search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் என்ஜினீயர்"

    • கார் சின்ன சேலத்தில் உள்ள சேலம் சென்னை நெடுஞ்சாலையில் கொங்கு திருமண மண்டபம் அருகே உள்ள மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது.
    • விபத்தில் பிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    பெங்களூரை சேர்ந்தவர் ஜன்னபாவா (வயது 30). அவரது மனைவி பிரியா (23). இவர்கள் இருவரும் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்கள்.

    இந்நிலையில் ஜன்னபாஷ்வா தனது மனைவியுடன் பணிபுரியும் தினேஷ், புபாலன், நிஷ்த்தா ஆகியோருடன் சேர்ந்து புதுச்சேரிக்கு சுற்றுலா செல்ல பெங்களூரில் இருந்து காரில் புறப்பட்டனர்.காரை ஜன்னபாஷ்வா ஓட்டினார். கோயமுத்தூர் வழியே வந்த கார் சின்ன சேலத்தில் உள்ள சேலம் சென்னை நெடுஞ்சாலையில் கொங்கு திருமண மண்டபம் அருகே உள்ள மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் பிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மீதமுள்ள 4 பேரும் காயங்களுடன் உயிர்த்தப்பினர் பின்னர் அடிபட்டவர்களை சின்ன சேலம் அரசு பொது மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சேர்க்க ப்பட்டனர். பிரியாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • ரத்தினபுரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறேன்
    • மத்திய கோ-ஆப்ரட்டிவ் வங்கியில் வேலை காலியாக உள்ளது என தெரிவித்தார்.

    கோவை 

    கோவை ஜோதிபுரம் முதல் வீதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி மாலதி (வயது 30). சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் ரத்தினபுரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறேன். அப்போது ஜெய்கணேஷ் என்பவர் வந்து அறிமுகமானார். அவர் என்னிடம் பிரதம மந்திரி யோஜன திட்டத்திற்காக வந்துள்ளேன் இங்கு எனக்கு அலுவலம் உள்ளது என்றார்.

    மேலும் அவருக்கு அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகளின் பழக்கம் உள்ளது. அரசு வேலை வேண்டும் என்றால் வாங்கி தருகிறேன் மத்திய கோ-ஆப்ரட்டிவ் வங்கியில் வேலை காலியாக உள்ளது. அதற்கு ரூ. 5 லட்சம் செலுத்தினால் வேலை வாங்கிவிடலாம் என்றார்.

    இதனை நான் உண்மை என நினைத்து கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ. 5 லட்சத்தை கொடுத்தேன். அதன்பின்னர் அவர் வேலையில் சேருவதற்காக ஆடரை கொரியர் மூலம் அனுப்பி வைத்தார். அந்த ஆடரை பார்த்தபோது அது போலி என்பது தெரியவந்தது.உடனே நான் அவரது அலுவலகத்துக்கு சென்றேன். ஆனால் அவர் அங்கு இல்லை. போன் செய்த போது அவர் எனது அழைப்பை எடுக்கவில்லை.


    அப்போது தான் அவர் என்னை ஏமாற்றியது தெரியவந்தது. எனவே என்னிடம் வங்கியில் வேலை வாங்கி வருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்த ஜெய்கணேஷ் என்பரை கண்டு படித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது.இதுகுறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×