search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜம்மு காஷ்மீரில் நடந்த  போட்டியில் தருமபுரி மாணவர்கள் சாதனை
    X

    ஜம்மு காஷ்மீரில் நடந்த போட்டியில் தருமபுரி மாணவர்கள் சாதனை

    • ஐஸ் ஹாக்கி விளையாட்டு போட்டியில் ஒன்பது வெள்ளி பதங்களை வென்றுள்ளனர்.
    • சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தருமபுரி,

    ஜம்மு காஷ்மீரில் நடந்த கேலோ இந்தியா குளிர் கால விளையாட்டு போட்டியில் 14 பதக்கங்கள் பெற்று தமிழ்நாடு இரண்டாம் இடம் பிடித்தது. ஐஸ் ஹாக்கி விளையாட்டு போட்டியில் ஒன்பது வெள்ளி பதங்களை வென்றுள்ளனர்.

    இதில் தருமபுரி மாவட்டத்தில் இருந்து 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் நேஷந்த். ரகுராம், டேரன் ஜோஸ், ஓம் உலகநாதன்,கௌதம் ,ஆகியோர் கலந்து கொண்டு விளையாடினர்.

    மேலும் 20 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் தருமபுரி முகமது அப்ரித், லோகேஷ், சென்னை யை சேர்ந்த வெங்கடேசன், ராம்குமார், யோகேஸ்வரன், ஜீவா ,கோகுல், அபிஷேக் திருச்சியை சேர்ந்த மகேஷ்வரி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி தேசிய அளவில் கேலோ இந்தியாவில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் பெற்றனர்.

    பரிசுகளை பெற்று கொண்டு வீடு திரும்பிய விளையாட்டு வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இவர்களை மேலும் ஊக்குவித்தால் இமாலய சாதனை படைப்பார்கள். இவர்களை தமிழ்நாடு மாநில செயலாளர் பூஞ்சோலை மற்றும் தருமபுரி மாவட்ட செயலாளர் சந்திரமோகன் மாஸ்டர் சீனிவாசன் ஆகியோரும் வாழ்த்தி பாராட்டினர்.

    Next Story
    ×