search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு முன்னேற்பாடு கூட்டம் - எஸ்.பி. பாலாஜி சரவணன் தலைமையில் நடந்தது
    X

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்த காட்சி.


    தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு முன்னேற்பாடு கூட்டம் - எஸ்.பி. பாலாஜி சரவணன் தலைமையில் நடந்தது

    • விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ஏற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.
    • போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்து போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆலோசனை வழங்கினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மற்றும் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ஏற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.

    ஆலோசனை

    கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கினார். மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் ஆலோசனைகள் வழங்கினார்.

    வருகிற 31-ந்தேதி நடைபெற இருக்கும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், போலீசார் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அறிவுரைகள் வழங்கி பேசினார்.

    கலந்து கொண்டவர்கள்

    கூட்டத்தில் வக்கீல்கள் மோகன்தாஸ், முருகபெருமாள், ஆனந்தன், முருகேசன், அசோக், ஆலன்ராயன், ராஜேஷ் கண்ணா, தூத்துக்குடி தடய அறிவியல் துறை உதவி இயக்குநர் கலாலெட்சுமி, தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு,

    தூத்துக்குடி ஊரக உதவி போலீஸ் கமிஷனர் சந்தீஸ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சத்தியராஜ், ஆவுடையப்பன், மாயவன், லோகேஷ்வரன், வெங்கடேஷ், பிரகாஷ், அருள், மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு பிரேமானந்தன், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு சம்பத், மதுவிலக்கு அமலாக்க பிரிவு சிவசுப்பு உட்பட மாவட்டத்தின் அனைத்து இன்ஸ்பெக்டர்களும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×