search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமேசுவரத்தில் பலத்த மழை- கோவில் முதல் பிரகாரத்தில் புகுந்த மழை வெள்ளம்

    • மழை வெள்ளம் காரணமாக முதல் பிரகாரத்தில் உள்ள சிவசக்தி சன்னதியில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.
    • கடல் மட்டத்தைவிட கோவில் தாழ்வாக அமைந்துள்ளதால் மழைநீர் வெளியேற முடியாமல் கோவில் வளாகத்தில் தேங்கியதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் நேற்று நள்ளிரவு சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் முதல் பிரகாரத்தில் மழை வெள்ளம் புகுந்தது.

    கோவிலில் அமைந்துள்ள வடிகால்களில் மழை வெள்ளம் அதிக அளவில் பெருக்கெடுத்து வந்ததால் அந்த தண்ணீர் வெளியேறி முதல் பிரகாரத்தில் தேங்கியது. இன்று அதிகாலை அங்கு குளம்போல் தண்ணீர் தேங்கி இருந்தது. இதனால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதில் சிரமம் ஏற்பட்டது.

    உடனடியாக கோவில் தூய்மை பணியாளர்கள் அனைவரும் அங்கு வரவழைக்கப்பட்டு தண்ணீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு மழைநீர் அகற்றப்பட்டது. அதன் பின்னர் பக்தர்கள் வழக்கம்போல் சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த மழை வெள்ளம் காரணமாக முதல் பிரகாரத்தில் உள்ள சிவசக்தி சன்னதியில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. ராமேசுவரத்தில் நேற்று மட்டும் 73 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கடல் மட்டத்தைவிட கோவில் தாழ்வாக அமைந்துள்ளதால் மழைநீர் வெளியேற முடியாமல் கோவில் வளாகத்தில் தேங்கியதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×