search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி மாவட்டத்தில் 4.66 லட்சம் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்
    X

    தருமபுரி மாவட்டத்தில் 4.66 லட்சம் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்

    • 1077 நியாயவிலைக் கடைகளில் இப்பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
    • 4,66,594 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் 2023 சிறப்பு பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் பயன்பாட்டில் உள்ள 4,65,867 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 727 குடும்பங்களுக்கும் என மொத்தம் 4,66,594 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் 2023 சிறப்பு பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளதாவது:-

    தருமபுரி மாவட்டத்தில் 9.1.2023 அன்று முதல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு 2023 வழங்கிட விரிவான ஏற்பாடு செய்யப்பட்டு, தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் 463 முழுநேர நியாயவிலைக் கடைகளும், 572 பகுதிநேர நியாயவிலைக் கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் 42 நியாயவிலைக் கடைகளும் ஆக மொத்தம் 1077 நியாயவிலைக் கடைகளில் இப்பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

    தருமபுரி மாவட்டத்தில் புழக்கத்தில் உள்ள 4,65,867 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 727 குடும்பங்களுக்கும் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டது.

    மேலும், தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டத்தில் 74,368 குடும்ப அட்டைதாரர்களுக்கும், நல்லம்பள்ளி வட்டத்தில் 59,242 குடும்ப அட்டைதாரர்களுக்கும், பாலக்கோடு வட்டத்தில் 67,297 குடும்ப அட்டைதாரர்களுக்கும், காரிமங்கலம் வட்டத்தில் 52,673 குடும்ப அட்டைதாரர்களுக்கும், பென்னாகரம் வட்டத்தில் 73,455 குடும்ப அட்டைதாரர்களுக்கும், அரூர் வட்டத்தில் 61,082 குடும்ப அட்டைதாரர்களுக்கும், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் 78,477 குடும்ப அட்டைதாரர்களுக்கும் என தருமபுரி மாவட்டத்தில் 4,66,594 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடிட வேட்டி - சேலை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ரூ.1000- ரொக்கம் அடங்கிய பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×