search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வன அதிகாரி, 3 ஊழியர்கள்  சஸ்பெண்ட் ஆகிறார்கள்
    X

    வன அதிகாரி, 3 ஊழியர்கள் சஸ்பெண்ட் ஆகிறார்கள்

    • 200-க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி பாதை அமைக்கும் பணி நடந்தது.
    • கூடுதல் தகவல் பெறப்படும் வகையில் கண்ணன் தலைமையில் 13 பேர் அடங்கிய சிறப்பு விசாரணை குழு

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் அரங்கம் கிராம பகுதியை ஒட்டி சேர்வராயன் வடக்கு வனச்சராக காப்புக்காடு உள்ளது. அங்குள்ள 200-க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி பாதை அமைக்கும் பணி நடந்தது. இதற்கு வனத்துறையினர் உடந்தையாக இருந்து மக்களிடம் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து வன அலுவலர் பரசுராமமூர்த்தி, மற்றும் வனவர்கள் சொன்ன கிருஷ்ணன், ராகுல் ,பொன்னுசாமி ஆகியோருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது .அவர்கள் விளக்கங்களை சேலம் கோட்டவன அலுவலர் கவுதமுக்கு அனுப்பினார் .

    இதனிடையே கோட்ட வன அலுவலர் கவுதம் மரங்கள் வெட்டப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து விசாரித்தார் .தொடர்ந்து உதவி வனபாதுகாவலர் கண்ணன் விசாரித்து வன அலுவலருக்கு அறிக்கை அளித்தார். இதை தொடர்ந்து கூடுதல் தகவல் பெறப்படும் வகையில் கண்ணன் தலைமையில் 13 பேர் அடங்கிய சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. அவர்களும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்தனர்.இந்த விசாரணை அறிக்கை வன அதிகாரி கவுதம் மூலம் சேலம் மண்டல வன பாதுகாவலர் பெரியசாமியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது .இதனால் மரம் வெட்டப்பட்ட விவகாரத்தில் தொடர்பு உடைய 4 பேரும் விரைவில் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில் இந்த விவகாரத்தில்குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் சஸ்பெண்டு செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்றனர்.

    Next Story
    ×