என் மலர்

  நீங்கள் தேடியது "O Panneerselvam"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஐகோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தலை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை.
  • தேர்தலை நடத்துவதற்கு மாவட்ட வாரியாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கும் நடைமுறையை தொடங்கி உள்ளார்.

  அ.தி.மு.க.வில் எழுந்த ஒற்றைத்தலைமை போட்டியில் ஓ.பன்னீர் செல்வம் கிட்டத்தட்ட பின்தங்கிய கதைதான். அவர் வீசிய அஸ்திரங்கள் எல்லாம் அவரை நோக்கியே திரும்பி வந்ததால் அடுத்து என்ன செய்யலாம் என்ற மந்திர ஆலோசனையில் ஓ.பன்னீர் செல்வம் ஈடுபட்டுள்ளார். அதே நேரம் எடப்பாடி பழனிசாமி தன்னை நோக்கி வந்த இடையூறுகளையெல்லாம் தாண்டி அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்.

  ஜூலை 11-ந் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக மகுடம் சூட்டப்பட்ட எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக அங்கீகாரம் பெறுவதற்கான தேர்தலை விரைவாக நடத்தி பொதுச்செயலாளர் ஆகிவிட வேண்டும் என்பதில் முனைப்புடன் இருக்கிறார்.

  ஏற்கனவே பொதுக்குழு உறுப்பினர்களில் 95 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் தனக்கு ஆதரவு இருப்பதாக ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்திலும் மனுவை தாக்கல் செய்து விட்டார். அடுத்ததாக தேர்தலை நடத்துவதற்கு மாவட்ட வாரியாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கும் நடைமுறையை தொடங்கி உள்ளார்.

  இப்போதைய நிலையில் ஐகோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தலை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை. எனவே வாய்ப்பை சாதகமாக பயன்படுத்த திட்டமிட்டு உள்ளார். விரைவில் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி பொதுச்செயலாளராக தேர்வு பெற்று விட்டால் அதன்பிறகு யார் எப்படியெல்லாம் மோதுகிறார்கள் என்பதை பார்த்து விடுவோம் என்ற நிலைக்கு வந்து விட்டார் எடப்பாடி பழனிசாமி.

  அதிரடி காட்டும் எடப்பாடி பழனிசாமியின் வேகத்தை பார்த்து எடப்பாடின்னா சும்மாவா... என்று கெத்து காட்டுகிறார்கள் உடன்பிறப்புகள்...

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தாய்லாந்துக்கு வேலைக்காக சென்ற 60 தமிழர்கள் உள்பட 300 இந்தியர்களை மியான்மருக்கு அழைத்து செல்லப்பட்டு சட்ட விரோத வேலைகளை செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.
  • மியான்மரில் சிக்கியவர்களை பாதுகாப்புடன் இந்தியா திரும்புவதற்கு ஏற்பாடு செய்தால் நான் நன்றி உள்ளவனாக இருப்பேன்.

  சென்னை:

  பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

  தாய்லாந்துக்கு வேலைக்காக சென்ற 60 தமிழர்கள் உள்பட 300 இந்தியர்களை மியான்மருக்கு அழைத்து செல்லப்பட்டு சட்ட விரோத வேலைகளை செய்ய நிர்பந்திக்கப்பட்டு இருப்பதை உங்களது கவனத்துக்கு உடனடியாக கொண்டு வர விரும்புகிறேன்.

  அவர்கள் பிணை கைதிகளாக அடைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்புவதை உறுதி செய்வது அவசியம் ஆகும்.

  எனவே நீங்கள் தயவு செய்து தனிப்பட்ட முறையில் தலையிட்டு மியான்மரில் சிக்கியவர்களை பாதுகாப்புடன் இந்தியா திரும்புவதற்கு ஏற்பாடு செய்தால் நான் நன்றி உள்ளவனாக இருப்பேன்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்தினருடன் மதுரை மற்றும் ராமேசுவரம் சென்றார். அங்குள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.
  • மதுரையில் இருந்து சென்னை வந்த ஓ.பன்னீர்செல்வம், சென்னை விமான நிலையத்தில் தங்கி இருந்தார்.

  ஆலந்தூர்:

  தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்தினருடன் மதுரை மற்றும் ராமேசுவரம் சென்றார். அங்குள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் மதுரையில் இருந்து சென்னை வந்த ஓ.பன்னீர்செல்வம், சென்னை விமான நிலையத்தில் தங்கி இருந்தார்.

  பின்னர் பயணிகள் விமானத்தில் அவர் குடும்பத்துடன் சென்னையில் இருந்து வாரணாசி புறப்பட்டு சென்றார். அங்கு காசி விஸ்வநாதா் கோவில் உள்பட பல்வேறு கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி விட்டு மீண்டும் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் பல்வேறு பொறுப்புகளை வகித்த நிலையில் ஒற்றை தலைமை என்ற பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது.
  • தற்போது ஓ.பன்னீர்செல்வம் அரசியலில் பின்னடைவை சந்தித்துள்ளார்.

  ராமேசுவரம்:

  ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் சகல தோஷ நிவர்த்தி ஸ்தலமாக போற்றப்படுகிறது. ராவணனை வதம் செய்து விட்டு வந்த ராமர் பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக மணல் லிங்கம் அமைத்து வழிபாடு செய்தார் என்பது புராண தகவல்.

  ராமேசுவரம் கோவிலுக்கு இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் முதல்-அமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் நேற்று ராமேசுவரம் வந்து அங்குள்ள ஒரு தனியார் மடத்தில் ௫ மணி நேரம் சிறப்பு ஹோமம் செய்தார். அங்கு நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றது.

  இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் கோவிலின் வளாகத்தில் சிறப்பு ஹோமம் செய்து மூலவருக்கு ருத்ராபிஷேகம் செய்தனர். இந்த வழிபாடு பல ஜென்ம பாவங்களை போக்கும் என்றும், குடும்ப அபிவிருத்தியை வழங்கும் என்றும் கூறப்படுகிறது.

  ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் பல்வேறு பொறுப்புகளை வகித்த நிலையில் ஒற்றை தலைமை என்ற பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. இதில் அ.தி.மு.க. முக்கிய தலைவர்களாக இருந்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் இடையே கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் இரு துருவங்களாக பிரிந்து விட்டனர்.

  தற்போது ஓ.பன்னீர்செல்வம் அரசியலில் பின்னடைவை சந்தித்துள்ளார். எனவே மீண்டும் அரசியலில் முக்கிய இடத்தை பெறுவதற்காக ஜோதிடர்களின் ஆலோசனையின்பேரில் ஓ.பன்னீர்செல்வம் இந்த வழிபாடுகளை நடத்தியதாக கூறப்படுகிறது.

  ராமேசுவரத்தில் வழிபாடுகளை முடித்துக்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினர் காசிக்கு சென்று வழிபாடு செய்ய உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகள் சுதந்திரமாக இயங்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து.
  • சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு.

  அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டு கலவரம் உண்டானது. இதனையடுத்து அலுவலகத்துக்கு வருவாய்த்துறையினர் 'சீல்' வைத்தனர். இதை எதிர்த்து இரு தரப்பினரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

  வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அ.தி.மு.க. அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை கடந்த மாதம் (ஆகஸ்டு) 18-ந்தேதி விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கும், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் உத்தரவிட்டனர்.

  இதையடுத்து தமிழக அரசின் சார்பில் வக்கீல் ஜோசப் அரிஸ்டாட்டில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதால் மட்டுமே அ.தி.மு.க. அலுவலகத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஏற்று தமிழக அரசு செயல்பட்டுள்ளது. எனவே ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதேபோல் எடப்பாடி பழனிசாமி சார்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. அவர் திட்டமிட்டு வன்முறையை நிகழ்த்தி, அலுவலகத்துக்குள் புகுந்து ஆவணங்களை திருடி சென்றுள்ளார்.

  எனவே அவரது மேல்முறையீட்டு மனுவை ஏற்றால் வன்முறையை ஊக்குவிப்பதாகி விடும். வன்முறை அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெறவில்லை. அதன் பக்கத்தில் உள்ள பகுதியில்தான் நடைபெற்றது. எனவே அ.தி.மு.க. அலுவலகத்திற்கு 'சீல்' வைக்க முடியாது. அ.தி.மு.க. அலுவலக சாவியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு சரியே என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

  இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தலைமை அலுவலகம் செல்ல உரிமை உண்டு என ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது நீதிபதிகள், ஒரு அரசியல் கட்சியின் அலவலகத்தை முடக்கினால் எப்படி அந்த அரசியல் கட்சி இயங்க முடியும், ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகள் சுதந்திரமாக இயங்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதையடுத்து இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று அறிவித்த உச்சநீதிமன்றம், ஓ.பி.எஸ். மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அ.தி.மு.க. அலுவலக சாவி வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
  • ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

  புதுடெல்லி :

  அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டு கலவரம் உண்டானது. இதனையடுத்து அலுவலகத்துக்கு வருவாய்த்துறையினர் 'சீல்' வைத்தனர்.

  இதை எதிர்த்து இரு தரப்பினரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அ.தி.மு.க. அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்க உத்தரவிட்டது. இதனையடுத்து வருவாய்த்துறையினர் சாவியை எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைத்தனர்.

  இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை கடந்த மாதம் (ஆகஸ்டு) 18-ந்தேதி விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கும், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் உத்தரவிட்டனர்.

  இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

  இதற்கிடையே தமிழக அரசின் சார்பில் வக்கீல் ஜோசப் அரிஸ்டாட்டில் சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

  அந்த மனுவில், 'பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதால் மட்டுமே அ.தி.மு.க. அலுவலகத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ஏற்று தமிழக அரசு செயல்பட்டுள்ளது.

  எனவே ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதேபோல் எடப்பாடி பழனிசாமி சார்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  வக்கீல் பாலாஜி சீனிவாசன் என்பவர் மூலமாக தாக்கல் செய்துள்ள அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

  ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. அவர் திட்டமிட்டு வன்முறையை நிகழ்த்தி, அலுவலகத்துக்குள் புகுந்து ஆவணங்களை திருடி சென்றுள்ளார்.

  எனவே அவரது மேல்முறையீட்டு மனுவை ஏற்றால் வன்முறையை ஊக்குவிப்பதாகி விடும். தனது பக்கம் பெரும்பான்மை இல்லை என தெரிந்து கொண்ட ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வில் ஜனநாயகபூர்வமான தலைமை மாற்றத்துக்கு தொடர்ந்து முட்டுக்கட்டைகளை விதித்தார்.

  இந்த விவகாரத்தில் அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறையை திட்டமிட்டு ஓ.பன்னீர்செல்வம் மறைத்துள்ளார். வன்முறை அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெறவில்லை. அதன் பக்கத்தில் உள்ள பகுதியில்தான் நடைபெற்றது. எனவே அ.தி.மு.க. அலுவலகத்திற்கு 'சீல்' வைக்க முடியாது. அ.தி.மு.க. அலுவலக சாவியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவு சரியே'

  இவ்வாறு பதில் மனுவில் தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நாளைய தினம் அ.தி.மு.க. அலுவலக சாவி தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட உள்ளது.
  • அ.தி.மு.க. அலுவலகத்தை தற்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களே பயன்படுத்தி வருகிறார்கள்.

  சென்னை:

  அ.தி.மு.க. அலுவலகத்தில் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது.

  இதில் பலர் காயம் அடைந்த நிலையில் அ.தி.மு.க. அலுவலகமும் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டன. அங்கிருந்த பொருட்களும் கொள்ளை போனது. இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

  இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருமே சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 20-ந் தேதி நடைபெற்றது. நீதிபதி சதீஷ்குமார் விசாரணை நடத்தி அளித்த தீர்ப்பில் அ.தி.மு.க. அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

  இதன்படி அ.தி.மு.க. அலுவலகம் தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பிடமே உள்ளது.

  இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த மாதம் 4-ந்தேதி இது தொடர்பான மனுவை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வக்கீல்கள் தாக்கல் செய்தனர்.

  இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த மாதம் 18-ந்தேதி நடைபெற்றது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், எடப்பாடி பழனிசாமியிடம் அ.தி.மு.க. அலுவலக சாவியை ஒப்படைத்தது தவறு என்று வாதிடப்பட்டது.

  ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை விதிக்கவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு சாவி விவகாரத்தில் எந்த தடையையும் விதிக்க மறுத்து விட்டது.

  இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் வருவாய் துறையினர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

  இந்த நிலையில் 3 வார இடைவெளிக்கு பிறகு அ.தி.மு.க. அலுவலக சாவி தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் நாளை (12-ந்தேதி) நடைபெறுகிறது.

  கடந்த முறை நடைபெற்ற விசாரணையின்போது உரிய விசாரணை நடத்தாமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி இருந்தது.

  இதைத் தொடர்ந்து நாளைய தினம் அ.தி.மு.க. அலுவலக சாவி தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட உள்ளது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்த வக்கீல்கள் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைக்கிறார்கள்.

  இதனால் நாளை சுப்ரீம் கோர்ட்டில் காரசார விவாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க உள்ளனர். வருவாய் துறை அதிகாரிகளும் பதில் அளிக்க உள்ளனர்.

  அ.தி.மு.க. அலுவலக சாவி தொடர்பாக ஜூலை 20-ந்தேதி அளிக்கப்பட்ட தீர்ப்பில் ஒரு மாதம் வரையில் தொண்டர்கள் கட்சி அலுவலகத்துக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடை நீங்கி அ.தி.மு.க. அலுவலகத்தை தற்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களே பயன்படுத்தி வருகிறார்கள்.

  இது போன்ற சூழலில் தான் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல் முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது. அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்த ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு விசாரணை வருகிற 16-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அழித்திட ‘வாமன அவதாரம்’ தரித்த திருமால், தனக்கு மூன்று அடி மண் வேண்டும் என்று கேட்டார்.
  • மக்களை காண வரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் தினமாக மலையாள மொழி பேசும் மக்களால் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.

  சென்னை:

  முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  பாரம்பரியமும், பண்பாடும் மிகுந்ததும்; அன்பின் உறைவிடமாகவும், ஈகைப் பண்பின் அடையாளமாகவும் திகழ்வதுமான ஓணம் பண்டிகையை ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோணத்தன்று வெகு விமரிசையாக கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது "ஓணம்" திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அழித்திட 'வாமன அவதாரம்' தரித்த திருமால், தனக்கு மூன்று அடி மண் வேண்டும் என்று மகாபலி சக்கரவர்த்தியிடம் கேட்டு, ஓர் அடியை வானத்திலும், இரண்டாம் அடியை பூமியிலும், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையிலும் வைத்து அடக்கியதோடு, அந்த மன்னனின் வேண்டுதலின்படி, ஒவ்வோர் ஆண்டும் அந்த நாளில் அவர், தம் நாட்டு மக்களை வந்து காணும்படியாக அருள்புரிந்தார்.

  அதன்படி, மக்களைக் காண வரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் தினமாக மலையாள மொழி பேசும் மக்களால் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.

  'பிறர் வாழ நாம் வாழ்வது', 'ஆணவத்தை அடக்குவது', 'தர்மம் காப்பது', 'பக்தியே முக்தி என்பதை உணர்த்துவது' ஆகியவைதான் ஓணம் திருநாள் நமக்கு உணர்த்தும் அறிவுரைகளாகும்.

  திருவோணப் பண்டிகையின்போது, பத்து நாட்களுக்கு மக்கள் தங்கள் இல்லங்களின் வாயில்களில் கோலமிட்டு, வண்ணப் பூக்களால் அலங்கரித்து, அதன் நடுவே குத்து விளக்கேற்றி ஓணம் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்வதோடு, உள்ளம் கவரும் நடனங்களை அரங்கேற்றியும் இன்புறுவார்கள்.

  திருவோணத்திருநாளான இந்நன்னாளில், ஆணவம் அகன்று; பசி, பிணி, பகை நீங்கி; அன்பு, அமைதி, சகோதரத்துவம் பெருகி; மக்கள் சமத்துவத்துடனும், சகோதரத்துவத்துடனும் ஒற்றுமையாக இணைந்து வாழ்ந்திட வேண்டும் என்ற என் விருப்பத்தினைத் தெரிவித்து, மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது உளமார்ந்த "ஓணம்" திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • எடப்பாடி தரப்பில் இருந்து கணிசமானவர்களை தங்கள் பக்கம் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.
  • ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் இதுவரை இல்லாத அளவுக்கு திணறலை சந்திக்க தொடங்கி உள்ளனர்.

  சென்னை:

  எடப்பாடி பழனிசாமி நடத்திய பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற அறிவிப்பு ஓ.பன்னீர்செல்வம் தரப்பை பல மைல் தொலைவுக்கு பின்னோக்கி கொண்டு போய் நிறுத்தி இருக்கிறது. தனி நீதிபதி அளித்த தீர்ப்பு சாதகமாக வந்தபோது ஓ.பி.எஸ். அணி தலைவர்கள் அடுத்தகட்ட நட வடிக்கையை தீவிரப்படுத்தினார்கள். எடப்பாடி தரப்பில் இருந்து கணிசமானவர்களை தங்கள் பக்கம் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.

  குறிப்பாக பொதுக்குழு உறுப்பினர்களில் ஆயிரம் பேரை வலைவீசி பிடித்து விட முயற்சிகள் நடந்தது. இதற்கிடையே 36 எம்.எல்.ஏ.க்கள், 15 மாவட்ட செயலாளர்கள் தங்கள் பக்கம் வர தயார் நிலையில் இருப்பதாகவும் சமூக வலைதளங்கள் மூலம் தகவல்களை திட்டமிட்டு பரப்பினார்கள். இவை அனைத்துக்கும் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.

  ஓ.பி.எஸ். அணிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் அவர் பக்கம் செல்ல, சிலர் காய்களை நகர்த்திக் கொண்டிருந்தனர். நேற்று மதியம் முதல் அவர்கள் அனைவரும் செல்போன் தொடர்புகளை துண்டித்து விட்டு தொடர்பு எல்லைக்கு வெளியே சென்று விட்டனர்.

  இதனால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் இதுவரை இல்லாத அளவுக்கு திணறலை சந்திக்க தொடங்கி உள்ளனர். சுப்ரீம் கோர்ட்டை அடுத்து அவர்கள் நம்பி இருக்கிறார்கள். ஆனால் சுப்ரீம் கோர்ட்டிலும் வலுவான வாதங்களை, உரிய ஆதாரங்களுடன் முன் வைக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு எப்போதோ தயாராகி விட்டதாக சொல்கிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ‘இடைத்தேர்தல்’ என்ற அஸ்திரத்தால் ஈ.பி.எஸ்.சுக்கு அதிர்ச்சி கொடுக்க முடியுமா என்ற யோசனையில் ஈடுபட்டுள்ளார்.
  • தமிழகத்தில் இடைத்தேர்தல்களில் ஆளும்கட்சி வெல்வதே வரலாறு

  சென்னை:

  அ.தி.மு.க. தொண்டர்கள் யார் பக்கம்? என்று ஈ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். இருவரும் மல்லு கட்டுகிறார்கள். அதே நேரம் கட்சி ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் தனது பலத்தை நிரூபித்து வருகிறார் ஈ.பி.எஸ்.

  மீண்டும் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லப் போவதாக ஓ.பி.எஸ். அறிவித்துள்ளார். அந்த சட்ட போராட்டம் ஒருபுறம் நடக்கட்டும். இன்னொருபுறம் அக்னி பரீட்சை ஒன்றுக்கான ஆயத்தமும் நடப்பதாக கூறப்படுகிறது. 'இடைத்தேர்தல்' என்ற அஸ்திரத்தால் ஈ.பி.எஸ்.சுக்கு அதிர்ச்சி கொடுக்க முடியுமா என்ற யோசனையில் ஈடுபட்டுள்ளார்.

  வைத்திலிங்கம் (ஒரத்தநாடு), மனோஜ் பாண்டியன் (ஆலங்குளம்) ஆகிய இரு எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்து இடைத்தேர்தல் என்ற யுத்த களத்தை உருவாக்குவதே திட்டம்.

  ஆனால் அந்த மாதிரி திடீர் யுத்தத்தை தொடங்கினால் கட்சி, சின்னம் என்ற சிக்கல் சட்ட ரீதியாக எழுந்தால் சமாளிக்க முடியுமா? என்ற சந்தேகமும் முடிவெடுக்க முடியாமல் குழப்பத்தில் ஆழ்த்தி இருப்பதாக கூறப்படுகிறது.

  தென் மாவட்டங்கள் தங்கள் கைக்குள் இருப்பதாக கூறும் ஓ.பி.எஸ். தரப்பு அதை தேர்தல் மூலம் நிரூபித்து காட்ட வேண்டும் என்பதே அவர்கள் எண்ணமாக உள்ளது.

  தமிழகத்தில் இடைத்தேர்தல்களில் ஆளும்கட்சி வெல்வதே வரலாறு. அப்படி ஒரு சூழ்நிலை வந்தால்...? என்ற தயக்கமும் இருக்கிறது.

  அதற்கும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது அ.தி.மு.க இப்படி பிளவுபட்டு நின்றால் வெற்றி பெற முடியாது என்று உணர்த்துவதற்கு அது வாய்ப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்கள்.

  நெருப்பில் இறங்கியாச்சு. இனி சந்தித்தே ஆக வேண்டும் என்று துணிந்து விட்ட ஓ.பி.எஸ். அடுத்து எடுக்கப்போகும் அஸ்திரம் இதுதான் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் இடையே கொள்கை அடிப்படையிலான தகராறு கிடையாது.
  • அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரங்களில் நாங்கள் தலையிட விரும்பவில்லை.

  மேலசொக்கநாதபுரம்:

  தேனி மாவட்டம் போடியில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

  அ.தி.மு.கவில் ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் இடையே கொள்கை அடிப்படையிலான தகராறு கிடையாது. அவர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடு சுலபமாக தீர்ந்துவிடும் என எதிர்பார்க்க முடியாது. அவர்கள் 2 பேரும் பா.ஜ.கவுக்கு ஆதரவு தெரிவிப்பதில் எந்தவித முரண்பாடும் இல்லாமல் செயல்படுகின்றனர். மாநில அரசின் உரிமைகள் பறிபோகும்போது அதற்காக குரல் கொடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்வதில்லை.

  அதிகார போட்டி, பண பலம் ஆகியவற்றால் அவர்களுக்குள் இந்த மோதல் வெடித்துள்ளது. மீண்டும் மோடி அவர்களை கைகுலுக்கி வைத்து ஒன்றுசேர்த்து வைத்தாலும் வைக்கலாம். அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரங்களில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. இருந்தபோதும் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் அக்கட்சியின் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print