சின்னசேலத்தில் ேமம்பாலம் தடுப்பு சுவரில் கார் மோதல்- பெண் என்ஜினீயர் பலி

கார் சின்ன சேலத்தில் உள்ள சேலம் சென்னை நெடுஞ்சாலையில் கொங்கு திருமண மண்டபம் அருகே உள்ள மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது.விபத்தில் பிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சின்னசேலத்தில்  ேமம்பாலம் தடுப்பு சுவரில் கார் மோதல்- பெண் என்ஜினீயர் பலி
Published on

கள்ளக்குறிச்சி:

பெங்களூரை சேர்ந்தவர் ஜன்னபாவா (வயது 30). அவரது மனைவி பிரியா (23). இவர்கள் இருவரும் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஜன்னபாஷ்வா தனது மனைவியுடன் பணிபுரியும் தினேஷ், புபாலன், நிஷ்த்தா ஆகியோருடன் சேர்ந்து புதுச்சேரிக்கு சுற்றுலா செல்ல பெங்களூரில் இருந்து காரில் புறப்பட்டனர்.காரை ஜன்னபாஷ்வா ஓட்டினார். கோயமுத்தூர் வழியே வந்த கார் சின்ன சேலத்தில் உள்ள சேலம் சென்னை நெடுஞ்சாலையில் கொங்கு திருமண மண்டபம் அருகே உள்ள மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் பிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மீதமுள்ள 4 பேரும் காயங்களுடன் உயிர்த்தப்பினர் பின்னர் அடிபட்டவர்களை சின்ன சேலம் அரசு பொது மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சேர்க்க ப்பட்டனர். பிரியாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com