என் மலர்tooltip icon

    கடலூர்

    வாகன சோதனையின் போது போலீசாரின் கண்முன்பு தொழிலாளி பிளேடால் கழுத்தை அறுத்து கொண்ட சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கடலூர்:

    சென்னை ஆட்டுத்தொட்டி பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 21). இவர் கடலூரில் உள்ள தனியார் உணவு விடுதியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    கார்த்திகேயனும், கடலூரை அடுத்த பில்லாளிதொட்டியைச் சேர்ந்த அவரது நண்பர் இளையராஜா (23) என்பவரும் நேற்று மாலையில் மோட்டார் சைக்கிளில் புதுவைக்கு சென்றனர். அங்கு இருவரும் மது குடித்து விட்டு இரவில் கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை இளையராஜா ஓட்டி வந்தார்.

    கடலூர் மஞ்சக்குப்பம் தபால் நிலைய பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் போக்குவரத்து போலீசார் வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தனர்.

    கார்த்திகேயன், இளையராஜா ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிளையும் போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது 2 பேரும் மது அருந்தி இருந்தது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து இளையராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து போக்குவரத்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று நிறுத்தினர்.

    மோட்டார் சைக்கிளை திருப்பி தரும்படி இளைய ராஜாவும், கார்த்திகேயனும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளை கொடுக்கும்படி வற்புறுத்தினர். ஆனால், போலீசார் கொடுக்க மறுத்தனர்.

    அப்போது கார்த்திகேயன் கோபம் அடைந்து திடீரென்று தன்னிடம் இருந்த பிளேடால் கழுத்தை அறுத்தார். இதில் அவரது கழுத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. இதை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக கடலூர் புதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லிக்குப்பம் அருகே பா.ம.க. மாநாட்டுக்கு சென்ற வேனின் கண்ணாடி உடைத்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நெல்லிக்குப்பம்:

    விழுப்புரத்தில் பா.ம.க. சமூகநீதி மாநாடு நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நேற்று நடந்தது. இதற்கு கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் வில்லியா நல்லூர் பகுதியில் இருந்து பா.ம.க.வினர் வேனில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஒரு கும்பல் அந்த வேனை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களால் வேனின் முன்பக்கம் மற்றும் பின்பக்க கண்ணாடிகளை அடித்து உடைத்தனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த பா.ம.க.வினர் வேனில் இருந்து கீழே இறங்கி அவர்களை பிடிக்க ஓடினர். ஆனால், அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் வேனை தாக்கி தப்பி ஓட முயன்ற 3 பேரை பிடித்தனர். பின்னர் போலீசார் பா.ம.க.வினரை சமாதானம் செய்தனர்.

    இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த 3 நபர்கள் யார்? எதற்காக வேனின் கண்ணாடிகளை உடைத்தனர்? என்று விசாரணை நடந்து வருகிறது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    நீட்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாணவி அனிதாவின் சாவுக்கு நீதி கேட்டும் 8 மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கல்லூரி மாணவர்கள் கடந்த சில நாட்களாக நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்றும் அவர்கள் போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர். மாணவர்களின் போராட்டத்துக்கு கல்லூரி முதல்வர் அனுமதி அளிக்கவில்லை.

    இதனை தொடர்ந்து கல்லூரி முதல்வரை கண்டித்தும், நீட்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாணவி அனிதாவின் சாவுக்கு நீதி கேட்டும் இன்று 8 மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள பெரியார் சிலை முன்பு அமர்ந்து தொடர் உண்ணாவிரதம் இருந்தனர்.
    நெய்வேலி அருகே என்ஜினீயரை கத்தியால் குத்திக்கொன்ற விவசாயி கைது செய்யப்பட்டார்.
    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த மந்தாரக்குப்பம் மேல்பாப்பனாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சிவபாலன் (வயது 22). என்ஜினீயர். அதே பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 33), விவசாயி.

    ராமச்சந்திரனின் தங்கை செந்தமிழ் செல்வி (28). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த செந்தில்முருகன் (30) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    கடந்த சில மாதங்களாக கணவன்- மனைவிக்கிடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. இதை அறிந்த ராமச்சந்திரன் தங்கை செந்தமிழ் செல்வி வீட்டுக்கு சென்றார்.

    வீட்டில் இருந்த செந்தில் முருகனிடம் எனது தங்கையை காதலித்து திருமணம் செய்து கொண்டு இப்போது ஏன் தகராறு செய்கிறாய் என கண்டித்தார். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த சத்தம்கேட்டு செந்தில் முருகனின் உறவினரான என்ஜினீயர் சிவபாலன் அங்கு சென்றார்.

    செந்தில் முருகனுக்கு ஆதரவாக அவர் ராமச்சந்திரனிடம் வாக்குவாதம் செய்தார். இதில் ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன் தன் சட்டைப்பையில் வைத்திருந்த கத்தியால் என்ஜினீயர் சிவபாலனை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த சிவபாலன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனே ராமச்சந்திரன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    வீட்டில் இருந்தவர்கள் சிவபாலனை மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிவபாலன் ஏற்கனவே இறந்தவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து மந்தாரக்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமச்சந்திரனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    தாய்-தந்தை தற்கொலை செய்து கொண்ட உடலை பார்த்து அவர்களது மகள்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் அந்த பகுதியையே பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
    கடலூர்:

    கடலூர் முதுநகர் மணக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 35) கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சீத்தாலட்சுமி (30). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று இரவு வெங்கடேசன், அவரது மனைவி மற்றும் மகள்கள் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவில் வெங்கடேசனும், அவரது மனைவி சீத்தாலட்சுமியும் கண் விழித்து எழுந்தனர். வீட்டில் வைத்திருந்த வி‌ஷத்தை எடுத்து வெங்கடேசன் திடீரென குடித்தார்.

    சிறிது நேரத்தில் வெங்கடேசன் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சீத்தாலட்சுமி கதறி அழுதார். பின்னர் அவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் சேலையால் சீத்தாலட்சுமி தூக்குப்போட்டார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்த 3 குழந்தைகளும் கண் விழித்தனர். வெளியே ஓடி வந்து தாயாரை காப்பாற்றுமாறு கூக்குரலிட்டனர்.

    சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர் சீத்தாலட்சுமியை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் அங்கு சீத்தாலட்சுமி பரிதாபமாக இறந்தார்.

    கணவன்-மனைவி தற்கொலை செய்தது குறித்து முதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மணக்குப்பம் பகுதிக்கு விரைந்து வந்தனர்.

    போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக வெங்கடேசனும், அவரது மனைவி சீத்தாலட்சுமியும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தற்கொலை செய்து கொண்ட தாய்-தந்தை உடலை பார்த்து அவர்களது மகள்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் அந்த பகுதியையே பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    பண்ருட்டி அருகே வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கற்பழித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே உள்ள எனதிரிமங்கலம் இருளர் குடியிருப்பை சேர்ந்தவர் குமார். கரும்பு வெட்டும் கூலி தொழிலாளி இவரது மகள் புஷ்பா தேவி. இவரது பெற்றோர்கள் கடந்த டிசம்பர் மாதம் கரும்பு வெட்டும் வேலைக்கு தஞ்சாவூருக்கு சென்று இருந்தனர்.

    அப்போது வீட்டில் புஷ்பா தேவி தனியாக இருந்தார். இதைஅறிந்த பக்கத்து ஊரான கொரத்தி கிராமத்தை சேர்ந்த வாலிபர் விஜயகுமார் இரவு 10 மணியளவில் வீட்டிற்குள் புகுந்தார். அங்கிருந்த புஷ்பா தேவியை வலுக்கட்டாயமாக கற்பழித்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

    வெளியூருக்கு வேலைக்கு சென்று ஊர் திரும்பிய பெற்றோர்களிடம் புஷ்பா தேவி கூறினார். இது குறித்து பண்ருட்டி மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    பண்ருட்டி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி நாகரத்தினம் வழக்கு பதிவு செய்து வாலிபர் விஜயகுமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றார்.

    நெய்வேலி அருகே பெண் கடத்தப்பட்டதாக கூறிய புகாரில் விவசாயியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நெய்வேலி:

    நெய்வேலியை அடுத்த தென்குத்து புதுநகர் பகுதியை சேர்ந்தவர் கேசவ பெருமாள். விவாயி. இவரது மகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாயமானார்.

    தனது மகளை அதே பகுதியை சேர்ந்த பூவராகவ சாமி என்பவர் கடத்தி சென்று விட்டார் என்று போலீசில் கேசவபெருமாள் புகார் செய்தார்.

    இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி அன்று கேசவ பெருமாளின் மகள் நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் நிலையத்துக்கு வந்தார்.

    அங்கு போலீசாரிடம், என்னை யாரும் கடத்தி செல்லவில்லை. எனது தோழிகளின் வீட்டுக்குதான் சென்று இருந்தேன் என்று கூறினார்.

    உடனே அவரது தந்தையான கேசவபெருமாளை போலீசார் அழைத்து அவருடன் மகளை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையறிந்த பூவராகவசாமி உறவினர்களான ஏழுமலை, கலா, தமிழ்ச் செல்வி, மாலதி, காயத்ரி, பாலாஜி, ராணி ஆகியோர் ஆத்திரம் அடைந்தனர். உடனே அவர்கள் நேற்று கேசவபெருமாளின் வீட்டுக்கு சென்று, ஏன் எங்களது உறவினர் மீது பொய் புகார் கொடுத்தாய்? என்று கூறி அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இது குறித்து கேசவபெருமாள் நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் அவர்கள் 7 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலை, கலா, தமிழ்ச்செல்வன், மாலதி ஆகிய 4 பேரை கைது செய்தனர். காயத்ரி, பாலாஜி, ராணி ஆகிய 3 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.
    பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலும் நடைபெறும் சூழ்நிலை உருவாகும் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பா.ம.க. பிரமுகர் திருமணம் இன்று நடந்தது. இதில் கலந்து கொண்ட பட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி செயலாளரும், நாடளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

    தமிழகத்தில் ஜனநாயக முறைப்படி ஆட்சி நடை பெறவில்லை. ஜனநாயகத்துக்கு எதிரான ஆட்சி நடைபெறுகிறது. 19 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை வாபஸ் பெற்ற நிலையில் தமிழக அரசு தனது மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டிருக்க வேண்டும். அதுபோல் செய்யாதது ஜனநாயகத்துக்கு எதிரான செயலாகும்.

    அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படாத வரை உள்ளாட்சி தேர்தலை நடத்த மாட்டார்கள். பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலும் நடைபெறும் சூழ்நிலை உருவாகும்.

    சிதம்பரம் அண்ணா மலை பல்கலைக்கழகத்தில் மருத்துவ மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களின் கோரிக்கையான அரசு கட்டணத்தை அமுல்படுத்த தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்களுக்கு மாதாந்திர சம்பளம் வழங்க முடியாத சூழ்நிலை உள்ளது. மொத்தத்தில் தமிழக அரசு ஒரு செயல்படாத அரசாக உள்ளது. தமிழகத்தில் தேக்கமான மந்தநிலையே நிலவி வருகிறது.

    தமிழகத்தில் தினம் தினம் மக்கள் அவதிக்குள்ளாகிறார்கள். இந்த நிலைக்கு மக்கள்தான் காரணம். 50 ஆண்டு காலம் திராவிட கட்சிகளுக்கு வாக்கு அளித்த நீங்கள் வெறும் சின்னத்தை மட்டுமே பார்த்து வாக்களித்தீர்கள். வரும் காலங்களிலாவது எங்களது திட்டங்களை படித்து பார்த்து பட்டாளி மக்கள் கட்சிக்கு வாக்களித்து 5 ஆண்டு காலம் வாய்ப்பு தாருங்கள்.

    தமிழகத்தில் 50 ஆண்டு காலம் நடைபெற்ற ஊழலுடன் கூடிய மலிவான ஆட்சியை மாற்றி வளர்ச்சிப் பாதைக்கு தமிழகத்தை கொண்டு செல்வோம். தமிழகத்தில் ஒரு கோடியே 40 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கின்றனர்.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவோம். கடலூர் மாவட்ட டெல்டா பாசன விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலை நிலவி வருகிறது.

    கடலூர், நாகை மாவட்டங்களில் 45 கிராமங்களில் பெட்ரோலிய கெமிக்கல் திட்டம் அமுல்படுத்தப்படும் நிலையில் உள்ளது. இதற்காக 57 ஏக்கர் நிலங்கள் பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதை பா.ம.க. கடுமையாக எதிர்க்கும்.

    அதேபோல் வெகுவிரைவில் ஓ.என்.சி. நிறுவனத்தை இந்த மாவட்டத்தில் இருந்து அப்புறப்படுத்துவோம்.

    அப்போதைய மத்திய அரசு நீட் தேர்வு கொண்டு வர முயற்சி செய்தது. அதனை நான் மத்திய அமைச்சராக இருந்த போது பா.ம.க. சார்பில் எதிர்ப்பு தெரிவித்தேன். தற்போது மத்திய பா.ஜ.க. அரசு நீட் தேர்வை கொண்டு வந்த போதும் பா.ம.க.தான் முதலில் எதிர்ப்பு தெரிவித்தது. நீட் தேர்வுக்கு எதிராக பா.ம.க.வின் போராட்டம் கண்டிப்பாக நடைபெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கடலூரில் அழகு நிலையத்துக்கு வேலைக்கு சென்ற இளம்பெண் மாயமானது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
    கடலூர்:

    கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரதுமகள் தாரணி (வயது21). இவர் அதே பகுதியில் உள்ள அழகு நிலையத்தில் வேலைபார்த்து வந்தார். நேற்று காலை தாரணி வழக்கம்போல் வேலைக்கு சென்றார்

    அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் கவலை அடைந்த பெற்றோர் மகளை பல இடங்களில் தேடினர். எங்கும் அவரை காணவில்லை. இதனை தொடர்ந்து தாரணியின் தாயார் விஜயா முதுநகர் போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவுசெய்து இளம் பெண் தாரணி எங்கு சென்றார். அல்லது அவரை யாராவது கடத்தி சென்றுவிட்டார்களா? என தேடி வருகிறார்கள்.
    நெய்வேலியில் தோழி வீட்டுக்கு சென்ற பட்டதாரி பெண்கள் 2 பேர் மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் 2 பெண்களை தேடி வருகிறார்கள்.
    நெய்வேலி:

    நெய்வேலி மந்தாரக்குப்பம் சிவாஜி நகரை சேர்ந்தவர் மோகன்தாஸ். இவரது மகள் மதுமதி (வயது 24). இவரின் உறவினர் சங்கீதா (29). இவர்கள் இருவரும் பட்டதாரி ஆவார்கள்.

    சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் வடலூரில் உள்ள தனது தோழிகள் வீட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்றனர்.

    ஆனால் அவர்கள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவர்களை பல இடங்களில் தேடியும் காணவில்லை.

    இது குறித்து மதுமதியின் சகோதரர் ராஜா நெய்வேலி மந்தாரக்குப்பம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 2 பட்டதாரி பெண்களை தேடி வருகிறார்கள். நெய்வேலியில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு 3 இளம்பெண்கள் ஒரே நாளில் மாயமாகினர். அதேபோல் இப்போதும் 2 பட்டதாரி பெண்கள் மாயமாகி உள்ளனர்.

    தொடர்ந்து இளம்பெண்கள் மாயமாகி வரும் சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சிதம்பரம் அருகே குடிபோதையில் வீட்டுக்குள் புகுந்து பெண்ணிடம் சில்மிஷம் செய்த போலீஸ்காரரை பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கடலூர்:

    சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவர் கடலூர் மஞ்சக்குப்பத்தில் வசிக்கிறார். நேற்று இரவில் அவர் புதுவைக்கு சென்று மது குடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் கடலூர் ஆல்பேட்டைக்கு வந்தார்.

    குடிபோதையில் அங்கு வந்த அவர் அங்குள்ள ஒரு குடிசை வீட்டுக்குள் புகுந்தார். அங்கு இருந்த பெண்ணிடம் அவர் சில்மி‌ஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் அதிர்ச்சியில் கூச்சலிட்டார். உடனே தெருவில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்து போலீஸ்காரரை மடக்கி பிடித்தனர். ஆத்திரத்தில் அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.

    தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸ்காரர்கள் அவரை மீட்டு சோதனைச்சாவடிக்கு அழைத்து வந்து அமர வைத்தனர்.

    குடிபோதையில் வீட்டுக்குள் புகுந்த போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சோதனைச்சாவடியை முற்றுகையிட்டு, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடலூர்-புதுவை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு புதுநகர் இன்ஸ்பெக்டர் சரவணன் விரைந்து வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினார். பின்னர் சம்பந்தப்பட்ட போலீஸ்காரரை புதுநகர் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். இதன்பிறகே பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
    கடலூரில் குடிபோதையில் வீடு புகுந்து பெண்ணிடம் சில்மி‌ஷம் செய்த போலீஸ்காரர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
    கடலூர்:

    கடலூர் மஞ்சகுப்பத்தை சேர்ந்தவர் விஜயவர்மன். இவர் கிள்ளை காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடலூர் ஆல்பேட்டை சோதனைசாவடியில் நேற்று பணியில் இருந்தார்.

    இந்த நிலையில் குடிபோதையில் இருந்த விஜயவர்மன் அருகே உள்ள வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த பெண்ணிடம் சில்மி‌ஷம் செய்து தவறாக நடக்க முயன்றார். அப்போது அந்த பெண் கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் திரண்டுவந்தனர். அவர்கள் விஜயவர்மனை பிடித்து சோதனை சாவடியில் பணியில் இருந்த மற்ற போலீசாரிடம் ஒப்படைக்க சென்றனர். அப்போது பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சோதனை சாவடி அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து விஜயவர்மனை புதுநகர் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    இந்தநிலையில் குடிபோதையில் பெண்ணிடம் சில்மி‌ஷம் செய்து தவறாக நடக்க முயன்ற போலீஸ்காரர் விஜயவர்மனை சஸ்பெண்டுசெய்து போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் அதிரடி உத்தரவிட்டார். மேலும் சம்பவம் குறித்து தகவல் அறிந்து காலதாமதமாக சென்ற துணை போலீஸ் சூப்பிரண்டு நரசிம்மன், புதுநகர் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோரின் வாகனங்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக காலதாமதமாக தகவல் தெரிவித்த தனிப்பிரிவு தலைமை ஏட்டு சுப்பிரமணியன் ஆயுதபடைக்கு மாற்றப்பட்டார்.
    ×