search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கழுதை பால்"

    • குட்டி ஈன்ற 6 மாதங்கள் வரை கழுதைகளிடம் பால் சுரக்கும்.
    • கழுதைகளை நம்பிதான் நாங்கள் வாழ்வாதாரம் நடத்தி வருகிறோம்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா கணக்கப்பிள்ளை வலசை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கழுதை பால் விற்பனை பரவலாக நடைபெற்று வருகிறது.

    கழுதை பால் குடித்தால், குழந்தைகளுக்கு உடல் ரீதியில் நன்மை அதிகரிக்கும் என்று பெரியவர்கள் சொல்வதால் அதனை வாங்கி குழந்தைகளுக்கு கொடுப்பதில் தாய்மார்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    கழுதை பால் விற்பவர்கள் திருச்சியில் இருந்து ஒரு குழுவாக வந்து தென்காசி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் தனித்தனியாக பிரிந்து சென்று விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் 10 மில்லி கொண்ட ஒரு சங்கு கழுதை பாலை ரூ.100-க்கு கூவி கூவி விற்பனை செய்து வருகின்றனர்.

    மருத்துவ குணங்கள் நிறைந்தது என்பதால் பலரும் ஆர்வமுடன் கழுதை பால் வாங்கி குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர். இதுகுறித்து கழுதை பால் விற்பனை செய்யும் திருச்சியை சேர்ந்த பெண்கள் கூறியதாவது:-

    நாங்கள் 3 தலைமுறைகளாக இந்த தொழிலை செய்து வருகிறோம். இதற்காக ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கழுதைகளை வாங்கி வளர்த்து வருகிறோம். குட்டி ஈன்ற 6 மாதங்கள் வரை கழுதைகளிடம் பால் சுரக்கும். கழுதை பால் குடிப்பதால் குழந்தைகளுக்கு சளி, தோஷ, மாந்திரீக பிரச்சனைகள் நீங்கும் என்று கூறுவார்கள்.

    இதனை குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பெரியவர்கள் கழுதை பால் குடிப்பதால் வாய் புண், வயிற்றுப் புண் குணமாகும். ஜீரண சக்தி அதிகரிக்கும். 12 மணி நேரம் வரை கழுதை பால் கெடாமல் இருக்கும். எங்களுக்கு நாள்தோறும் இந்த கழுதைகள் மூலம் ரூ.1000 முதல் ரூ.1500 வரை வருமானம் கிடைக்கிறது. இந்த கழுதைகளை நம்பிதான் நாங்கள் வாழ்வாதாரம் நடத்தி வருகிறோம்.

    இது ஒரு சீசன் மற்றும் நாடோடி தொழிலாகும். இந்த வேலை இல்லாத சமயத்தில் கிடைக்கும் கூலி வேலைக்கு செல்வோம். இந்த கழுதைகளை குல தெய்வங்களாக நாங்கள் கருதுகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • போயபாலம் சந்திப்பு பகுதியில் 10 கழுதைகளுடன் நான்கு குடும்பங்கள் கொண்ட குழு கழுதை பால் விற்பனை செய்து கொண்டிருந்தனர்.
    • நாங்கள் ஒரு கப் (25 மில்லி) புதிய கழுதைப்பாலை ரூ.200-க்கு விற்கிறோம்.

    திருப்பதி:

    ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கழுதை பால் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.

    பிறந்த குழந்தைகள் மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கழுதை பாலில் மருத்துவக் குணம் அதிகம் என்று அவர்கள் கருதுகின்றனர்.

    கழுதைபால் ரூ.5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை விற்பனையானது. தற்போது கழுதை பால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. ஒரு லிட்டர் ரூ.8000 வரை விற்பனை செய்து வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலம் போயபாலம் சந்திப்பு பகுதியில் 10 கழுதைகளுடன் நான்கு குடும்பங்கள் கொண்ட குழு கழுதை பால் விற்பனை செய்து கொண்டிருந்தனர் .

    "நாங்கள் ஒரு கப் (25 மில்லி) புதிய கழுதைப்பாலை ரூ.200-க்கு விற்கிறோம். ஒரு லிட்டர் ரூ.8,000-க்கு மொத்தமாக விற்கிறோம். ரூ.1,000 தள்ளுபடி தரலாம். ஒரு கழுதை ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் பால் கொடுக்க முடியும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஒரு நாளைக்கு சுமார் ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை சம்பாதிக்கிறோம். நாங்கள் வழக்கமாக குளிர்காலம் மற்றும் மழைக்காலங்களில் வணிகத்திற்காக விசாகப்பட்டினம் போன்ற நகரங்களுக்கு வருவோம்," என்றனர்.

    விசாகப்பட்டினத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் கழுதைப்பாலின் மருத்துவ குணம் பற்றி கேள்விப்பட்டு 75 மில்லி கழுதைப்பாலை வாங்கியதாக கூறினார்.

    "இங்கே கழுதையிலிருந்து புதிதாகப் பால் கறந்த பச்சைப் பாலை அந்த இடத்திலேயே குடித்து திருப்தியடைந்தேன். விற்பனையாளரிடம் ரூ.500 டிஜிட்டல் பேமெண்ட் செலுத்தினேன்" என்றார்.

    • குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த கழுதைப் பால் கொடுப்பது நல்லது என தகவல் பரவி வருகிறது.
    • கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குமரி மாவட்டம் வந்தோம். தற்போது கழுதைப் பால் விற்பனை அதிகரித்துள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டு வருகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் சளித் தொல்லையால் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இதனால் பலரும் மருந்து உட்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த கழுதைப் பால் கொடுப்பது நல்லது என தகவல் பரவி வருகிறது.

    இதன் காரணமாக மாவட்டத்தில் கழுதைப் பாலுக்கு கிராக்கி ஏற்பட்டு உள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள தொழுதூர் கிராமங்களை சேர்ந்த சிலர் ஊர் ஊராகச் சென்று கழுதைப் பால் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பூதப்பாண்டி, அழகிய பாண்டியபுரம், எட்டாமடை பகுதிகளில் அவர்கள் வீதி வீதியாக கழுதைகளை அழைத்துச் சென்று பால் விற்று வருகின்றனர். ஒரு சங்கு பால் ரூ.100-க்கு விற்கப்படுகிறது.

    இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குமரி மாவட்டம் வந்தோம். தற்போது கழுதைப் பால் விற்பனை அதிகரித்துள்ளது. மக்களின் தேவைக்கு ஏற்ப எங்களால் கொடுக்க முடியவில்லை என்றனர்.

    • ஈரோட்டில் கடந்த சில நாட்களாக கழுதை பால் வியாபாரம் அமோகமாக நடந்து வருகிறது.
    • ஈரோடு ராமமூர்த்தி நகர் கிருஷ்ணம்பாளையம் கருங்கல்பாளையம் பகுதிகளில் இன்று மக்கள் போட்டி போட்டு கழுதைப் பாலை வாங்கி சென்றனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் சமீப காலமாக பருவநிலை மாற்றம் காரணமாக சளி, இருமல் தொல்லை அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக குழந்தைகளுக்கு அதிக அளவில் சளி, இருமல் இருந்து வருகிறது. மருத்துவமனைகளிலும் சளி, இருமல் பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் ஈரோட்டில் கடந்த சில நாட்களாக கழுதை பால் வியாபாரம் அமோகமாக நடந்து வருகிறது.

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி (55) என்பவர் கழுதையை ஓட்டி வந்து கழுதை பால் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கழுதை பால் சளி, இருமல், மஞ்சள் காமாலைக்கு சிறந்த மருந்தாக இருப்பதால் மக்கள் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர்.

    ஈரோடு ராமமூர்த்தி நகர் கிருஷ்ணம்பாளையம் கருங்கல்பாளையம் பகுதிகளில் இன்று மக்கள் போட்டி போட்டு கழுதைப் பாலை வாங்கி சென்றனர்.

    பொதுவாக கழுதை பால் மருத்துவம் குணம் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாக இருப்பதால் மக்களை விரும்பி கழுதை பாலை வாங்கி குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர்.

    இது குறித்து முத்துசாமி கூறும் போது,

    நான் 20 வருடத்திற்கும் மேலாக கழுதை பால் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். பொதுவாக கழுதை பால் நோய் எதிர்ப்பு சக்தி மருத்துவ குணம் கொண்டதாக இருப்பதால் மக்கள் அதனை விரும்பி வாங்கி அருந்துகின்றனர்.

    ஒரு சின்ன சங்கு பால் ரூ.50 -க்கு விற்பனை செய்கிறேன். இதேப்போல் 50 மில்லி கழுதை பால் ரூ.250-க்கு விற்பனை செய்கிறேன். மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

    • கழுதை பால் விற்பனை செய்வதன் மூலம் எங்களுக்கு தினமும் ரூ.1000 முதல் ரூ.1200 வரை வருமானம் கிடைக்கும்.
    • பெரியவர்கள் கழுதை பால் குடிப்பதால் வாய் புண், வயிற்றுப் புண் குணமாகும். ஜீரண சக்தி அதிகரிக்கும்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் குகை, தாதகாப்பட்டி, லைன்மேடு, அன்னதானப்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் கழுதை பால் கூவி கூவி விற்கப்பட்டு வருகிறது. மருத்துவ குணங்கள் கொண்டது என்ற நம்பிக்கையில் கழுதை பால் வாங்கி குடிக்க பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

    கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கழுதை பால் விற்பனை செய்து வருகிறார்கள். 1 சங்கு கழுதை பால் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மருத்துவ குணங்கள் நிறைந்தது என்பதால் பலரும் ஆர்வமுடன் கழுதை பால் வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்தனர்.

    நாங்கள் 3 தலைமுறைகளாக இந்த தொழிலைச் செய்து வருகிறோம். இதற்காக ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து கழுதைகளை வாங்கி வருகிறோம். குட்டி ஈன்ற 6 மாதங்கள் வரை, கழுதைகளிடம் இருந்து பால் கிடைக்கும். ஒரு கழுதையின் விலை அளவைப் பொறுத்து ரூ.8000 முதல் ரூ.16,000 வரை ஆகும். பால் நின்றவுடன் தோராயமாக ரூ.5000-க்கு வாங்கியவர்களிடமே கழுதையை திரும்ப விற்று விடுவோம். அவர்கள் அந்த கழுதையை இனச்சேர்க்கைக்கு அனுப்பி வைத்து, கர்ப்பம் தரித்து, 12 மாதங்கள் கழித்து, புதிதாக குட்டி ஈன்ற பின்பு, மீண்டும் எங்களை போன்ற கழுதை பால் வியாபாரிகளுக்கு கழுதைகளை விற்பனை செய்து விடுவார்கள்.

    கழுதை பால் குடிப்பதால் குழந்தைகளுக்கு சளி, தோஷ, மாந்திரீக பிரச்சனைகளுக்கு கழுதை பால் உகந்தது. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். பெரியவர்கள் கழுதை பால் குடிப்பதால் வாய் புண், வயிற்றுப் புண் குணமாகும். ஜீரண சக்தி அதிகரிக்கும். 12 மணி நேரம் வரை கழுதை பால் கெடாமல் இருக்கும்.

    கழுதை பால் விற்பனை செய்வதன் மூலம் எங்களுக்கு தினமும் ரூ.1000 முதல் ரூ.1200 வரை வருமானம் கிடைக்கும். இது ஒரு சீசன், நாடோடி தொழிலாகும். இந்த வேலை இல்லாத சமயத்தில் கிடைக்கும் கூலி வேலைக்கு செல்வோம். எங்கும் குல தெய்வங்களாக இந்த கழுதைகளை நாங்கள் கருதுகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×