என் மலர்
செய்திகள்

காஞ்சிபுரம் அருகே ஓட்டலில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு
காஞ்சிபுரம் அருகே ஓட்டலில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். #poisonousgas #killed
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ளது போந்தூர். இங்குள்ள ஒரு ஓட்டலில் இன்று கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. தொட்டிக்குள் இறங்கி தொழிலாளர்கள் சுத்தம் செய்தபோது, திடீரென விஷவாயு அவர்களைத் தாக்கியது. இதனால் தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர்.
இதில், 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விஷ வாயுவை சுவாசித்து மயக்கமடைந்த 2 பேர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஷ வாயு தாக்கி தொழிலாளர்கள் உயிரிழந்ததால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews #poisonousgas #killed
Next Story






