் கொள்ளையர்கள் எடுத்து கொண்டு சென்றுவிட்டனர்.

    இரவு முழுவதும் சாலையோரம் மயங்கி கிடந்த அவரை காலையில் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்கு பிறகு லாவண்யாவுக்கு சுயநினைவு திரும்பியது.

    போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் தன்னை தாக்கியவர்களை சும்மாவிடக்கூடாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    இதற்கிடையே கொள்ளையர்கள் எடுத்துச் சென்ற லாவண்யாவின் மொபட் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு அருகே கிடந்தது. அதை போலீசார் மீட்டு தீவிர விசாரணை நடத்தினார்கள்.

    அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினார்கள். இதில் மொபட்டை ஓட்டி வந்த நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடந்தது.

    இந்த நிலையில் பெண் என்ஜினீயரை தாக்கி வழிப்பறி செய்த செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை சேர்ந்த லோகேஷ், நாராயணமூர்த்தி, விநாயக மூர்த்தி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. #tamilnews

    பெண் என்ஜினீயரை தாக்கிய மேலும் 2 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவான்மியூர்:

    ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் லாவண்யா (26). இவர் நாவலூரில் உள்ள சாப்ட் வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த திங்கட் கிழமை இரவு அவள் பணி முடிந்து பெரும்பாக்கத்தை அடுத்த நுங்கம்பாளையத்தில் உள்ள சகோதரி வீட்டுக்கு சென்று விட்டு தாழம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    ஒட்டியம்பாக்கம் - அரசன்கழணி காரனை சாலையில் சென்றபோது வழிப்பறி கும்பல் லாவண்யாவை இரும்பு கம்பியால் தாக்கினர்.

    இதில் அவர் நிலைதடு மாறி கீழே விழுந்தார். உடனே கொள்ளை கும்பல் லாவண்யா வைத்திருந்த செல்போன் மற்றும் மொபட்டை எடுத்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.

    கொள்ளையர்கள் தாக்கிய போது அருகில் கிடந்த கல்லில் விழுந்ததால் லாவண்யாவின் தலையில் படுகாயம் ஏற்பட்டது. மயங்கி கிடந்த அவரை மறுநாள் அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட அவருக்கு நேற்று முன்தினம் நினைவு திரும்பியது. அப்போது கொள்ளையர்களை சும்மா விடக்கூடாது என்று போலீசாரிடம் அவர் கூறினார்.

    கொள்ளை கும்பலை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக செம்மஞ்சேரியை சேர்ந்த ஒருவனை ஏற்கனவே போலீசார் பிடித்து இருந்தனர்.

    இந்த நிலையில் அவன் கொடுத்த தகவலின் படி அவரது நண்பர்கள் மேலும் 2 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. #tamilnews

    ‘என்னை தாக்கிய கொள்ளையர்களை சும்மாவிடக்கூடாது’ என அழுதுகொண்டே பெண் என்ஜினீயர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
    ஆலந்தூர்:

    கொள்ளையர்களால் தாக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பெண் என்ஜினீயருக்கு சுய நினைவு திரும்பியது. இதையடுத்து, அவர் போலீசாரிடம், ‘என்னை தாக்கிய கொள்ளையர்களை சும்மாவிடக்கூடாது’ என அழுதுகொண்டே வாக்குமூலம் அளித்துள்ளார்.

    ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் லாவண்யா (வயது 26). இவர் நாவலூரில் உள்ள கம்ப்யூட்டர் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். கடந்த திங்கட்கிழமை அவர் பணிமுடிந்து பெரும்பாக்கம் நுக்கம்பாளையத்தில் உள்ள சகோதரி வீட்டுக்கு சென்றுவிட்டு நள்ளிரவில் மொபட்டில் நாவலூரை அடுத்த தாழம்பூருக்கு சென்று கொண்டிருந்தார்.

    ஒட்டியம்பாக்கம்-அரசன்கழனி- காரணை சாலையில் சென்றபோது இருட்டான பகுதியில் நின்று கொண்டிருந்த வழிப்பறி கும்பல் லாவண்யாவை மடக்கி சாலையோர முட்புதருக்குள் தூக்கிச்சென்று இரும்பு கம்பியால் கொடூரமாக தலையில் தாக்கினர். இதில் மயங்கி விழுந்த அவரிடம் இருந்து நகைகள், செல்போன் மற்றும் மொபட்டை எடுத்துக்கொண்டு மர்ம கும்பல் தப்பிச்சென்றது.

    சாலையோரத்தில், ரத்த வெள்ளத்தில் கிடந்த லாவண்யாவை ரோந்து போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் 4 பேரை பிடித்து விசாரித்து வந்தனர்.

    இதற்கிடையே, செம்மஞ்சேரியில் உள்ள மதுபான கடையில் நின்று கொண்டிருந்த லாவண்யாவின் மொபட்டை போலீசார் மீட்டனர்.

    இந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட லாவண்யாவுக்கு சுயநினைவு திரும்பியது. இதைத்தொடர்ந்து அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    அதில், என்னை இரும்பு கம்பியால் தாக்கி இந்த நிலைமைக்கு ஆளாக்கிய கொள்ளையர்களை சும்மா விடக்கூடாது. அவர்கள் மனிதநேயமற்றவர்கள். எனக்கு நடந்ததுபோல் வேறு யாருக்கும் நடக்க கூடாது. இந்த சம்பவம் எனக்கு மிகுந்த அதிர்ச்சியையும், மன வேதனையும் ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் மீது கடுமையான சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

    வாக்குமூலம் அளிக்கும்போது அவரால் பேச முடியவில்லை, அழுது கொண்டே இருந்தார்.

    இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேரை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.  #tamilnews


    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வரக்கூடாது என்ற சதியை முறியடித்து வெற்றி பெறும் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டு போக்குவரத்து துறையில் உள்ள குறைபாடுகளை எப்படி களைய வேண்டும், துறையை எப்படி சீர்செய்ய வேண்டும் என்ற ஆய்வறிக்கை வழங்கப்பட்டுள்ளது. அதனை முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

    நல்ல அரசாங்கமாக இருந்தால் யார் நல்ல விஷயத்தை சொன்னாலும் அதில் இருக்கக்கூடிய நல்லதை எடுத்துக்கொண்டு மக்களுக்கு கொண்டுபோய் சேர்க்க வேண்டும். இந்த அரசாங்கம் அதை செய்யுமா? என்று தெரியவில்லை. மக்களை பற்றி கவலைப்படும் அரசாங்கமாக இருந்தால் அதில் இருக்கக்கூடிய விஷயங்களை செயல்படுத்தினால் நிச்சயமாக துறையை காப்பாற்ற முடியும்.

    மக்கள் மீது அதிக கட்டணம் என்ற சுமையை ஏற்றாமல் இருக்க முடியும். தி.மு.க. ஆட்சிக்கு வரக்கூடாது என்று எத்தனையோ ஆண்டுகளாக சில சக்திகள் ஒன்றிணைந்து எதிர்த்துக்கொண்டு தான் இருக்கின்றன. இதை தி.மு.க. முறியடித்து வெற்றி பெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. அந்த வெற்றி இனியும் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    லாரி டிரைவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் காஞ்சீபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த ஒரிக்கை காந்திநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (32). மணல் லாரி டிரைவர். இவரது மனைவி சங்கரி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    கடந்த 12-ந் தேதி மணல் லாரி ஓட்டச்சென்ற சுரேஷ் பின்னர் திரும்பி வரவில்லை. அவரை மனைவி மற்றும் உறவினர்கள் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கீழம்பி ஏரியில் நேற்று மதியம் சதீஷ் பிணமாக கிடந்தார். அவரது உடலில் காயங்கள் காணப்பட்டன. இதனால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

    இது குறித்து பாலுசெட்டி சத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி அறிந்ததும் நேற்று இரவு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சுரேசின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

    அவர்கள் சுரேசை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்று அடித்து கொன்றுவிட்டதாக கூறி ஆஸ்பத்திரி முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வீரமணி, டி.எஸ்.பி. முகிலன் மற்றும் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டனர்.

    கடந்த 12-ந் தேதி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சுரேஷ் ஓட்டி வந்த மணல் லாரியை மடக்கி உள்ளனர். அப்போது சுரேஷ் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் ஏரியில் கொலை செய்யப்பட்டு கிடப்பது உறவினர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சுரேசை மர்ம நபர்கள் யாரேனும் அடித்து கொன்றனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இச்சம்பவம் காஞ்சீபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுரேஷ் உடல் வைக்கப்பட்டு உள்ள காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். #tamilnews

    ஸ்ரீபெரும்புதூர் தனியார் விடுதியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 3 பேர் பலியானது தொடர்பாக விடுதியின் மேலாளர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த போந்துர் பகுதியில் தனியார் கேளிக்கை விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் நேற்று கழிவு நீர் தொட்டி சுத்தம் செய்த போது வி‌ஷயவாயு தாக்கி ஆவடியை அடுத்த நெமிலிச்சேரி பகுதியை சேர்ந்த முருகேசன் (35), மாரி(38), சோமங்கலம் அடுத்த மேலாத்துரை ரவி (36) ஆகிய மூன்று பேரும் பரிதாபமாக பலியாகினர்.

    இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    இந்தநிலையில் 3 பேர் பலியானது தொடர்பாக விடுதியின் மேலாளர்கள் பெருமாள், பத்மகுமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். #tamilnews

    செங்கல்பட்டு மகேந்திரா சிட்டி வளாகத்தில் உள்ள ஏ.டி.எம். இயந்திரத்தை வெல்டிங் மிஷினால் தகர்த்த கொள்ளையர்கள் 20 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மகேந்திரா சிட்டி வளாகத்தில் கார்ப்பரே‌ஷன் வங்கியின் ஏ.டி.எம். உள்ளது.

    இங்கு நள்ளிரவில் கொள்ளையர்கள் சிலர் புகுந்தனர். ஏ.டி.எம். மையத்தின் ‌ஷட்டரை உள்பக்கமாக கீழே இழுத்துவிட்ட அவர்கள் சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்தனர். கியாஸ் வெல்டிங் மிஷினும் இருந்தது. அதனை வைத்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தனர்.

    அதில் 2 அறைகளில் கட்டு கட்டாக பணம் வைக்கப்பட்டிருந்தது. ஒரு அறையில் இருந்த ரூ.20 லட்சம் பணத்தை மூட்டை கட்டி அள்ளிய கொள்ளையர்கள் அங்கிருந்து பணத்துடன் தப்பிச் சென்றனர். இன்னொரு அறையில் இருந்த ரூ.7 லட்சம் பணத்தை கொள்ளையர்கள் கவனிக்காமல் விட்டுச் சென்றனர். இதனால் அந்த பணம் மட்டும் தப்பியது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் வங்கி மேலாளர் செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் செய்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். ஏ.டி.எம். எந்திரத்தின் உள்ளே பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். கொள்ளையர்களின் உருவம் அதில் பதிவாகி இருந்தது.

    வடமாநில கொள்ளையர்கள் போன்ற தோற்றத்தில் இருந்த 2 பேர் முகமூடி அணிந்து காணப்பட்டனர். அவர்களின் கண்கள் மட்டுமே வெளியில் தெரிந்தது. கொள்ளையர்களின் முகம் தெரியவில்லை. இதனால் ஏ.டி.எம்.மில் ரூ.20 லட்சம் பணத்தை கொள்ளையடித்த நபர்கள் யார் என்பது தெரியவில்லை.

    இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கொள்ளையர்களை பிடிக்க வலை விரித்துள்ளனர். தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது ஏ.டி.எம். மையத்தில் இருந்து சுமார் ½ கி.மீ. தூரம் வரையில் ஓடிநின்று விட்டது. கைரேகை நிபுணர்களும் ஏ.டி.எம். மையத்தில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்துள்ளனர். இந்த கைரேகைகள் பழைய குற்றவாளிகளின் கைரேகைகளுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டு வருகிறது. #tamilnews
    சென்னை விமான நிலைய விரிவாக்கம் மற்றும் பாதுகாப்பு பணிகளுக்காக தமிழக அரசு இந்த ஆண்டு இறுதிக்குள் 90 ஏக்கர் நிலம் ஒதுக்கும் என விமான நிலைய ஆணைய இயக்குனர் சந்திரமவுலி நம்பிக்கை தெரிவித்தார்.
    ஆலந்தூர்:

    சென்னை பெருநகர மாநகராட்சியின் ஆலந்தூர் மண்டலம் மற்றும் மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையம் சார்பில் பெருநிறுவன சமுதாய பொறுப்பு திட்டத்தின் கீழ் ரூ.32.6 லட்சம் செலவில் மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கவும், இதற்கான கட்டுமான கட்டிடங்கள் கட்டவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடும் நிகழ்ச்சி நடந்தது.

    பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி முன்னிலையில் சென்னை விமான நிலைய ஆணைய இயக்குனர் சந்திரமவுலி, சென்னை பெருநகர மாநகராட்சி ஆலந்தூர் மண்டல உதவி கமிஷனர் ராமமுர்த்தி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    இந்த நிகழ்ச்சிக்குப்பின் விமான நிலைய ஆணைய இயக்குனர் சந்திரமவுலி நிருபர்களிடம் கூறியதாவது:-

    சாலைகளில் குப்பைகளை கொட்டுவது வருங்கால சந்ததியினருக்கு முக்கிய பிரச்சனையாக மாறிவிடும். இதை கவனத்தில் கொண்டு விமான நிலைய ஆணையத்தின் சமுதாய பொறுப்பு திட்டத்தின்கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு 3 மாதத்தில் பணிகள் முடிந்து உரம் தயாரிக்கப்படும்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து விமான நிலையத்துக்கு வரும் பயணிகளின் வசதிக்காக தானியங்கி நடைபாதை அமைக்கும் பணிகள் ஒரு மாதத்திற்குள் முடிக்கப்படும். விமான நிலையத்தில் பழைய கட்டிடங்களை இணைத்து விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்கான கட்டுமான பணிகளை தொடங்குவதற்காக ரூ.1,500 கோடியில் டெண்டர் கோரப்பட்டு உள்ளது.

    இதைப்போல ரூ.99 கோடியில் ஓடுபாதைகள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகளும் நடந்து வருகிறது. விமான நிலையத்தில் பணிகள் நடப்பதால் பயணிகளுக்கு சிரமங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனினும் பயணிகள் இதற்கு முழு ஒத்துழைப்பு தந்தால் இந்த பணிகள் விரைவாக செய்து முடிக்கப்படும்.

    விமான நிலைய விரிவாக்கத்திற்காக மட்டுமின்றி விமான நிலையத்தில் பாதுகாப்பு பணிகளும் செய்யப்பட வேண்டியிருப்பதால் தமிழக அரசிடம் இருந்து 150 ஏக்கர் கேட்டு இருந்தோம். அதில் 3 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு வழங்கியது. மேலும் 90 ஏக்கர் நிலம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அது கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

    ராணுவத்தின் கட்டுபாட்டில் உள்ள மீதமுள்ள நிலங்களை விரைவாக பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடையாறு ஆற்றில் ஓடுபாதை பற்றி சென்னை ஐ.ஐ.டி. ஆய்வு செய்து உள்ளது. விமான நிலையத்திற்கு மழைக்காலங்களில் தண்ணீர் வராமல் திருப்பி விட அவர்கள் சில பரிந்துரைகள் தந்து உள்ளனர். இது தமிழக அரசிடம் வழங்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

    இவ்வாறு சந்திரமவுலி கூறினார். #tamilnews
    பட்டரைபெரும்புதூரில் அகழாய்வு செய்ய மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கீழடியில் 4-வது கட்டமாக பல தடைகளை தாண்டி அகழாய்வை தொடங்கி இருக்கிறோம். திருவள்ளுர் அருகே பட்டரைபெரும்புதூரில் அகழாய்வை மீண்டும் தொடங்க மத்திய தொல்லியல் துறையின் ஆலோசனை மையத்தில் அனுமதி கேட்கப்பட்டு உள்ளது. அனுமதி கிடைத்ததும் அகழாய்வு தொடங்கும். திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் அமைப்பு நடத்திய அகழாய்வில் மிகப்பெரிய வெற்றி கிடைத்து உள்ளது.

    7 ஆயிரம் கல் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இவை 3 லட்சத்து 85 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஆதிமனிதன் பயன்படுத்தியவை ஆகும். இந்த கண்டுபிடிப்பு உலக அளவில் போற்றப்படுகிறது.

    ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஜூன் மாத இறுதிக்குள் அமைய வேண்டும். இதற்கான நிதி வசூல் ஒரு வாரத்தில் முடிக்கப்படும். தமிழ் இருக்கைக்கு போராசிரியர் நியமிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தென்னிந்திய படிப்புக்கு சிங்கப்பூர் தமிழர் ஒருவர் ஆராய்ச்சிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார். அவர் மார்ச் மாதம் பொறுப்பு ஏற்க உள்ளார். தமிழ் இருக்கை அமைய இதுவரை 5.8 மில்லியன் டாலர் நிதி சேர்ந்து உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

    தமிழ் இருக்கை அமைய உலக தமிழ் ஆராய்ச்சி மையத்தின் முலமாக ரூ.1 கோடியே 85 லட்சம் வந்து உள்ளது. தமிழக அரசின் முலமாக ரூ.11 கோடியே 85 லட்சம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. தி.மு.க. தந்த காசோலையும் நேரடியாக அனுப்பி வைக்கப்படும். நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து ஆகியோரும் அரசு மூலமாக நிதி தந்து உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே மொபட்டில் சென்ற ஆசிரியையிடம் நகை பறிப்பு காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே மோட்டாரசைக்கிளில் சென்ற ஆசிரியரிடம் நகையை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம், கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள வேதாச்சலம் நகர், வேலாயுதம் நகரில் வசித்து வருபவர் சிவசக்தி ஆசிரியை.

    நேற்று இரவு அவர் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு மகளுடன் மொபட்டில் சென்றார். பின்னர் இருவரும் திரும்பி வந்து கொண்டிருந்தனர். காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே வந்த போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென சிவசக்தி ஓட்டி சென்ற மொபட் அருகே நெருங்கி வந்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து இருந்த வாலிபர் சிவசக்தி அணிந்து இருந்த 10 பவுன் நகையை பறித்தார். அதிர்ச்சி அடைந்த சிவசக்தி அவர்களை மொபட்டில் விரட்டி சென்றார்.

    இதற்குள் வேகமாக சென்ற கொள்ளையர்கள் தப்பி சென்று விட்டனர். கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்த சம்பவம் காஞ்சீபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து காஞ்சீபுரம் தாலுக்கா இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    காஞ்சிபுரம் அருகே ஓட்டலில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். #poisonousgas #killed
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ளது போந்தூர். இங்குள்ள ஒரு ஓட்டலில் இன்று கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. தொட்டிக்குள் இறங்கி தொழிலாளர்கள் சுத்தம் செய்தபோது, திடீரென விஷவாயு அவர்களைத்  தாக்கியது. இதனால் தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர். 

    இதில், 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விஷ வாயுவை சுவாசித்து மயக்கமடைந்த 2 பேர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    விஷ வாயு தாக்கி தொழிலாளர்கள் உயிரிழந்ததால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews #poisonousgas #killed
    விமானம் மூலம் மிக்சியில் மறைத்து 2½ கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வரப்படுவதாக செனனை விமான நிலைய சுங்க துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து விமானங்களில் சுங்க துறையினர் இன்று அதிகாலை தீவிர சோதனை நடத்தினர்.

    துபாய் மற்றும் பக்ரைன் விமானத்தில் பயணம் செய்தவர்களின் உடமைகள் சோதனை செய்யப்பட்டன. அப்போது பக்ரைன் விமானத்தில் வந்த சந்தன பாஷா (34) என்பவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார்.

    சந்தேகமடைந்து அவர் கொண்டு வந்த மிக்சியை பிரித்து பார்த்தனர். உள்ளே தங்க கட்டிகளை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அதே போன்று சார்ஜாவில் இருந்து வந்த விமான பயணிகளின் உடமைகள் பரிசோதிக்கப்பட்டன. அப்போது பயாஸ்அகமது (30) என்பவரும் மிக்சியில் மறைத்து தங்க கட்டிகள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

    அவரிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 2 பேரிடம் இருந்தும் பறிமுதல் செய்யப்பட்ட 2½ கிலோ தங்கத்தின் மதிப்பு ரூ.70 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் தங்கம் கடத்தி வந்த சந்தனபாஷா, பயாஸ் அகமது ஆகிய 2 பேரிடமும் சுங்க துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×