search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் சரோஜா"

    திருச்செங்கோட்டில் வருகிற 18-ந் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை தர உள்ளார். #Edappadipalanisamy

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் வருகிற 18-ந் தேதி அன்று பள்ளிபாளையம், குமார பாளையம், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்திற்கு வருகை தர உள்ளார்.

    அதற்கான பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சமூக நலம் மற்றும் சத்துணவு துறை அமைச்சர் சரோஜா, திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்கள். #Edappadipalanisamy 

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, போராட்டத்தை ஒத்திவைத்தனர். #MiddayMealWorkers
    சென்னை:

    காலமுறை ஊதியம், ஓய்வூதிய உயர்வு, பணிக்கொடை உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் கடந்த 29-ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கினர். அவர்களுடன் அங்கன்வாடி பணியாளர்களின் பல்வேறு சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் சத்துணவு பணி பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து, போராட்டம் நடத்திய சங்க நிர்வாகிகளுடன் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனால் போராட்டம் நீடித்தது.

    இந்நிலையில் சத்துணவு ஊழியர்களின் போராட்டம் இன்று 5வது நாளாக தொடர்ந்தது. பள்ளிக்குழந்தைகளின் நலனை கருதி சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என்று அமைச்சர் சரோஜா வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து சத்துணவு ஊழியர்களுடன் சமூக நலத்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. 

    சத்துணவு ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். இதையடுத்து போராட்டத்தை ஒத்திவைப்பதாக சத்துணவு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. #MiddayMealWorkers
    பள்ளிக்குழந்தைகளின் நலனை கருதி சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அமைச்சர் சரோஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். #TNMinister #saroja #Nutritionstaff
    சென்னை:

    அமைச்சர் சரோஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மட்டும் தான் ஒரு சத்துணவு மையத்திற்கு சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் என 3 பணியாளர்களும், சில மையங்களில் 4 பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

    சத்துணவு அமைப்பாளர்கள் தேவைப்படும் உணவுப் பொருட்களை பாதுகாப்பாக இருப்பு வைப்பது, அன்றாடம் சமைப்பதற்கு காய்கறிகள் மற்றும் தாளிதப் பொருட்களை வாங்கி வழங்குவது, பொருட்களின் கணக்கை பராமரிப்பது ஆகிய பணிகளை செய்கின்றனர்.

    தமிழ்நாட்டில் சத்துணவு பணியாளர்களுக்கு ஆண்டு தோறும் 3 சதவீதம் ஊதிய உயர்வுடன் சிறப்பு காலமுறை ஊதியம், வழங்கி வருவது மட்டுமல்லாமல், மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளையும் ஏற்று, சத்துணவுப் பணியாளர்களின் ஊதியத்தை அரசு உயர்த்தி வழங்கியுள்ளது.

    அது மட்டுமன்றி, அவர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.

    அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி, மருத்துவப்படி ஆகியவற்றை உள்ளடக்கி, இன்றைய தேதியில் பணியில் சேரும் ஒரு அமைப்பாளர் ரூ.10,353/ம், சமையலர் ரூ.6,429/ம், சமையல் உதவியாளர் ரூ.5,230/ம் ஒரு மாத சம்பளமாக பெறுவர்.

    ஏற்கனவே பணியில் உள்ள பணியாளர்கள் தாங்கள் பணி செய்த காலத்திற்கேற்ப இதைவிட அதிக ஊதியம் பெற்று வருகின்றனர்.


    தமிழ்நாட்டில் மட்டும் தான் சத்துணவு அமைப்பாளர் என்ற பணியிடம் உள்ளது. ஆனால், பிற மாநிலங்களில் சத்துணவு அமைப்பாளர் என்ற பணியிடமே இல்லை.

    51.96 லட்சம் மாணாக்கர்களின் பசியினை போக்கும் இத்திட்டத்தினை சிறப்பாக நடைமுறைப்படுத்தி வரும் சத்துணவுப் பணியாளர்களின் நலனைப் பேணிக்காக்க தமிழ்நாடு அரசு தற்போது வழங்கி வரும் பல்வேறு சலுகைகளை கருத்தில் கொண்டும், சத்துணவு பணியாளர்களுக்கு 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி ஊதிய விகிதத்தினை மாற்றி அமைத்திருப்பதைக் கருத்தில் கொண்டும், சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் லட்சக்கணக்கான குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #TNMinister #saroja #Nutritionstaff
    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி பகுதியில் புதிய குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.
    ராசிபுரம்:

    ராசிபுரம் நகராட்சியில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜா கலந்து கொண்டார். நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் முன்னிலை வகித்தார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அமைச்சர் சரோஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் ரூ.55 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு டிசம்பர் மாதம் மக்கள் செயல்பாட்டுக்கு ஒப்படைக்கப்படும். ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை நிரந்தரமாக போக்குவதற்காக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனியாக கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவர அனுமதி வழங்கியுள்ளார். இந்த புதிய குடிநீர் திட்டத்திற்காக அரசராமணி கிராமப் பகுதியில் 2 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும். இந்த புதிய குடிநீர் திட்டத்தில் ராசிபுரம் நகராட்சி, பட்டணம், சீராப்பள்ளி, நாமகிரிபேட்டை, புதுப்பட்டி ஆகிய பேரூராட்சிப் பகுதிகளும், புதுச்சத்திரம் யூனியன் பகுதிகளும் பயன்பெறும். இதைத் தவிர ராசிபுரம், வெண்ணந்தூர் ஒன்றியத்தில் விடுபட்ட கிராமங்களை இந்த திட்டத்தில் சேர்க்கப்படும்.

    முதல் அமைச்சர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையத்தில் வெள்ளப் பகுதிகளை பார்வையிட்டார். அப்போது அவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யும்படியும், குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க லாரிகள் மூலம் குடிநீர் வழங்கவும் உத்தரவிட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    “பெற்றோரை சரிவர கவனிக்காத பிள்ளைகளுக்கு 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்”, என்று அமைச்சர் சரோஜா கூறினார். #Minister #Saroja
    சென்னை:

    முதியோர் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு, அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் உபகரணங்களை வழங்கும் ‘ராஷ்டிரிய வயோஸ்ரீ யோஜனா’ திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை ராயபுரத்தில் நேற்று நடந்தது.

    விழாவில் சிறப்பு விருந்தினராக சமூக நலத்துறை அமைச்சர் வி.சரோஜா பங்கேற்றார். 440 பயனாளிகளுக்கு, ரூ.15 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    விழாவில் அமைச்சர் சரோஜா பேசியதாவது:-

    இளைய சமுதாயத்தினர் தங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களை அன்போடும், பரிவோடும் கவனித்துக்கொள்ள வேண்டும். இது உங்கள் தலையாய கடமையாகும். பிள்ளைகளால் அவதிப்படும் முதியோருக்காகவே அரசு சட்டம் இயற்றியுள்ளது.

    இதன்படி சிரமத்திற்குள்ளாகும் முதியோர், மாவட்ட வருவாய் அதிகாரிகளிடம் புகார் அளித்தால் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும். பெற்றோரை சரிவர கவனிக்காத பிள்ளைகளுக்கு 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்.



    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் டாக்டர் ஜெ.ஜெயவர்தன், எஸ்.ஆர்.விஜயகுமார், டி.ஜி.வெங்கடேஷ்பாபு, எம்.எல்.ஏ.க்கள் ஆர்.நடராஜ், விருகை வி.என்.ரவி, கலெக்டர் வெ.அன்புச்செல்வன், வருவாய் அதிகாரி சு.கருணாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
    சத்துணவுக்கு விதிமுறை களை பின்பற்றியே முட்டை கொள்முதல் செய்யப்படுகிறது. அதில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்று அமைச்சர் சரோஜா கூறினார்.
    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் சத்துணவுத் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 43 ஆயிரம் சத்துணவு மையங்களில் 53 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெறுகிறார்கள். 54 ஆயிரத்து 490 அங்கன்வாடி மையங்களில் 17 லட்சம் குழந்தைகள் பயன்பெற்று வருகிறார்கள். சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு முட்டை, மசாலா முட்டை வழங்கப்பட்டு வருகிறது.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அரசு 2013-ல் இருந்து சத்துணவு உண்ணும் மாணவர்கள் மற்றும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு தரமான முட்டைகளை வழங்குவது மட்டும் இல்லாமல், முட்டை கொள்முதல் செய்வதில் மாநில அளவில் வெளிப்படையாக ஒரேவிதமான ஏலமுறையே நடைமுறையில் உள்ளது.

    2013-ல் இருந்து எந்த ஒரு புகாரும் இல்லாமல் விதிமுறைகளை பின்பற்றி முட்டை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. 58 லட்சம் முட்டை ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் கொள்முதல் செய்யப்பட்டு குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் எந்த ஒரு முறைகேடோ அல்லது புகார்களோ இல்லாமல் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #EggProcurement #MinisterSaroja
    எருமப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியினை அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியினை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 330 காளைகளும், 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். வீரர்கள் வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்க முயன்றனர். மாடுபிடி வீரர்களின் பிடிக்கு சிக்காமல் காளைகள் துள்ளி குதித்து ஓடியதை பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். போட்டியில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு கட்டில், டைனிங் டேபிள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன. 

    இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசோதனைகளுக்கு பிறகே காளைகள் அனுமதிக்கப்பட்டன. விழாவில் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம், எம்.பி. சுந்தரம், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர், சேந்தமங்கலம் எம்.எல்.ஏ சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

    ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை விழா குழு தலைவர் செந்தில் பூபதி, கௌரவத் தலைவர் சுப்பு, மெடிக்கல் பாலு ஆகியோர் செய்திருந்தனர்.
    ×