என்ஜின் ஏர் லாக்கை வாயால் ஊதி அகற்ற முயன்ற லாரி டிரைவர் பலி

என்ஜின் ஏர் லாக்கை வாயால் ஊதி அகற்ற முயன்ற லாரி டிரைவர் பலி

சோழபுரம் வெக்காளியம்மன் கோவில் அருகே லாரி சென்றபோது எஞ்சினில் ஏர் லாக் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாயால் ஊதி ஏர் லாக்கை வேலுசாமி அகற்ற முயன்றார். அப்போது அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
Published on

ராஜபாளையம்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மருதப்பபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் வேலுசாமி (வயது 65). லாரி டிரைவரான இவர் சங்கரன்கோவிலில் இருந்து லோடு ஏற்றிக்கொண்டு ராஜபாளையம் அருகில் உள்ள சத்திரப்பட்டிக்கு வந்தார். அங்கு லோடு இறக்கிவிட்டு மீண்டும் சங்கரன்கோவில் புறப்பட்டார்.

சோழபுரம் வெக்காளியம்மன் கோவில் அருகே லாரி சென்றபோது எஞ்சினில் ஏர் லாக் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வாயால் ஊதி ஏர் லாக்கை வேலுசாமி அகற்ற முயன்றார். அப்போது அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வேலுசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வேலுசாமியின் மகன் சின்னராஜ் கொடுத்த புகாரின் பேரில் தளவாய்புரம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com