search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம்
    X

    நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம்

    நீட்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாணவி அனிதாவின் சாவுக்கு நீதி கேட்டும் 8 மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கல்லூரி மாணவர்கள் கடந்த சில நாட்களாக நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்றும் அவர்கள் போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர். மாணவர்களின் போராட்டத்துக்கு கல்லூரி முதல்வர் அனுமதி அளிக்கவில்லை.

    இதனை தொடர்ந்து கல்லூரி முதல்வரை கண்டித்தும், நீட்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாணவி அனிதாவின் சாவுக்கு நீதி கேட்டும் இன்று 8 மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள பெரியார் சிலை முன்பு அமர்ந்து தொடர் உண்ணாவிரதம் இருந்தனர்.
    Next Story
    ×