search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lorry driver killed"

    • மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்று வருவதாக மனைவி யிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.
    • அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மணி ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள இளநகர், மேட்டுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மணி (வயது 57) லாரி டிரைவர். இவரது மனைவி செல்வராணி. இவர்களுக்கு பிரியா என்ற ஒரு மகளும் ஜீவா என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் மணி நேற்று முன்தினம் இரவு வீட்டி லிருந்து தனது மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்று வருவதாக மனைவி யிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.

    அவர் தனது மோட்டார் சைக்கிளில் திருச்செங் கோட்டில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் சாயக்காடு பிரிவு ரோடு அருகே சென்று கொண்டி ருந்தார். அப்போது அவ ருக்கு பின்னால் அதிவேக மாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மணி ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் நிலைத்தடுமாறி மோட்டார் சைக்கிள் உடன் மணி கீழே விழுந்தார். அதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதைப் பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மணி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

    இதுகுறித்து வேலக வுண்டன்பட்டி போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் போலீ சார் வழக்கு பதிவு செய்து மணியின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கி டங்கில் வைத்து இச்சம்பவம் குறித்து போலீசார் மணியின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற அடை யாளம் தெரியாத வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின் கம்பியில் லாரி உரசியதால் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    வாலாஜா அடுத்த புலித்தாங்கல் கிராம அருந்ததி பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலசுந்தரம் (வயது 38), லாரி டிரைவர்.

    இவர் நேற்று காலை தென்கடப்பந்தங்கல் பகுதியில் உள்ள கல் குவாரியில் டிப்பர் லாரியின் தொட்டியை தூக்கியபோது எதிர்பாராத விதமாக மின்கம்பியில் உரசி உள்ளது.

    இதில் பாலசுந்தரம் மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். இது குறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரியில் லாரி டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்டதில் பரிதாபமாக இறந்தார். அவரிடம் தகராறில் ஈடுபட்டவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பெரும்பாலையை அடுத்துள்ள சானார்பட்டி பகுதியை சேர்ந்தவர் சாமுண்டி. இவரது மகன் சீனிவாசன் (வயது38). இவர் அடகாசன அள்ளியை சேர்ந்த சுதாகர் என்பவருக்கு சொந்தமான லாரியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர்கள் இரண்டு பேரும் பென்னாகரம் மேம்பாலம் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லாரி நிறுத்தும் இடத்தில் லாரியை நிறுத்தி விட்டு மது அருந்தினர். 

    குடிபோதையில் ஒருவருக்கொருவர் தகராறு செய்து கொண்டு 2 பேரும் தாக்கி கொண்டனர். இதில் சீனிவாசனின் உடல் மிகவும் சோர்ந்து காணப்பட்டார். அங்குள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சீனிவாசன் வீட்டில் மயக்கம்  அடைந்து கீழே விழுந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சீனிவாசனுக்கு தலையில் ரத்த கசிவு ஏற்பட்டதாக தெரிவித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக  இறந்தார்.

    இதையடுத்து சீனிவாசனுக்கு சுதாகருக்கும் நடந்த தகராறில் இவர் இறந்திருக்கலாம் என்று உறவினர்கள் தருமபுரி டவுன் போலீசில் புகார் கொடுத்தனர். உடனே போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சீனிவாசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் இந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்து சீனிவாசனிடம் தகராறில் ஈடுபட்ட சுதாகரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×