search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கக்கோரி தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்
    X

    அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கக்கோரி தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்

    • தி‌.மு.க அரசு தேர்தல் வாக்குறுதி படி அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்க வேண்டும்.
    • Demonstration, Various Demands ஆர்ப்பாட்டம், பல்வேறு கோரிக்கை

    தஞ்சாவூர்:

    தஞ்சை ரெயிலடியில் இன்று தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாநிலத் துணைச் செயலாளர் பார்த்தசாரதி தலைமை வகித்தார்.

    தஞ்சை மாநகர மாவட்ட செயலாளர் டாக்டர் இராமநாதன், குடந்தை மாநகர மாவட்ட செயலாளர் சங்கர், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் பழனிவேல், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க அரசு தேர்தல் வாக்குறுதி படி அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்க வேண்டும்.

    காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு உடனே வழங்க வேண்டும் , விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மேலும் விளைநிலங்களை அழித்து வரும் என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்தும் கோஷமிட்டனர்.

    மேலும் விலை உயர்வை கண்டித்து காய்கறி மாலை அணிந்திருந்தனர்.

    இதில் உயர்மட்ட குழு உறுப்பினர் முகமது அலி, மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் பூபேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள், பெண்கள் அணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×