search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ்காரர் சஸ்பெண்டு"

    • போலீஸ்காரரின் தொல்லையால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் இதுபற்றி தனது கணவரிடம் தெரிவித்தார்.
    • இளம்பெண்ணின் கணவருக்கும், போலீஸ்காரருக்கும் கடும் மோதல் ஏற்பட்டது.

    பெரம்பூர்:

    செம்பியம் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் வினோத்குமார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரம்பூரை சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவர் நிலம் தொடர்பாக புகார் தெரிவிக்க செம்பியம் போலீஸ் நிலையத்துக்கு சென்றார்.

    இந்த புகாரை ஆரம்பத்தில் போலீஸ்காரர் வினோத்குமார் விசாரித்ததாக தெரிகிறது. அப்போது இளம்பெண்ணின் செல்போனை பெற்ற அவர் அடிக்கடி உருக உருக மெசேஜ் அனுப்ப தொடங்கினார்.

    காலையில் குட்மார்னிங், இரவில் குட்நைட் என நீண்ட இந்த மெசேஜ் நாளடைவில் பாலியல் ரீதியாக மாறியது.

    போலீஸ்காரரின் தொல்லையால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் இதுபற்றி தனது கணவரிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவர் போலீஸ்காரர் வினோத்குமாரை கண்டித்ததாக தெரிகிறது.

    எனினும் இதனை போலீஸ்காரர் வினோத்குமார் கண்டுகொள்ளாமல் இளம்பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் ரீதியான குறுஞ்செய்திகளை தொடர்ந்து அனுப்பி வந்தார். இதனால் இளம்பெண் போலீஸ்காரரின் மெசேஜ் மற்றும் போன்களுக்கு பதில் அளிப்பதை நிறுத்தினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த போலீஸ்காரர் வினோத்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்று ரகளையில் ஈடுபட்டார்.

    இதனால் இளம்பெண்ணின் கணவருக்கும், போலீஸ்காரருக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. பின்னர் போலீஸ்காரர் வினோத்குமார் அங்கிருந்து சென்று விட்டார்.

    இதுகுறித்து இளம்பெண்ணின் கணவர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி இளம்பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த போலீஸ்காரர் வினோத்குமாரை சஸ்பெண்டு செய்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சம்பவத்தன்று இரவு புஷ்பேந்திரா அனுமன்கஞ்ச் பகுதி வழியாக சென்ற போது, சாலையில் நடந்து சென்ற தனது தோழியை கண்டுள்ளார்.
    • தோழி குடிபோதையில் இருந்ததாகவும், அவரால் சரியாக நடக்க முடியாமல் இருந்ததாகவும் போலீஸ்காரர் கூறினார்.

    போபால்:

    மத்தியபிரதேச தலைநகர் போபால் பகுதியை சேர்ந்தவர் புஷ்பேந்திரா. போலீஸ்காரரான இவர் மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருக்கும் ஒரு பெண்ணை கையை பிடித்து இழுப்பது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

    இதையடுத்து சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து கூடுதல் துணைபோலீஸ் கமிஷனர் ராம் சினேகி மிஸ்ரா கூறுகையில், வீடியோவில் உள்ள பெண் போலீஸ்காரர் புஷ்பேந்திராவின் தோழி ஆவார்.

    சம்பவத்தன்று இரவு புஷ்பேந்திரா அனுமன்கஞ்ச் பகுதி வழியாக சென்ற போது, சாலையில் நடந்து சென்ற தனது தோழியை கண்டுள்ளார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாகவும், அவரால் சரியாக நடக்க முடியாமல் இருந்ததாகவும் போலீஸ்காரர் கூறினார்.

    எனவே அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக அந்த பெண்ணை அவரது வீட்டில் இறக்கிவிட முன்வந்ததாகவும் அதற்கு அந்த பெண் ஒப்புக்கொள்ளாததால் அவரை பிடித்து மோட்டார் சைக்கிளில் உட்கார சொன்னதாகவும் அந்த போலீஸ்காரர் கூறினார்.

    எனினும் சம்பவம் நடந்த போது அவர் போலீஸ் சீருடையில் இருந்ததால் இதுதொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது என்றார்.

    இதற்கிடையே மத்தியபிரதேச போலீசார் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், சம்பந்தப்பட்ட போலீஸ்காரரும், வீடியோவில் உள்ள அந்த பெண்ணும் நண்பர்கள் ஆவர். சம்பவம் தொடர்பாக புகார் அளிக்க விரும்பவில்லை என அந்த பெண் எழுத்து பூர்வமாக அறிக்கை அளித்துள்ளார். எனினும் முதல்கட்டமாக போலீஸ்காரர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். அவர் மீது துறைரீதியாக விசாரணை நடந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மோட்டாா் வாகனப் பிரிவு காவலராக பணியாற்றி வருபவா் ராஜசேகா்
    • ரூ.35 லட்சம் முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூா் மாநகர காவல் நிலையத்தில் மோட்டாா் வாகனப் பிரிவு காவலராக பணியாற்றி வருபவா் ராஜசேகா் (வயது 47). இவா் மாநகர காவல் நிலையத்தில் உள்ள இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் அடித்ததில் ரசீது வழங்காமல் இருந்து வந்துள்ளாா். இந்நிலையில் இது குறித்து மாநகர காவல் ஆணையா் பிரவீண்குமாா் அபினபு ஆய்வு மேற்கொண்டதில், வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் அடித்ததாக காவலா் ராஜேசகா் ரூ.35 லட்சம் முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போலீஸ்காரர் ஆகாஷ், எஸ்.பி.யின் வீட்டில் இருந்த மின் சாதனங்களை சேதப்படுத்தியதாக புகார் பதிவு செய்யப்பட்டது.
    • போலீஸ்காரர் திருவனந்தபுரம் நகர போலீஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் போலீஸ் கட்டுப்பாட்டு பிரிவு எஸ்.பி.யாக இருப்பவர் நவநீத் சர்மா.

    இவரது வீட்டில் பாதுகாப்பு பணிக்கு ஆகாஷ் நியமிக்கப்பட்டார். சம்பவத்தன்று இவர் பணிக்கு சென்றபோது, வீட்டில் இருந்தவர்கள் எஸ்.பி.யின் வளர்ப்பு நாயை குளிப்பாட்டுமாறு கூறினர்.

    இதற்கு போலீஸ்காரர் மறுப்பு தெரிவித்தார். இது பற்றி வீட்டில் இருந்தவர்கள் எஸ்.பி.யிடம் புகார் தெரிவித்தனர்.

    இதை அறிந்ததும் போலீஸ்காரரை சஸ்பெண்டு செய்யும்படி எஸ்.பி.உத்தரவிட்டார். இதற்காக போலீஸ்காரர் ஆகாஷ், எஸ்.பி.யின் வீட்டில் இருந்த மின் சாதனங்களை சேதப்படுத்தியதாக புகார் பதிவு செய்யப்பட்டது.

    இதுபற்றி போலீஸ்காரர் ஆகாஷ், போலீஸ் டி.ஜி.பி.யிடம் புகார் செய்தார். தன்னை வேண்டுமென்றே சஸ்பெண்டு செய்திருப்பதாகவும் புகாரில் கூறியிருந்தார்.

    இந்த புகார் குறித்து விசாரிக்கும்படி டி.ஜி.பி. போலீஸ் ஐ.ஜி.க்கு உத்தரவிட்டார். அதன்பேரில் நடைபெற்ற விசாரணையில் போலீஸ்காரர் ஆகாஷ் மீது தவறு இல்லை என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீஸ்காரர் ஆகாஷை சஸ்பெண்டு செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

    பின்னர் அவர் திருவனந்தபுரம் நகர போலீஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×