என் மலர்
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று பாதிக்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் ஓடவில்லை. இன்று (செவ்வாய்க்கிழமை) 2-வது நாளாக வேலை நிறுத்தம் தொடர்ந்தது. நேற்றை விட இன்று மேலும் குறைந்த அளவே அரசு பஸ்கள் ஓடியது.
ஈரோடு:
ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். 13-வது ஊதிய ஒப்பந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அதற்கு பதிலாக நேற்றை விட இன்று கூடுதலாக தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. தனியார் டவுன் பஸ்கள் பல திருப்பூர், கோவை, வெள்ளகோவில், சேலம், கரூர் போன்ற வெளியூர்களுக்கு இயக்கப்பட்டன. இதனால் தனியார் பஸ்களில் இன்று பயணிகள் கூட்டம் ஈரோடு பஸ் நிலையத்தில் இன்று 2-வது நாளாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பஸ் நிலையத்தில் பஸ் தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம் மற்றும் மறியலில் ஈடுப்பட கூடும் என்பதால் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து கோவை மற்றும் திருப்பூருக்கு தினமும் அரசு பஸ்கள் 2 நிமிடத்துக்கு ஒன்று செல்லும். ஆனால் இப்போது அரை மணி நேரத்துக்கு ஒன்று தான் இயக்குப்படுவதாக பயணிகள் தெரிவித்தனர். அரசு பஸ்களுக்கு பதிலாக ஆம்னி மற்றும் மினி பஸ்களும் இன்று கூடுதலாக இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் பழைய கட்டணமே வசூலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஈரோட்டை போல் கோபி, சத்தி, பெருந்துறை, பவானி, அந்தியூர் உள்பட மாவட்டம் முழுவதும் இன்று குறைந்த பஸ்களே இயக்கப்பட்டன. அதே சமயம் தனியார் பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டதால் பாதிப்பு இல்லை.

போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை.
ஈரோடு:
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 13-வது ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் நிலுவைத் தொகையினை கணக்கிட்டு உடனே வழங்க வேண்டும் போன்ற 9 அம்ச கோரிக்கைகளை அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் முன் வைத்தனர்.
நேற்று தொழிலாளர்கள் மற்றும் அரசு தரப்பில் இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு எட்டவில்லை. முன் கூட்டியே தொடங்கியது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் இன்று (திங்கட்கிழமை) முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன. ஆனால் பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படாததால் நேற்று மாலை பல இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
சத்தியமங்கலத்தில் நேற்று மாலையே அனைத்து அரசு பஸ்களும் நிறுத்தப்பட்டன. பெரும்பாலான பஸ்களை தொழிலாளர்கள் பணிமனையில் நிறுத்தி விட்டனர். பஸ்கள் வரும் என பஸ்நிலையத்தில் காத்திருந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் தனியார் பஸ்களில் கூட்டம் அலை மோதியது.

ஈரோட்டிலும் நேற்று மாலை 6 மணிக்கு மேல் பெரும்பாலான பஸ்கள் நிறுத்தப்பட்டன. இன்றும் பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை. அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டன. அந்த தொழிற்சங்கத்தினர் சார்பில் “இன்று பஸ்கள் ஓடும்” என்ற பிரசுரம் ஒட்டப்பட்டிருந்தது. அதே சமயம் மற்ற தொழிற் சங்கத்தினர் “இன்று பஸ்கள் ஓடாது” என்ற நோட்டீசு ஒட்டி இருந்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் இன்று 70 சதவீத பஸ்கள் இயங்கவில்லை. ஈரோட்டிலிருந்து மதுரை, கோவை, திருச்சி, திருப்பூர், பழனி போன்ற வெளியூர்களுக்கு சில அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் அந்த பஸ்களில் கூட்டம் இல்லை வழியில் போராட்டம், மறியல் என ஏதேனும் அசம்பாவித சம்பவம் நடக்க கூடும் என அரசு பஸ்களில் செல்ல பயணிகள் தயங்கினர்.
அதே சமயம் தனியார் பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
கோபியில் இருந்து செங்கப்பள்ளிக்கு இன்று அதிகாலை ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. வாய்க்கால் மேடு அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அந்த பஸ்சின் பின்புறம் கற்களை வீசி தாக்கினர். இதில் அந்த பஸ்சின் கண்ணாடி உடைந்து நொருங்கியது. பயணிகள் கூக்குரலிட்டனர். இதேபோல் பவானி, பெருந்துறை, கொடுமுடி, புளியம்பட்டி, பவானி சாகர், கவுந்தப்பாடி உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை. மக்களும் வெளியூர் பயணத்தை தவிர்த்தனர்.

ஈரோட்டில் தெருவில் விற்ற கழுதை பாலை குழந்தைக்கு கொடுத்ததை கணவர் தட்டிக் கேட்டதால் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு:
ஈரோடு, செங்கோடம் பள்ளம், ரூபி கார்டன் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி மகாலட்சுமி (வயது39). இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.
நேற்று மகாலட்சுமி வீட்டில் இருந்தார். அப்போது தெருவில் விற்ற கழுதை பாலை வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார். இதை பார்த்த கிருஷ்ணன் "குழந்தைகளுக்கு கழுதை பால் கொடுக்கிறாயே ஏதாவது ஆகிவிட்டால் என்ன ஆவது?'' என கூறினாராம்.
இதனால் கோபம் அடைந்த மகாலட்சுமி படுக்கை அறைக்கு வேகமாக சென்று கதவை தாழ்ப்பாள் போட்டார். இதனால் ஏதோ விபரீதம் நடக்க போகிறது என்று உணர்ந்த கிருஷ்ணன் கதவை தட்டினார்.
ஆனால் எந்த ஒரு பதிலும் வரவில்லை. இதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது மகாலட்சுமி தூக்கு மாட்டி கொண்டு உயிருக்காக போராடி கொண்டு இறந்தார்.
அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி மகாலட்சுமி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

எங்களால் மக்களுக்கு எந்த தொல்லையும் கிடையாதுங்க, நாங்க ரொம்ப நல்லவங்க மதுக்கடையை மூடாதீங்க என்று எம்.எல்.ஏ.விடம் கெஞ்சி கோரிக்கை விடுத்த குடிமகன்.
ஈரோடு:
ஈரோடு முத்தாம்பாளையம் பகுதியில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் தொடக்க விழாவில் முன்னாள் அமைச்சரும் ஈரோடு மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.வி. ராமலிங்கம் கலந்து கொண்டார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் 20-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர்.
அவர்கள் எம்.எல்.ஏ. விடம் "எங்கள் பகுதியில் ஒரு மதுக்கடை உள்ளது. இதனால் எங்களால் நிம்மதியாக நட மாட முடியவில்லை. அந்த மதுக்கடையை உடனே அகற்ற வேண்டும்'' என்று கூறினர்.
அதற்கு எம்.எல்.ஏ. ராமலிங்கம் "அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுக்க சொல்கிறேன்'' என்று கூறினார்.
அப்போது அந்த பகுதி யை சேர்ந்த சங்கர் என்ற முதியவர் அங்கு ஓடி வந்தார். அவர் எம்.எல்.ஏ.விடம் கெஞ்சி கூறியதாவது:-
இந்த மதுக்கடையால் எந்த தொல்லையும் இல்லீங்க. இந்த பகுதியில் இருக்கும் ஒரே கடை இந்த கடைதானுங்க. இதையும் மூடிட்டா நாங்க (குடிமகன்கள்) எங்கே போவோம்?
இந்த கடையால் பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும் கிடையாதுங்க. கடையும் ஒதுக்குப்புறத்தில் ஓரமா இருக்கு. நாங்க அமைதியாக வந்து குடிச்சிட்டு ஒரு ஓரமா போயிடுறோமுங்க. குடிக்கறவங்க எல்லாம் கெட்டவன் கிடையாது. குடிக்காதவன் எல்லாம் நல்லவனும் கிடையாதுங்க. எங்களை இந்த கடையில் நிம்மதியா குடிக்க விடுங்க. இந்த கடையை விட்டால் ஈரோட்டுக்கு தான் போக வேண்டும். நாங்க யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்க மாட்டோமுங்க. தயவு செய்து இந்த கடையை எடுக்காதீங்க.
இவ்வாறு அவர் இரு கையால் கும்பிட்டு கேட்டு கொண்டார்.
சிரித்தப்படியே கேட்டு கொண்ட ராமலிங்கம் எம்.எல்.ஏ. "பார்க்கலாம்'' என்று கூறி அவரை அனுப்பி வைத்தார்.

விரைவில் எடப்பாடி பழனிச்சாமி அரசு கவிழும் என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் கனவு நிறைவேறாது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி அருகே உள்ள செல்லம்பாளையத்தில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார்.
விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
பிளஸ்-2 தேர்வில் ஒரு கோடியே 20 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். மாணவர்கள் மன உளைச்சல் ஏற்படக்கூடாது என்பதற்காக ரேங்க் பட்டியலை மாற்றி கிரேடு அடிப்படையில் மதிப்பெண் வழங்கும் முறை அமுல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பெற்றோர் மாணவரை திட்டுவதும் அதனால் ஏற்படும் மனநிலையும் மாறி உள்ளது.
எஸ்.எம்.எஸ்.மூலம் 8 லட்சத்து 72 ஆயிரத்து 646 பேர் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். வரும் பள்ளி கல்வி மானிய கோரிக்கையில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.
கல்வியில் புதிய புரட்சியாக தமிழில் மதிப்பெண் சான்றிதழ், பிளஸ்-1 வகுப்பு தேர்வை பொது தேர்வாக நடத்த பரிசீலனை நடந்து வருகிறது. தமிழக மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த புதிய பாடத்திட்டம் அமைக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நீட் தேர்வு உள்பட தேர்வுகளை எளிதில் சந்திக்க முடியும். 6-ம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் மூலம் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் ஓ.பி.எஸ்,“விரைவில் எடப்பாடி பழனிச்சாமி அரசு கவிழும்” என்று கூறி உள்ளாரே? என்று கேட்டதற்கு அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-
ஒவ்வொருவருக்கும் ஒரு பேராசை உண்டு அதன் அடிப்படையில் சுய விளம்பரத்துக்காக கருத்துக்களை கூறுவது ஏற்புடையது அல்ல அரசு கவிழும் என்று யார் கூறி வந்தாலும் அந்த கனவு பலிக்காது அது நனவாகாது.
தமிழகத்தில் 50 ஆண்டுகள் அல்ல 100 ஆண்டுகள் ஆனாலும் அ.தி.மு.க. ஆட்சிதான் நடைபெறும். இதை அனைவரும் பார்க்கத்தான் போகிறார்கள்.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

அந்தியூரில் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அந்தியூர்:
அந்தியூர் அருகே பிரம்மதேசம் பாலம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி அந்த பகுதி மக்கள் நேற்று இரவு 9.30 மணிக்கு சாலை மறியல் செய்தனர். இந்த கடை அந்தியூர்- ஆப்பக்கூடல் சாலையில் செயல்படுகிறது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.
சாலையின் முன் எப்போதும் கூட்டமாக இருக்கிறது. மது அருந்தி விட்டு சாலையின் ஓரமாக மது போதையில் படுத்து இருக்கிறார்கள். இதனால் அந்த பகுதியில் பெண்களால் நடந்து செல்ல முடியவில்லை.
எனவே இந்த மதுகடையை அகற்ற வேண்டும் என்று அந்தியூர் ஆப்பக்கூடல் சாலையில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை சாலை மறியல் செய்தனர்.
சம்பவ இடத்துக்கு அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் வந்து பேச்சுவார்த்தை செய்து மண்டல மேலாளர் இடத்தில் கூறி கடையை அகற்ற ஏற்பாடு செய்வதாக கூறியதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரப்பரப்பாக காணப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் மக்கள் திரண்டு வந்து முற்றுகையிட்டனர். தொடர்ந்து டாஸ்மாக் அதிகாரியிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

ஈரோடு அருகே விபத்தில் கணவன்-மனைவி படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
மொடக்குறிச்சியை அடுத்த அவல்பூந்துறை, வேலாங்காட்டுவலசை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 66). இவரது மனைவி துளசிமணி.
சம்பவத்தன்று சுப்பிரமணி தனது மனைவியுடன் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
வண்டி கஸ்பாபேட்டை அருகில் ஈரோடு-பூந்துறை ரோட்டில் வந்தபோது அவர்கள் முன்னால் ஒரு லாரி சென்று கொண்டி ருந்தது. திடீரென லாரி ரோட்டில் நின்றது.
இதை எதிர்பார்க்காத சுப்பிரமணி லாரியின் பின் பக்கத்தில் மோதினார். இதில் சுப்பிரமணிக்கும் அவரது மனைவி துளசிமணிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
பெண் அதிகாரியை மிரட்டிய அமைச்சர் சரோஜா மீது வழக்கு போட்டு அவரை கைது செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
ஈரோடு:
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அரசு பெண் உயர் அதிகாரியை தமிழக அமைச்சர் சரோஜா ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டி உள்ளார். இந்த ஆட்சியில் அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை.
அமைச்சரால் மிரட்டப்பட்ட பெண் அதிகாரிக்கும் அவரது குடும்பத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். அதிகாரியை மிரட்டிய அமைச்சர் சரோஜா மீது வழக்கு போட்டு அவரை கைது செய்ய வேண்டும்.

நீட் தேர்வில் பல்வேறு வரம்புகள் மீறப்பட்டு உள்ளது.
குறிப்பாக பெண்களுக்கு எதிராக அத்துமீறல்கள் நடந்து உள்ளது. பெண்களின் மனநிலையை மிகவும் பாதித்து உள்ளது.
மின்னணு வாக்கு பதிவில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக ஆம்ஆத்மி கட்சி மற்றும் மாயாவதி போன்ற தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி உள்ளனர். டெல்லியில் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கெஜ்ரிவால் கூறி உள்ளார். ஆகவே பழைய ஓட்டு சீட்டு முறையை கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு இளங்கோவன் கூறினார்.
கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பிளஸ்-2 முடிவில் புதிய முறையை அறிவித்துள்ளாரே அது பற்றி என்ன கூறுகிறீர்கள்? என்று நிருபர்கள் கேட்டதற்கு, “அவர் (செங்கோட்டையன்) என்ன சொல்கிறார் என்று எனக்கு புரியவில்லை” என்று கூறினார்.

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் 26,089 மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். தேர்ச்சி சதவீதம் 96.69 சதவீதம் ஆகும்.
ஈரோடு:
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. மாநில முதலிடம் மற்றும் மாவட்ட முதலிடம் பெற்ற மாணவர்கள் முதல் முறையாக இந்த தேர்வு முடிவு மூலம் அறிவிப்படவில்லை.
ஈரோடு மாவட்டத்தில் 26983 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 பரீட்சை எழுதினர். இதில் 26,089 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். தேர்ச்சி சதவீதம் 96.69 சதவீதம் ஆகும்.
கடந்த ஆண்டு ஈரோடு மாவட்டம் மாநிலஅளவில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றிருந்தது. இந்த ஆண்டு விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை தட்டிச்சென்றது.

ஈரோட்டில் பாட்டி இறந்த துக்கம் தாங்காமல் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு:
ஈரோடு, ரங்கயம்பாளையம், அன்னை சத்யாநகர், இரணியன் வீதியை சேர்ந்தவர் மணிசாமி, கார் டிரைவர். இவரது மனைவி மல்லிகா. இவர்களுக்கு கார்த்திகேயன் (வயது17), சதீஷ்குமார் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இதில் கார்த்திகேயன் ஒரு பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 2 வருடத்திற்கு முன்பு கார்த்திகேயனின் பாட்டி பச்சியம்மாள் உடல் நலம் சரியில்லாமல் இறந்து விட்டார்.
பாட்டியின் இழப்பை கார்த்திகேயனால் தாங்கி கொள்ள முடியவில்லை. அதிலிருந்து பாட்டி நினைவாகவே இருந்துள்ளார்.
சம்பவத்தன்றும் கார்த்திகேயன் பாட்டி பச்சியம்மாள் பற்றியே பேசி கொண்டிருந்தார். கார்த்திகேயனுக்கு அவனது தாய் மல்லிகா ஆறுதல் கூறி வந்தார்.
பின்னர் கார்த்திகேயன் தனது அறைக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் அறை கதவு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர்கள் கதவை தட்டி உள்ளனர். ஆனால் எந்த பதிலும் வரவில்லை.
அருகில் இருந்தவர்கள் உதவுடன் கதவை உடைத்து சென்று பார்த்தபோது கார்த்திகேயன் தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார்.
இது குறித்து ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கார்த்திகேயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அந்தியூரில் மருந்துகடை பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர்:
அந்தியூர் பர்கூர் ரோட்டில் போலீஸ் நிலையம் அருகே ஒரு மருந்து (மெடிக்கல்) கடை உள்ளது. கடையின் உரிமையாளர் மளிகை பொருள் ஏஜென்சியும் நடத்தி வருகிறார்.
இதில் வசூலானபணம் மற்றும் மருந்து கடையில் வசூலான பணம் ஆகியவற்றை கடையின் கல்லா பெட்டியில் வைத்து பூட்டிக் கொண்டு வழக்கம் போல் நேற்று இரவு 10 மணிக்கு கடையைஅடைத்துக் கொண்டு சென்று விட்டார்.
நள்ளிரவில் யாரோ மர்மஆசாமி கடையின் ஷட்டரில் உள்ள பூட்டை உடைத்து திறந்து கடைக்குள் புகுந்தனர்.
கடைக்குள் புகுந்த கொள்ளையன் கல்லா பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ. 2 லட்சத்தை கொள்ளையடித்தான். பிறகு ஷட்டரை இறக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டான்.
இன்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்த கடை உரிமையாளர் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு திடுக்கிட்டார். பிறகு இதுகுறித்து அந்தியூர் போலிசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடையில் கேமிரா வைக்கப்பட்டிருந்தது. அந்த கேமிராவில் கொள்ளையன் உருவம் பதிவாகி இருந்தது.
இதை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி மர்ம ஆசாமியை தேடிவருகிறார்கள்.

கோபி அருகே மகள் திருமணத்துக்கு திருமண பத்திரிக்கை கொடுக்க சென்ற தாய் விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோபி:
ஈரோடு மூலப்பாளையத்தை சேர்ந்தவர் சிவகுமார் சொந்தமாக கார் வாங்கி ஓட்டி வருகிறார்.
இவரது மனைவி பெயர் சுமதி (38). ஈரோடு எல்லப் பாளையத்தில் உள்ள ஒரு அட்டை கம்பெனியில் வேலை பார்த்தார். இவர்களுக்கு பவித்ரா (22). மேனகா (18) என்ற இரு மகள்கள் உள்ளனர்.
இதில் மூத்த மகள் பவித்ராவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு பத்திரிக்கை அடிக்கப்பட்டது. பெற்றோர் தங்களின் உறவினர்களுக்கு திருமண பத்திரிக்கை கொடுத்து வந்தனர்.
நேற்று சிவகுமாரும் அவரது மனைவி சுமதியும் மோட்டார் சைக்கிளில் திருமண பத்திரிக்கை கொடுக்க கோபி சென்றனர்.
திருமண பத்திரிக்கை கொடுத்து விட்டு இரவு 9.40மணியளவில் மோட்டார் சைக்கிளில் ஈரோட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். சத்தியமங்கலம் ரோடு எஸ்.பி.நகர் பிரிவு அருகே வந்த போது பின்னால் ஒரு மினி வேன் வந்து கொண்டிருந்தது. உடுமலைபேட்டையைச் சேர்ந்த ஜாபர் அலி என்பவர் ஓட்டி வந்தார்.
திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வேன் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கணவன்-மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுமதி பரிதாபமாக இறந்தார். கணவர் சிவகுமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.