என் மலர்tooltip icon

    ஈரோடு

    • ஆசனூர் இருந்து காரப்பள்ளம் செல்லும் சாலையில் வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் சுமார் 5-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வெளியேறி கரும்பு லாரியை எதிர்பார்த்து ரோட்டில் உலாவியது.
    • வனப்பகுதி சாலைகளில் அடிக்கடி யானைகள் வருவதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானைகள் உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

    இந்த வனச்சரகத்தின் வழியாக திண்டுக்கல்லில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அப்போது சாலையை கடந்து செல்வது வழக்கம்.

    கடந்த சில நாட்களாக கரும்புகளை தின்பதற்காக யானைகள் குட்டியுடன் சாலையில் உலா வருவதும் வாகனங்களை வழிமறித்து கரும்புகளை தின்பதும் தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் நேற்று ஆசனூர் இருந்து காரப்பள்ளம் செல்லும் சாலை யில் வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் சுமார் 5-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வெளியேறியது. யானைகள் கூட்டம் கரும்பு லாரியை எதிர்பார்த்து ரோட்டில் உலாவியது. தொடர்ந்து யானைகள் சாலையை வழி மறித்தது.

    இதை கண்ட அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி கொண்டனர். ஆனால் யானைகள் அங்கேயே சுற்றி கொண்டே இருந்தது.

    இதனால் தமிழகம்- கர்நாடகம் இடையே போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் அணி வகுத்து நின்றன. சில வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல்  புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். சுமார் 30 நிமிடத்துக்கு மேலாக சாலையை வழி மறைத்த யானைகள் கரும்பு லாரிகள் வராததால் சிறுது நேரத்துக்கு பிறகு வனப்பகுதிக்கு சென்றது.

    கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் சாலையில் உலா வருவதும் வாகனங்களை துரத்துவதும் வடிக்கையாகிவிட்டது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

    இதையொட்டி வனப்பகுதி சாலைகளில் அடிக்கடி யானைகள் வருவதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரி க்கை விடுத்துள்ளனர்.

    • நேற்று இரவு நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு இன்று காலை நீர்வரத்து அதிகரித்து வந்தது.
    • பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக 905 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வந்தது. நீர்வரத்தை காட்டிலும் தொடர்ந்து பாசனத்துக்காக அதிக அளவில் பவானி சாகர் அணையின் நீர் வெளி யேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வந்தது.

    இந்நிலையில் நேற்று இரவு நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு இன்று காலை நீர்வரத்து அதிகரித்து வந்தது.இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.53 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 905 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 800 கன அடி, கீழ்பவானி வாய்க்கா லுக்கு 5 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக 905 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    • சி.சி.டி.வி. கேமிரா காட்சி அடிப்படையில் டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர்.
    • அவர்களிடம் இருந்து 10.5 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட்டில் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (60). கடந்த 6-ந் தேதி வெளியே சென்ற போது பின்னால் மோட்டார் சைக்கிளில் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இவர் கழுத்தில் இருந்த 5 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.

    இதேப்போல் தாலுகா, வீரப்பன்சத்திரம் பகுதிகளிலும் அடுத்தடுத்து நகை பறிப்பு சம்பவம் நடந்தது. இதையடுத்து அந்த பகுதியில் பொருத்த ப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சி அடிப்படையில் டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 14-ந் தேதி திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஹரிஹரன் (23), கோபிநாத் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 7.25 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அதுசமயம் இவர்களுடன் சேர்ந்து நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த திருப்பூரை சேர்ந்த ஜனகராஜ் மற்றும் பிரபாகரனை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று வாகன சோதனையில் இருவரும் சிக்கினர். இதில் ஜனகராஜ் மட்டும் ஈரோட்டில் 8 இடங்களில் செல்போன், நகை பறிப்பில் ஈடுபட்டு உள்ளார். 9-வது முறையாக ஜனகராஜ் நகை பறிப்பில் ஈடுபட முயன்றபோது போலீசாரிடம் சிக்கியு ள்ளார்.

    இவர்களிடம் இருந்து 10.5 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் ஜூன் மாதத்திற்கான வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 24-ந் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
    • இக்கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஜூன் 2022-ம் மாதத்திற்கான வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் வரும் 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

    அன்றைய தினம் காலை 10 மணிமுதல் 11.ஈரோடு மாவட்டத்தில் ஜூன் 2022-ம் மாதத்திற்கான வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் வரும் 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.30 வரை மனுக்கள் பெறப்படும். 11.30 மணி முதல் 12.30 மணி வரை விவசாய சங்கப்பிரதிநிதிகள் விவசாயம் தொடர்பான தங்களது பகுதி பிரச்சினைகள் குறித்து கருத்துக்கள் தெரிவிக்கலாம்.

    மேலும் மதியம் 12.30 முதல் 1.30 முடிய அலுவலர்களின் விளக்கங்களும் தெரிவிக்கப்பட உள்ளது. இக்கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

    • பிளஸ்-1 படிக்கும் பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்ளவதாக தொல்லை கொடுத்து வந்தார்.
    • சிவகிரி போலீசில் புகார் செய்ததையத்து போலீசார் போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துசிறையில் அடைத்தனர்.

    ஈரோடு:

    சிவகிரி ஓலப்பாளையத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (28). இவர் தனியார் பஸ் டிரைவராக உள்ளார்.

    அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்ளவதாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து பள்ளி மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார்.

    மாணவியின் பெற்றோர் சிவகிரி போலீசில் புகார் செய்ததையத்து போலீசார் போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துசிறையில் அடைத்தனர்.

    • ஈரோடு ஜவுளி சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
    • சில்லரை வியாபாரம் 30 சதவீதம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு ஜவுளி சந்தை வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறுவது வழக்கம். இந்த ஜவுளி சந்தையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள், வெளிமாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து ஜவுளி ரகங்களை மொத்த விலைக்கு கொள்முதல் செய்து வருகின்றனர்.

    கொரோனா தாக்கம் காரணமாக ஜவுளி சந்தை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக அதிலிருந்து மீண்டு வந்த நிலையில் நூல் விலை உயர்வு காரணமாக கடந்த சில வாரங்களாக ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்தமாக நடந்து வந்தது. இந்நிலையில் தொடர் முகூர்த்த நாள், பள்ளி திறப்பையொட்டி கடந்த வாரம் ஜவுளி சந்தையில் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.

    அதேபோல் இந்த வாரமும் ஜவுளி சந்தையில் சில்லரை வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து திறக்கப்ப ட்டுள்ளன. இதனால் பள்ளி சீருடைகள் வாங்க பெற்றோர்கள் திரண்டனர். ஜவுளி சந்தையில் பள்ளி சீருடைகளுக்கு கிராக்கி நிலவுகிறது.

    இதேப்போல லஞ்ச் டவல், பனியன் ஜட்டிகள் விற்பனையும் சிறப்பாக இருந்தது. இன்று சில்லரை விற்பனை 30 சதவீதம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதேநேரம் மொத்த வியாபாரம் சுமாராகவே நடந்தது.

    இப்போதும் ஆந்திரா, கர்நாடகா மாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்து ஜவுளி ரகங்களை அள்ளி செல்வார்கள். ஆனால் இன்று ஆந்திரா, கர்நாடகா வியாபாரிகள் வரவில்லை. இதன் காரணமாக மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. 10 சதவீதம் அளவு கூட நடைபெறவில்லை. ஒரு சில கேரளா வியாபாரிகள் மட்டும் வந்திருந்தனர். ஆனி மாதம் தொடங்கி விட்டதால் அதிக அளவு முகூர்த்தம் இல்லை. இதனால் ஜவுளி வியாபாரம் சுமாராகவே நடந்தது.

    • ஈரோடு மாவட்டம் முழுவதும் 110 சைபர் கிரைம் போலீசார் அனைத்து போலீஸ் நிலையங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு ஈரோடு செங்குந்தர் பள்ளியில் பயிற்சி நடந்தது.
    • பொது மக்களின் புகார்களை எவ்வாறு பெறுவது அவற்றை எவ்வாறு தீர்க்க நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் சைபர் க்ரைம் போலீஸ் பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவின் ஏ.டி.எஸ்.பி.யாக ஜானகி ராமன் உள்ளார். மாவட்டத்தில் சைபர் கிரைம் தொடர்பான வழக்குகள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    குறிப்பாக சமூக வலை தளம் மோசடி குறித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. சைபர் கிரைம் தொடர் தொடர்பாக ஒரு குற்றம் நடந்தால் 24 நேரத்திற்குள் பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைமில் புகார் அளித்தால் போலீசார் துரிதமாக செயல்பட்டு சம்பந்தப்பட்ட இணையதளத்தை முடக்கி பணத்தை திரும்பப் பெற்றுக் கொடுக்க முடியும் என்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    சைபர் கிரைம் பிரிவு ஈரோடு எஸ.பி. அலுவலகத்தில் மட்டுமே உள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் புகாரை விசாரிப்பதற்கு ஏதுவாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் 3 சைபர் பிரிவு போலீசார் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    இதில் ஒரு எஸ்.எஸ்.ஐ, அவருக்கு 2 போலீசார் இருப்பார்கள். அவர்கள் சைபர் கிரைம் தொடர்பான புகார்களை பெற்று அதனை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பார்கள்.

    இவ்வாறாக மாவட்டம் முழுவதும் 110 சைபர் கிரைம் போலீசார் அனைத்து போலீஸ் நிலையங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பயிற்சி இன்று ஈரோடு செங்குந்தர் பள்ளியில் நடந்தது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமை தாங்கினார். சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி. ஜானகிராமன் முன்னிலை வகித்தார். இதில் கலந்துகொண்ட சைபர்கிரைம் போலீசாருக்கு பொது மக்களின் புகார்களை எவ்வாறு பெறுவது அவற்றை எவ்வாறு தீர்க்க நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    • ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 719 ஆக உயர்ந்துள்ளது.
    • தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 14 நாட்களாக தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மேலும் ஒரே நாளில் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 719 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 957 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 15 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் லேசான அறிகுறியே இருப்பதால் அவர்கள் மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டில் தனிமையிலிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • ஞாயிற்றுக்கிழமை இரவு வயிற்று வலியால் அவதிப்பட்ட கவுந்தப்பாடியை சேர்ந்த முருகேசன் என்பவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
    • அங்கு அவருக்கு புறநோயாளிகள் பிரிவில் டோக்கன் வழங்காமலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டாரத்தை சேர்ந்த கவுந்தப்பாடி பஞ்சாயத்து, சலங்கபாளையம் பேரூராட்சி ,பி.மேட்டுப்பாளையம் பேரூராட்சி, ஓடத்துறை, பெரியபுலீயூர், ஆலத்தூர் பஞ்சாயத்துக்குட்பட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உள்நோயாளிகளாகவும், வெளிநோயாளிகளாகவும் தினமும் 500-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த ஆஸ்பத்திரியின் தலைமை மருத்துவராக குருப்பநாய்கன் பாளையத்தை சேர்ந்த தினகரன் (57) உள்ளார். இவருடன் முதுநிலை உதவி மருத்துவர்களாக அசோக், வினோத்குமார், சரவணக்குமார், சண்முகவடிவு ஆகிய மருத்துவர்களும், 10-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மருந்தாளளுனர்கள் பணி செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் தலைமை மருத்துவர் தினகரன் கடந்த ஞாயிற்றுகிழமை முறையாக விடுப்பு எடுக்காமல் மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றுள்ளார். மருத்துவம் படித்துவிட்டு வீட்டு ஹவுஸ் சர்ஜனாக உள்ள மகன் அஸ்வின் (24) என்பவரை கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்குமாறு கூறி சென்றுள்ளார். அஸ்வினும் காலை முதல் இரவு வரை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்துள்ளார்.

    இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வயிற்று வலியால் அவதிப்பட்ட கவுந்தப்பாடியை சேர்ந்த முருகேசன் என்பவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு புறநோயாளிகள் பிரிவில் டோக்கன் வழங்காமலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பெற்ற முருகேசன் தலைமை மருத்துவர் குறித்து விசாரித்தபோது அவர் விடுமுறையில் சென்றுள்ளதாகவும், தான் பவானி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியில் உள்ளதாகவும் அஸ்வின் கூறியுள்ளார்.

    ஆனால் அவர் அரசு மருத்துவராக பணி செய்யவில்லை என்பதும் தலைமை மருத்துவர் தினகரன் மகன் என்பதும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல்கள் வெளிவரவே கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பணிகள் இணை இயக்குனர் கோமதி நேரில் சென்று விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டார். இதற்கிடையில் தலைமை மருத்துவர் தினகரன் ஈரோடு மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் முன்னிலையில் ஆஜராகி தன்னிலை விளக்கம் அளித்தார்.

    அவரது விளக்கத்தை ஏற்காத இணை இயக்குநர் கோமதி நேற்று கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று செவிலியர்கள், பணியாளர்கள், தலைமை மருத்துவர் தினகரன் உள்பட அனைவரிடமும் 4 மணி நேரம் விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் தலைமை மருத்துவர் தினகரன், அவரது மகனை சிகிச்சை பார்க்க வைத்தது உறுதி செய்யப்பட்டது. இதேபோல் சில மருத்துவர்கள் பணியில் இல்லாததும் தெரிய வந்தது. இந்த விசாரணை அறிக்கையை மாநில மருத்துவ பணிகள் இயக்குனருக்கு அனுப்பி வைத்தார்.

    இந்நிலையில் மகனை சிகிச்சை பார்க்க வைத்த கவுந்தப்பாடி தலைமை மருத்துவர் தினகரன், பணி நேரத்தில் பணியில் இல்லாத பெண் மருத்துவர் சண்முகவடிவு ஆகியோரை சஸ்பெண்டு செய்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். இந்த சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒற்றை தலைமை வேண்டுமென எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
    • ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.

    ஈரோடு:

    அ.தி.மு.க.வின் பொதுக்குழு வருகிற 23-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கான மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது.

    அப்போது ஒற்றை தலைமை வேண்டுமென எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்தனர். இதற்கு ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து இரட்டை தலைமையை தொடர வேண்டும் என்று கூறி வருகின்றனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஏற்றை தலைமை கோஷம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இந்நிலையில் தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். இதேபோல் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். போஸ்டர் யுத்தத்தால் பரபரப்பு நிலவி வருகிறது.

    ஈரோடு மாவட்டத்திலும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணி ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

    அந்த போஸ்டரில் கழகத்தின் பொதுச்செயலாளரே, தமிழகத்தின் எதிர்காலமே, கட்சியின் காவல் தெய்வமே, அ.தி.மு.க தொண்டர்களில் உயிர்மூச்சே, எங்களின் நிரந்தர தலைவர், எடப்பாடியாரே வாழ்க! வாழ்க!! போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

    ஈரோடு மாநகர் பகுதியில் காளைமாடு சிலை, பன்னீர்செல்வம் பார்க், பஸ் நிலையம் அருகே, கருங்கல் பாளையம், வீரப்பன்சத்திரம், மொடக்குறிச்சி பகுதி முழுவதும் மக்கள் கூடும் இடங்களில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

    • ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 13 நாட்களாக தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
    • பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் லேசான அறிகுறியே இருப்பதால் அவர்கள் மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டில் தனிமையிலிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 13 நாட்களாக தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மேலும் ஒரே நாளில் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 714 ஆக உயர்ந்துள்ளது. நேற்று கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

    இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 957 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 14 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் லேசான அறிகுறியே இருப்பதால் அவர்கள் மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டில் தனிமையிலிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 12 ஆயிரத்து 504 மாணவர்களும், 12, 243 மாணவிகளும் என மொத்தம் 24 ஆயிரத்து 747 மாணவ மாணவிகள் எழுதினர்.
    • மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 88.54, மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 79.27, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 91.97 மொத்த தேர்ச்சி விகிதம் 85.83 சதவீதமாகும்.

    ஈரோடு, ஜூன். 20 -

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 12 ஆயிரத்து 504 மாணவர்களும், 12, 243 மாணவிகளும் என மொத்தம் 24 ஆயிரத்து 747 மாணவ மாணவிகள் எழுதினர்.

    இதில் மாணவர்களில் 10 ஆயிரத்து 913 பேரும், மாணவிகளில் 11 ஆயிரத்து 635 பேரும் என மொத்தம் 22, 548 மாணவ -மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 87.28, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 95.03 என மொத்தம் 91. 11 தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதில் 180 அரசு பள்ளிகளை சேர்ந்த 5897 மாணவர்களும், 6351மாணவிகள் என மொத்தம் 12,248 பேர் எஸ்.எஸ் எல் .சி பொது தேர்வை எழுதினர்.

    இதில் 4671 மாணவர்களும், 5,841 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 88.54, மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 79.27, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 91.97 மொத்த தேர்ச்சி விகிதம் 85.83 சதவீதமாகும்.

    மேலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 148 மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் எழுதினர். இதில் 144 மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றனர். 

    ×