search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலவச மனை வழங்க வேண்டும்- கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள் மனு
    X

    கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த திருநங்கைகள்.

    இலவச மனை வழங்க வேண்டும்- கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள் மனு

    • எங்களுக்கு வீடு, நிலமும் இல்லை, வாடகைக்கும் வீடு எதுவும் கிடைக்கவில்லை.
    • எங்களின் வாழ்வாதாரம் உயர அரசு வழங்கும் ரூ.50 ஆயிரம் லோன் மானியம் வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.

    மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    அப்போது தஞ்சை மாவட்ட த்தை சேர்ந்த திருநங்கைகள் அளித்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

    நாங்கள் 100 நபர்கள் உள்ளோம். எங்களுக்கு வீடு, நிலம் இல்லை. வாடகைக்கும் வீடு எதுவும் கிடைக்கவில்லை.

    இருக்க இடம் இல்லாமல் தவித்து வருகிறோம்.

    எனவே திருநங்கைகள் அனைவருக்கும் அரசு வழங்கும் இலவச மனை வழங்க வேண்டும்.

    இதே போல் எங்களின் வாழ்வாதாரம் உயர அரசு வழங்கும் ரூ.50 ஆயிரம் லோன் மானியம் வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×