என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் ரூ.89.11 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்- சுங்கத்துறையினர் நடவடிக்கை
- விமான கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பசை வடிவ தங்கம்.
- ஐக்கிய அரபு அமீரக பயணியிடம் ரூ.55.96 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.
சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு துபாயிலிருந்து கடந்த 07.09.2022 அன்று வந்த இன்டிகோ விமானத்தின் முன்பக்க கழிவறையின் டிஷ்யூ வைக்கும் தட்டின் பின்புறம், பசை வடிவில் மறைத்து வைத்திருந்த 740 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.33.15 லட்சம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதேபோல், 09.09.2022 அன்று, ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் வந்திறங்கிய அஷ்பேக் ஹாசனை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவரது மலக்குடலில் பசை வடிவில் பதுக்கி வைத்திருந்த தங்கம், மற்றும் உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த தங்கச்சங்கிலி ஆகியவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 1,249 கிலோ எடைக்கொண்ட அவற்றின் மதிப்பு ரூ.55.96 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு சோதனைகள் மூலம் மொத்தம் ரூ.89.11 லட்சம் மதிப்பிலான, 1.989 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை இணைஆணையர் எம்.மேத்யூ ஜோலி குறிப்பிட்டுள்ளார்.