என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி டிரைவர் பலி"

    • அவ்வழியாக வந்த வேன் எதிர்பாராத விதமாக முத்து மீது பலமாக மோதியது.
    • இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    பெருந்துறை:

    திருச்சி பொன்மலை பகுதியை சேர்ந்தவர் முத்து (வயது 45). லாரி டிரைவர்.

    இவர் சம்பவத்தன்று திருப்பூர் பகுதியில் லோடு இறக்கி விட்டு வீட்டிற்கு செல்வதற்காக லாரியை எடுத்துக்கொண்டு வந்துள்ளார்.

    இந்நிலையில் சாப்பிடுவதற்காக லாரியை பெருந்துறை சரளை அருகே ரோட்டின் ஓரத்தில் நிறுத்தி விட்டு ரோட்டை கடந்து மறுபுறம் ஓட்டலை நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அவ்வழியாக வந்த வேன் எதிர்பாராத விதமாக முத்து மீது பலமாக மோதியது. இதில் தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    பின்னர் இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் முத்துவின் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • சோழபுரம் வெக்காளியம்மன் கோவில் அருகே லாரி சென்றபோது எஞ்சினில் ஏர் லாக் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
    • வாயால் ஊதி ஏர் லாக்கை வேலுசாமி அகற்ற முயன்றார். அப்போது அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    ராஜபாளையம்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மருதப்பபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் வேலுசாமி (வயது 65). லாரி டிரைவரான இவர் சங்கரன்கோவிலில் இருந்து லோடு ஏற்றிக்கொண்டு ராஜபாளையம் அருகில் உள்ள சத்திரப்பட்டிக்கு வந்தார். அங்கு லோடு இறக்கிவிட்டு மீண்டும் சங்கரன்கோவில் புறப்பட்டார்.

    சோழபுரம் வெக்காளியம்மன் கோவில் அருகே லாரி சென்றபோது எஞ்சினில் ஏர் லாக் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வாயால் ஊதி ஏர் லாக்கை வேலுசாமி அகற்ற முயன்றார். அப்போது அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வேலுசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வேலுசாமியின் மகன் சின்னராஜ் கொடுத்த புகாரின் பேரில் தளவாய்புரம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மின் கம்பியில் லாரி உரசியதால் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    வாலாஜா அடுத்த புலித்தாங்கல் கிராம அருந்ததி பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலசுந்தரம் (வயது 38), லாரி டிரைவர்.

    இவர் நேற்று காலை தென்கடப்பந்தங்கல் பகுதியில் உள்ள கல் குவாரியில் டிப்பர் லாரியின் தொட்டியை தூக்கியபோது எதிர்பாராத விதமாக மின்கம்பியில் உரசி உள்ளது.

    இதில் பாலசுந்தரம் மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். இது குறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்று வருவதாக மனைவி யிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.
    • அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மணி ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள இளநகர், மேட்டுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மணி (வயது 57) லாரி டிரைவர். இவரது மனைவி செல்வராணி. இவர்களுக்கு பிரியா என்ற ஒரு மகளும் ஜீவா என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் மணி நேற்று முன்தினம் இரவு வீட்டி லிருந்து தனது மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்று வருவதாக மனைவி யிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.

    அவர் தனது மோட்டார் சைக்கிளில் திருச்செங் கோட்டில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் சாயக்காடு பிரிவு ரோடு அருகே சென்று கொண்டி ருந்தார். அப்போது அவ ருக்கு பின்னால் அதிவேக மாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மணி ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் நிலைத்தடுமாறி மோட்டார் சைக்கிள் உடன் மணி கீழே விழுந்தார். அதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதைப் பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மணி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

    இதுகுறித்து வேலக வுண்டன்பட்டி போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் போலீ சார் வழக்கு பதிவு செய்து மணியின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கி டங்கில் வைத்து இச்சம்பவம் குறித்து போலீசார் மணியின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற அடை யாளம் தெரியாத வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மலைபாதையில் இரவு நேரத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பதால் காலையில் செல்ல பண்ணாரியம்மன் கோவில் அருகே சீனிவாசன் லாரியை நிறுத்தினார்.
    • ஏராளமான லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது.

    சத்தியமங்கலம்:

    கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (40) லாரி டிரைவர். இவர் கோவை மாவட்டம் சூலூருக்கு லோடு ஏற்றிக்கொண்டு சென்றார்.

    அங்கு லோடு இறங்கி விட்டு மீண்டும் நேற்று இரவு 11 மணியளவில் சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் கோவில் அருகே வந்தார். அப்போது இரவு நேரத்தில் மலைபாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பதால் காலையில் செல்ல பண்ணாரியம்மன் கோவில் அருகே லாரியை நிறுத்தினார்.

    இதே போல் ஏராளமான லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது நள்ளிரவு 12 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை பண்ணாரியம்மன் கோவில் பகுதிக்கு வந்தது.

    அப்போது அந்த ஒற்றை யானை வாகனங்களை நோக்கி வந்தது. அப்போது சீனிவாசன் மற்றும் டிரைவர்கள் யானையை விரட்டினர். மேலும் வனத்துறையினரும் பட்டாசு வெடித்து யானையை விரட்ட முயன்றனர்.

    இந்த நிலையில் அந்த யானை திடீரென விரட்டியவர்களை நோக்கி ஓடி வந்தது. அப்போது அனைவரும் யானையிடம் இருந்து தப்பித்து ஓட்டம் பிடித்தனர். அப்போது சீனிவாசனும் தப்பி ஓடினார். அந்த நேரத்தில் திடீரென கீழே இருந்த கல் தடுக்கி அவர் கீழே விழுந்தார்.

    இதையடுத்து சீனிவாசனை யானை மிதித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். அனைவரது கண் முன்பே அவர் துடிதுடித்து பலியானார். பின்னர் சத்தம் போட்டும், பட்டாசு வெடித்தும் யானையை விரட்டினர்.

    பின்னர் யானை தாக்கி பலியான சீனிவாசன் உடலை சத்தியமங்கலம் போலீசார் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ×