என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் அடித்ததில் ரூ.35 லட்சம் முறைகேடு - திருப்பூர் போலீஸ்காரர் சஸ்பெண்டு
    X

    வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் அடித்ததில் ரூ.35 லட்சம் முறைகேடு - திருப்பூர் போலீஸ்காரர் சஸ்பெண்டு

    • மோட்டாா் வாகனப் பிரிவு காவலராக பணியாற்றி வருபவா் ராஜசேகா்
    • ரூ.35 லட்சம் முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூா் மாநகர காவல் நிலையத்தில் மோட்டாா் வாகனப் பிரிவு காவலராக பணியாற்றி வருபவா் ராஜசேகா் (வயது 47). இவா் மாநகர காவல் நிலையத்தில் உள்ள இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் அடித்ததில் ரசீது வழங்காமல் இருந்து வந்துள்ளாா். இந்நிலையில் இது குறித்து மாநகர காவல் ஆணையா் பிரவீண்குமாா் அபினபு ஆய்வு மேற்கொண்டதில், வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் அடித்ததாக காவலா் ராஜேசகா் ரூ.35 லட்சம் முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

    Next Story
    ×