search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில்  ஆட்டோ மோதி  வாலிபர் பலி  போலீசார் விசாரணை
    X

    சேலத்தில் ஆட்டோ மோதி வாலிபர் பலி போலீசார் விசாரணை

    • கங்கா கர்த்தி பகுதியை சேர்ந்தவர் சங்கரப்பா, இவருடைய மகன் சென்னப்பா (வயது 30).
    • அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் வந்த ஆட்டோ, அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    சேலம்:

    கர்நாடகா மாநிலம் மைசூர் லிங்கரஹள்ளி கங்கா கர்த்தி பகுதியை சேர்ந்தவர் சங்கரப்பா, இவருடைய மகன் சென்னப்பா (வயது 30). இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் செவ்வாய்ப்பேட்டை தேர்வீதிக்கு வந்தார். இங்கு அவர் கிடைக்கும் வேலை செய்து, இரவு நேரத்தில் கடைகள் பூட்டிய பிறகு துளசி மளிகை கடையின் அருகே படுத்துக்கொள்வார்.

    கடந்த மாதம் 23-ந்தேதி மாலை 6 மணி அளவில் துளிசி மளிகை கடை அருகில் சென்னப்பா நடந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் வந்த ஆட்டோ, அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் சென்னப்பாவுக்கு கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்ட அவரை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி அன்று சிகிச்சை பலனளிக்காமல் சென்னப்பா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சென்னப்பா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கர்நா டகா மாநிலத்தில் உள்ள மேற்கண்ட முகவரிக்கு சென்று போலீசார் விசாரித்தனர். அந்த முகவரியில் சென்னப்பா வின் உறவினர்கள் யாரும் இல்லை. அவர் கொடுத்த முகவரி தவறாக உள்ளது என தெரியவந்தது. இத னால் உடலை ஒப்படைக்க முடியாத நிலை உள்ளது. எனவே இவரை பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் அது குறித்து போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கும்படி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    இதனிடையே போலீசார் விபத்துக்கு காரணமான ஆட்டோவை வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×