search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெங்கு விழிப்புணர்வு முகாம்
    X

    டெங்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

    டெங்கு விழிப்புணர்வு முகாம்

    • டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் பற்றி எடுத்துரைத்தார்.
    • டெங்கு விழிப்புணர்வு கருத்துக்களை கேட்டறிந்து அனைவரும் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    திருவையாறு:

    திருவையாறு காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடுக்காவேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

    இம்முகாமிற்கு பள்ளித் தலைமையாசிரியை ஹேமலதா தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவ அலுவலர் தையல்நாயகி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவிகளிடையே டெங்கு கொசுக்களினால் டெங்கு காய்ச்சல் உருவாகும் விதம் பற்றியும், டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் பற்றியும் எடுத்துரைத்தார்.

    இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சதாசிவம், பூச்சியியல் நிபுணர் மாயவன் மற்றும் சுகாதார ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவிகளுக்கு டெங்கு விழிப்புணர்வு கருத்துக்களை விவரித்தார்.

    பள்ளி ஆசிரியைகள் கண்மணி, ராதிகா மற்றும் திரளான மாணவிகள் கலந்துகொண்டு டெங்கு விழிப்புணர்வு கருத்துக்களை கேட்டறிந்து, விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள். இதற்கான ஏற்பாடுகளை நடுக்காவேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×